Coimbatore

News December 19, 2024

கோவை: இன்றைய இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்

image

கோவை மாவட்டத்தில், சிங்காநல்லூர், காட்டூர், சாய்பாபா காலனி, குனியமுத்தூர், உக்கடம், ஆர்.எஸ்.புரம் ஆகிய பகுதிகளில் இன்று (டிசம்பர்.19) இரவு நேர ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 டயல் செய்யலாம் என்று, கோவை மாநகர போலீசார், தங்களது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

News December 19, 2024

கோவையில் 2 நாள் வரி வசூல் முகாம்

image

கோவை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடப்பு 2024-25ஆம் நிதியாண்டின், 2ஆம் அரையாண்டு வரையில், கோவை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய, அனைத்து வரியினங்களையும், பொதுமக்கள் செலுத்துவதற்கு வரும் 21,22 ஆகிய தேதிகளில் வரி வசூல் முகாம்கள் நடைபெற உள்ளது. எனவே, இதை பயன்படுத்திக் கொள்ளுமாறு” தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 19, 2024

கோவையில் இரவு ரோந்து காவலர்களின் விவரம் 

image

கோவை மாவட்டத்தில், பெரியநாயக்கன்பாளையம், பேரூர், கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய பகுதிகளில் இன்று (டிசம்பர்.19) இரவு நேர ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 டயல் செய்யலாம் என்று, கோவை மாநகர போலீசார், தங்களது முகநூல் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளனர்.

News December 19, 2024

திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா போட்டி 

image

குமரியில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டதன் வெள்ளி விழா பள்ளி கல்வி துறை மூலம் டிச.23 முதல் 30 ஆம் தேதி வரை மாவட்ட மைய நூலகத்தில் நடைபெறுகிறது. கோவை கௌலி பிரவுன் சாலையில் உள்ள மைய நூலகத்தில் பேச்சு போட்டி, குறள் ஒப்புவித்தல் உள்ளிட்ட பல போட்டிகள் நடைபெற உள்ளன. மாவட்ட மைய நூலகத்துக்கு நேரிலோ, 0422 2543842 என்ற எண்ணை தொடர்பு கொண்டோ இன்றைக்குள் பதிவு செய்ய மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

News December 19, 2024

முதல்வர் ஸ்டாலின் நிகழ்ச்சி விவரங்கள்

image

தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்றும், நாளையும் ஈரோட்டில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளார். இந்நிலையில், அதற்கான நிகழ்ச்சி விவரம் வெளியாகியுள்ளது. இதில் இன்று காலை 11 மணிக்கு கோவை வரும் முதல்வர், பிற்பகல் 1 மணிக்கு ஈரோட்டில் உள்ள காளிங்கராயன் இல்லத்திற்கு வருகிறார். பின், பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளார். இன்று இரவு காளிங்கராயன் இல்லத்தில் தங்குகிறார்.

News December 19, 2024

தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

image

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 20ம் தேதி காலை 10 மணி முதல் நடக்கிறது. பல முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு பல்வேறு பணிக் காலியிடங்களுக்கு தேர்வு செய்ய உள்ளனர். முகாமில் கலந்து கொள்ள விரும்புவோர் www.ncs.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.

News December 19, 2024

முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவை வருகை

image

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இன்று (19-12-2024) காலை 10.00 மணியளவில், சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை விமான நிலையம் வருகை தர உள்ளார். முதலமைச்சருக்கு தமிழ்நாடு மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் வி. செந்தில்பாலாஜி தலைமையில், மாபெரும் வரவேற்பு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, கோவை மாவட்ட திமுக மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News December 19, 2024

‘நானும் ஒரு கிறிஸ்தவன் என்பதில் பெருமைப்படுகிறேன்’

image

கோவை சத்தி சாலையில் உள்ள கிறிஸ்தவ பெந்தகோஸ்தே சபை பேராலயத்தில், கிறிஸ்து பிறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, கேக் வெட்டி கொண்டாடினார். பின்னர் அவர் பேசுகையில், நானும் ஒரு கிறிஸ்தவன் என்பதில் பெருமைப்படுகிறேன். இது பல சங்கிகளை கோபப்படுத்தும். அனைத்து மதங்களும் அடிப்படையில் அன்பை தான் போதிக்கின்றன என்றார்.

News December 18, 2024

கோவை: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம் 

image

கோவை மாவட்டத்தில் இன்று (18.12.2024) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News December 18, 2024

ஒரே சீப்பில் 60 வாழைப்பழங்கள்: மக்கள் ஆச்சரியம் 

image

கோவை: சிறுமுகை ரேயான் நகரை சேர்ந்தவர் முன்னாள் பேரூராட்சி செயல் அலுவலர் கந்தசாமி. இவரது மனைவி வெள்ளையம்மாள். இவரது வீட்டில் பூவன் வாழை மரம் ஒன்றினை வளர்த்து வந்துள்ளார். எவ்வித உரங்களும், பூச்சி மருந்துகளும் அடிக்காமல் இயற்கையாகவே வளர்ந்த இம்மரத்தில், தற்போது விளைந்த வாழைத்தாரில் ஒரே சீப்பில் 60 பழங்கள் விட்டுள்ளது. இதனை அப்பகுதி பொதுமக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து செல்கின்றனர்.

error: Content is protected !!