India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குளிர் காலத்தில் வயது முதிர்ந்தவர்கள் தோல் பிரச்னைகளைத் தடுக்க, வயதானவர்கள் தங்கள் சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்க வேண்டும். வெதுவெதுப்பான தண்ணீர் குடிக்க வேண்டும். சருமத்தைப் பாதுகாக்க, வயதானவர்கள் கையுறைகள், தொப்பிகள், ஜாக்கெட்டுகள் போன்ற பாதுகாப்பு ஆடைகளை அணியலாம். கம்பளி அல்லது பருத்தி போன்ற இயற்கை இழைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என கோவை அரசு மருத்துவமனை டீன் நிர்மலா, தெரிவித்துள்ளார்.
கோவை, துடியலூர் NGGO காலனியில் இருந்து, கோவில்பாளையம் செல்லும் சாலையில் உள்ள ரயில்வே பாதையில், உயர்மட்ட மேம்பாலம் கட்டுமானப்பணிகள், நாளை முதல் 23.12.2024 நடைபெற உள்ளது. இதனால் அவ்வழியாக செல்வோர், துடியலூர் பஸ் நிறுத்தம், வெள்ளக்கிணர், வெள்ளக்கிணர் ஹவுசிங் போர்டு, NGGO காலனி கணபதி நகர் சென்று வலதுபுறம் திரும்பி, அத்திப்பாளையம் வழியாக கோவில்பாளையம் செல்லலாம் என கோவை மாநகர காவல் துறை தெரிவித்துள்ளது.
கோவை நவ இந்தியா பகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், தமிழக அரசியல்வாதிகளில் அனைத்து மதங்களும் சமம் என்று கூறுவது நான் தான். என் மீது வழக்கு பதிவு செய்வதற்கு சில குழுவினர் செல்கிறார்கள். தமிழக மக்கள் அமைச்சரை நாற்காலிகளில் இருந்து அகற்றுவதற்கு அனைத்து வேலைகளையும் ஆரம்பித்து விட்டார்கள் என தெரிவித்தார்
கோவை மாவட்டத்தில் இன்று (21.12.2024) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
கோவை மாநகர காவல் துறையினர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தடையை மீறி பேரணி செல்ல முயன்ற, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, காடேஸ்வரா சுப்பிரமணியம், விஷ்வ இந்து பரிஷத் சிவலிங்கம், இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ஆறுச்சாமி, உள்ளிட்ட 920 பேர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர்கள் மீது சட்டவிரோதமாக ஒன்று கூடுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.
கோவை கலெக்டர் அலுவலகத்தில் வரும் 27ஆம் தேதி காலை 10:30 மணிக்கு விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. கலெக்டர் அலுவலக இரண்டாவது தளக் கூட்டரங்கில் நடைபெறும் இக்கூட்டத்தில், விவசாயிகள் நேரடியாக பங்கேற்கலாம். விவசாயம் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காண, மனுக்களை அளிக்க விவசாயிகளுக்கு கலெக்டர் கிராந்திகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், கோவை – மயிலாடுதுறை ஜன் சதாப்தி ரயில், செவ்வாய்க்கிழமைகள் தவிர கோவையில் இருந்து காலை 7.15க்கு புறப்பட்டு பிற்பகல் 1.45க்கு மயிலாடுதுறை சென்றடைகிறது. மறுமாா்க்கமாக மயிலாடுதுறை – கோவை ரயில் மயிலாடுதுறையில் இருந்து பிற்பகல் 3.10க்கு 9.20க்கு கோவை வருகிறது. இந்த ரயில் எல்ஹெச்பி பெட்டிகளுடன் இயக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சிப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்களுடைய சொத்து வரி, தொழில் வரி உள்ளிட்ட வரிகளை செலுத்தும் வகையில், சிறப்பு முகாம் இன்று (டிச.21) மற்றும் நாளை (டிச.22) (சனி, ஞாயிறு) ஆகிய நாட்களில் நடைபெற உள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார். வரிவசூல் முகாம்களும் வழக்கம் போல் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை செயல்படும். எனவே, பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளவும்.
கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளான மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை, அன்னூர், கோவில்பாளையம், கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி, ஆனைமலை, வால்பாறை, பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், இன்றிரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவலர்களின் விவரங்களை, கோவை எஸ்பி அலுவலகம் இன்று வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் இதனை பயன்படுத்தி கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் குண்டு வெடிப்புத் தீவிரவாதிகளுக்கு துணைபோகும் திமுக அரசைக் கண்டித்து இன்று மாலை நடைபெற்ற கருப்பு தின பேரணியில் கலந்து கொண்ட, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம், விஷ்வ ஹிந்து பரிஷத் மாவட்டத் தலைவர் சிவலிங்கம், தமிழக பாஜகவினர், இந்து முன்னணியினர், மகளிர் அணியினர் உள்ளிட்டோரை கோவை காவல்துறை கைது செய்துள்ளது.
Sorry, no posts matched your criteria.