India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இன்று (டிசம்பர்.18) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கோவை குண்டுவெடிப்பு குற்றவாளி பாஷாவின் இறுதி ஊர்வலத்தை அனுமதித்து தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளது திமுக அரசு. மேலும், கோவை அமைதியாக இருப்பதை திமுக அரசு விரும்பவில்லையா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
கோவைக்கு வருகை புரிந்து உள்ள, தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, இன்று (18.12.2024) பேரூர் பட்டீஸ்வரர் சுவாமி, மருதமலை சுப்பிரமணியசாமி கோயில்களில் நடைபெற்று வரும் திருப்பணிகளை ஆய்வு செய்தார். அப்போது பேசிய அவர், பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் 10.02.2025 தேதியிலும், மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 04.04.2025 தேதியிலும் கும்பாபிஷேகம் நடைபெறும் எனத் தெரிவித்தார்.
தன்பாத்தில் இருந்து கோவைக்கு ஜனவரி 1 ஆம் தேதி காலை 10.10 மணிக்கு இயக்கவிருந்த, சிறப்பு ரயிலுக்கான (எண் 03325), ரயில் பெட்டிகள் கையிருப்பில் இல்லாததால், முழுவதுமாக ரயில் சேவை ரத்து செய்யப்படும். மறுமார்க்கமாக கோவை-தன்பாத் இடையே ஜனவரி 4ஆம் தேதி பகல் 12.55 மணிக்கு இயக்கவிருந்த சிறப்பு ரயில் சேவையும் ரத்து செய்யப்படும் என கோவை தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவையில் இருந்து தினசரி ஏராளமான அரசு மற்றும் தனியார் பஸ்கள் ராமேஸ்வரத்திற்கு இயக்கப்படுகின்றன. இதில் பெரும்பாலான பயணிகள் சிரமத்துடன் சென்று வருகின்றனர். எனவே, கோவை – மதுரை – ராமேஸ்வரம் ரயிலை இயக்க தென்னக ரயில்வே நிர்வாகம் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிணத்துக்கடவு ரயில் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
கோவைக்கு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று வருகை தர உள்ளார். இதனால், அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். இன்று பிற்பகல் 12 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு வரும் அவர் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உதவிகள் வழங்கல், திறன்மேட்பாட்டு பயிற்சி மையத்தை திறந்து வைக்கிறார். பின் கிறிஸ்துமஸ் விழா, கோவை எம்.பி அலுவலகத்தை திறந்து வைக்கிறார்.
கோவை மாவட்ட ஆட்சியர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து வகை தனியார் பள்ளிகள்/கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியப் பெருமக்களுக்கான மாவட்ட அளவிலான திருக்குறள் வினாடி வினா முதல் நிலை போட்டித் தேர்வு 21.12.2024அன்று கோவை, புலியகுளம் ரோட்டில் உள்ள கார்மல் கார்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது என்றார்.
கோவை மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
கோவை குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைவு ஏற்படுவதை குறைக்கும் பொருட்டு “வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் டி” செறிவுட்டப்பட்ட”கிரீன் மேஜிக் பிளஸ்” பாலை, கோவை ஆவின் நிர்வாகம் நாளை (18.12.2024) முதல் அறிமுகப்படுத்த உள்ளது. 450 மி.லி, அளவு கொண்ட அந்த பால் ரூ.25.00 என நிர்ணயம் செய்து விற்பனை செய்யப்படவுள்ளது என, கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி இன்று தெரிவித்துள்ளார்.
1998ல் தமிழகத்தை உலுக்கிய கோவை குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தடை செய்யப்பட்ட அல் உம்மா இயக்கத்தின் தலைவர் பாஷா நேற்று மாலை உடல்நலகுறைவால் மரணம் அடைந்தார். இந்நிலையில் Reserved armed force படையைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் கோவை உக்கடம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காக கோவை கமிஷனர் அலுவலகத்தில் தயார் நிலையில் உள்ளனர்.
மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், பாம்பாட்டி சித்தர் குகை அருகே தேன்கூடு நேற்று கலைந்து, 30க்கும் மேற்பட்ட பக்தர்களை தேனீ கொட்டியது. அருகிலிருந்தவர்கள் அளித்த தகவலின் பேரில், வனத்துறையினர் விரைந்து வந்து தேனீக்களை விரட்டினர். 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, காயமடைந்தவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
Sorry, no posts matched your criteria.