India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை டிச.18ஆம் தேதி கோவை வருகை தர உள்ளார். இதற்கான ஆய்வுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கோவை வரும் அவர், திறன் மற்றும் வேலைவாய்ப்பு மையம், கிறிஸ்துமஸ் நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். பின் மக்களவை உறுப்பினர் அலுவலத்தை திறந்து வைக்கிறார்.
மேட்டுப்பாளையம் நகராட்சி நூலகம், அறிவுசார் மையம் போட்டி தேர்வுகளுக்கான 4000 புத்தகங்கள் மற்றும் கணினி வசதியுடன் இயங்கி வருகிறது. இங்கு போட்டி தேர்வுகள், பொதுத்துறை நிறுவனங்கள் நடத்தும் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் வரும் ஜன.2025 முதல் வாரத்தில் துவங்கப்பட உள்ளது. தேர்வர்கள் உரிய விண்ணப்பத்தை நூலகத்தில் பெற்று வரும் டிச.31க்குள் அனுப்ப நகராட்சி கமிஷனர் அமுதா இன்று அறிவுறுத்தியுள்ளார்.
கேரளாவில் பன்றிகளுக்கு ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் பரவி வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள கோவை மாவட்டத்தில் 30க்கும் மேற்பட்ட பன்றி பண்ணைகள் உள்ளன. பன்றிகளுக்கு தடுப்பூசி கடந்த 4 மாதங்களுக்கு முன்னேரே போடப்பட்டுள்ளது. ஆப்ரிக்கா பன்றிக்காய்ச்சல் அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை, யாரும் அச்சம் கொள்ள வேண்டாம் என கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் இன்று கூறியதாவது, ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெறும் மாநகராட்சி மேயர் தலைமையிலான, மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், நிர்வாக காரணங்களால் நாளை (17.12.2024) நடைபெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசை கண்டித்து கோவை ரயில் நிலையத்தை 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் இன்று முற்றுகையிட முயன்றனர். இதில் மத்திய அரசு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். வேளாண்மைக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் மின்சார ஒழுங்குமுறை சட்டத்தை திரும்பப் பெற வேண்டும். விவசாயிகள் பெற்ற கடன் முழுவதும் தள்ளுபடி செய்து விவசாயிகளின் தற்கொலையை தடுத்து நிறுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
1998இல் கோவையை உலுக்கிய குண்டுவெடிப்பு சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான தடை செய்யப்பட்ட அல் உம்மா இயக்கத்தின் தலைவர் பாஷா மரணம் அடைந்துள்ளார். கோவை குண்டுவெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அல் உம்மா தலைவர் பாஷாவின், உடல்நிலை மோசமாக இருந்தால் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று மாலை உயிரிழந்தார்.
கோவையில் இப்படி எல்லாம் நடக்குமா என்பது போல் ஒரு சம்பவம் நடந்துள்ளது. கோவை கணபதியில் கிருஷ்ணன் என்பவரது வீட்டில் வாடகைக்கு குடியிருப்பவர் கதவை பூட்டி விட்டு வெளியே சென்றபோது, அவரின் நகைகளை வீட்டின் உரிமையாளரே திருடி சென்றுள்ளார். வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமரவால், நகைகளை திருடிய வீட்டின் உரிமையாளர் வசமாக சிக்கியுள்ளார். அதைத் தொடர்ந்து உரிமையாளர் கிருஷ்ணன் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை விமான நிலையம் இன்று (டிச.16) வருகை தந்த தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனை, கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் ex.எம்எல்ஏ வரவேற்றார். உடன் திமுகவினர் இருந்தனர்.
தாம்பரத்திலிருந்து, கோவைக்கு சிறப்பு ரயில் அக்.11 ஆம் தேதி முதல் நவ.29 ஆம் தேதி வரையும், கோவையிலிருந்து தாம்பரத்துக்கு அக்.13 ஆம் தேதி முதல், டிச.1 ஆம் தேதி வரையும் என மொத்தம் 8 முறை இயக்கப்பட்டது. இந்நிலையில் இந்த சிறப்பு ரயில்வே சேவை வரும் 2025ம் ஆண்டு பிப்.9 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே சேலம் கோட்ட நிர்வாகம் நேற்று விடுத்த செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கோவை, உக்கடம் ரோஸ் கார்டன் அனெக்ஸ் பகுதியில் வசித்து வரும் சபீர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் கடந்த இரு நாட்களாக வெண்டிலேட்டர் சப்போர்ட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மாநகராட்சி நிர்வாகம் சுகாதார பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.