India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவையில் தடையை மீறி பேரணி செல்ல முயன்றதாக கூறி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பாஜகவினர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அந்தவகையில், கோவை பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனும் போலீசாரால் கைது செய்யப்பட்டார். தமிழக அரசை கண்டித்து கருப்பு தின பேரணி நடைபெற்றபோது, பாஜகவினரை போலீசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை மாவட்டத்தில் இன்று (20.12.2024) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
கோவையில் தடையை மீறி பேரணி செல்ல முயன்றதாக கூறி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பாஜகவினர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழக அரசை கண்டித்து பாஜக சார்பில் இன்று கருப்பு தின பேரணி நடைபெற்றபோது, அண்ணாமலை உள்ளிட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆவின் நிறுவனம் அனைத்து பால்அட்டை நுகர்வோரின் வசதிக்காகவும், பணத்துக்கான பாதுகாப்பு கருதியும், ரொக்க பணபரிவர்த்தனையை, வரும் புத்தாண்டு முதல் ரத்து செய்து விட்டு, ஆன்லைன் வாயிலாக பணம் செலுத்துபவர்களுக்கு மட்டும் பால்அட்டை பெறும் வசதியை அறிமுகம் செய்கிறது. எனவே முகவர் உரிமத்தினை, டிசம்பர் 31க்குள் புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என, கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.
தெற்கு ரயில்வே சேலம் கோட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தாம்பரம்-கோவை இடையே இயக்கப்பட்டு வரும் வாராந்திர சிறப்பு ரயில், டிச.20ஆம் தேதி முதலும், கோவை – தாம்பரம் வாராந்திர சிறப்பு ரயில், டிச.21 ஆம் தேதி முதலும், எல்ஹெச்பி பெட்டிகள் இணைக்கப்பட்டு, இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இடவசதியுடன், பாதுகாப்பு மிக்க, சொகுசு இருக்கைகள் எல்ஹெச்பி பெட்டிகளில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
கோவை மாநகராட்சி, 56வது வார்டு கவுன்சிலராக (காங்.,) இருந்த கிருஷ்ணமூர்த்தி, மரணம் அடைந்ததை ஒட்டி கவுன்சிலர் பதவி காலியாக இருப்பதாக கோவை மாநகராட்சியில் இருந்து மாவட்ட நிர்வாகத்துக்கும், மாநில தேர்தல் ஆணையத்துக்கும் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இந்நிலையில் 2025 ஜன., 6ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பின், இடைத்தேர்தல் நடத்துவதற்கு வாய்ப்பு இருக்கும் என தேர்தல் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கோவை கலெக்டர் கிராந்திகுமார் பாடி நேற்று செய்திக்குறிப்பை வெளியிட்டார். அதில் கட்டட வேலைகள், மரவேலைப்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வங்கிகள் மூலம் கலைஞர் கைவினை திட்டத்தின் கீழ் மானியத்துடன் கடனுதவி வழங்கப்படும். விபரங்களுக்கு மாவட்ட தொழில் மையம், 2 ராஜவீதி, கோவை அலுவலகத்தை நேரடியாகவோ (அ) 0422 – 2391678 தொலைபேசி எண் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை எஸ்பி கார்த்திகேயன் நேற்று விடுத்த செய்திக்குறிப்பில், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த ஆண்டில் கோவை புறநகர் பகுதிகளில் மட்டுமே, இதுவரை 73 நபர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் வெளியிட்ட செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கோவை இஸ்லாமிய கூட்டமைப்பு நிர்வாகிகள் காவல்துறை ஆணையாளரை சந்தித்தனர். கடந்த திங்கள் கிழமை கோவை பாஷா மரணித்ததை தொடர்ந்து, செவ்வாய்கிழமை நல்லடக்கத்திற்க்கு அவரின் உடல் பூமார்கெட் அடக்கஸ்தலத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது. இதனை தொடர்த்து இஸ்லாமியர்கள் இறுதி ஊர்வலத்திற்க்கு பாதுகாப்பு அளித்த காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்தனர்.
கோவை காந்திபுரம் அடுத்த சித்தாபுதூரில் இன்று, மகாராஷ்டிர ஆளுநர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, உதயநிதி ஸ்டாலின் நான் ஒரு கிறிஸ்தவன் ஆனால் சங்கிகளுக்கு வயிற்று எரிச்சல் என கூறியுள்ளார். அவர் கிறிஸ்தவன் என்று சொல்வதற்கு மற்றவர்களுக்கு ஏன் எரிச்சல் வரப்போகிறது. ஒருவேளை கிறிஸ்துவ மக்களின் ஓட்டுக்காக அவ்வாறு கூறியிருக்கலாம் என்றார்.
Sorry, no posts matched your criteria.