Coimbatore

News December 23, 2024

மக்கள் குறைதீர் நாள் நாளை நடைபெறாது

image

கோவை மாநகராட்சியில், ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும், மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெறும். இந்த நிலையில் மேயர் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், நிர்வாக காரணங்களால், நடைபெறாது என, கோவை மாநகராட்சி சார்பில் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. மேலும் அடுத்த வாரம் நடைபெறும் என்று மாநகராட்சி அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர்.

News December 23, 2024

கோவை, போத்தனூர் வழியாக இயக்கப்படும் 6 ரயில்கள் ரத்து

image

சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் நேற்று விடுத்த செய்தி குறிப்பில் தெலங்கானா அருகே ரயில் நிலையத்தில் உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் காரணமாக தன்பாத்-கோவை வாராந்தர சிறப்பு ரயில், மதுரை- கான்பூா் வாராந்தர சிறப்பு ரயில், பரௌணி – எர்ணாகுளம் வாராந்தர சிறப்பு ரயில்கள் இரு வழித்தடங்களிலும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

News December 23, 2024

குற்றச்செயலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை: எஸ்.பி

image

கோவை எஸ்.பி கார்த்திகேயன் நேற்று செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் குற்றங்களை தடுத்திட யாரும் அச்சம் கொள்ள வேண்டாம். தயங்காமல் காவல்துறையை அணுகலாம். கட்டுப்பாட்டு அறை எண்: 94981-81212, whatsapp: 77081-00100 என்ற எண்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். ரகசியம் பாதுகாக்கப்படும். சட்டவிரோத குற்ற செயல்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.

News December 23, 2024

34வது இடத்தில் கோவை ரயில் நிலையம்

image

இந்தியாவில் ரயில்களின் மூலமாக கடந்த 2023-2024 ஆம் ஆண்டில் பெறப்பட்ட வருவாய் மற்றும் ரயில்களில் சரக்குகள் கொண்டு செல்லப்பட்டதன் மூலமாக பெறப்பட்ட வருவாய் தொடர்பாக சென்னை ரயில் பயணிகள் சங்க நிா்வாகி ஒருவா் ஆர்டிஐ மூலமாக கேட்டிருந்தார். இதில் கோவை ரயில் நிலையம் ரூ.345 கோடியே 32 லட்சத்து 34 ஆயிரம் வருவாய் ஈட்டி இந்திய அளவில் 34வது இடத்தை பிடித்துள்ளது.

News December 23, 2024

பொள்ளாச்சியில் ஐடி பார்க்: செந்தில் பாலாஜி

image

பொள்ளாச்சி திருவிழா வரும் டிச.29 ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது. இதன் துவக்க விழா பொள்ளாச்சி தனியார் மண்டபத்தில் கலெக்டர் கிராந்திகுமார் பாடி தலைமையில் நேற்று நடைபெற்றது. எம்.பி. ஈஸ்வரசாமி, சப் – கலெக்டர் கேத்ரின் சரண்யா, கூடுதல் எஸ்பி சிருஷ்டி சிங் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி பொள்ளாச்சியில் ஐடி பார்க் அமைக்கப்படும் என்றார்.

News December 23, 2024

சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பாராட்டு

image

கோவை எஸ்பி கார்த்திகேயன் தலைமையில் நேற்று மாதாந்திர குற்ற விவாதிப்பு கூட்டம் நடைபெற்றது. இவ்விவாதிப்பு கூட்டத்தில் கடந்த மாதத்தில் நடந்த குற்ற சம்பவங்களில் திறம்பட செயல்பட்ட காவலர்களில் ஆய்வாளர்கள்-06, உதவி ஆய்வாளர்கள்-20, சிறப்பு உதவி ஆய்வாளர்கள்-10, தலைமை காவலர்கள்-11, முதல் நிலைக் காவலர்கள்-17, காவலர்கள்-52 என 116 காவலர்களை பாராட்டி, பாராட்டு சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார்.

News December 23, 2024

கோவை: இரவு ரோந்து காவலர்கள் விபரம் 

image

கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளான மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை, அன்னூர், கோவில்பாளையம், கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி, ஆனைமலை, வால்பாறை, பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், இன்றிரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவலர்களின் விவரங்களை, கோவை எஸ்பி அலுவலகம் இன்று வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் இதனை பயன்படுத்தி கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News December 23, 2024

கோவை: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம் 

image

கோவை மாவட்டத்தில் இன்று (22.12.2024) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர நேரத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News December 22, 2024

பனிப்பொழிவின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது

image

வடகிழக்குப் பருவமழை, இம்முறை நன்றாக பெய்துள்ளது. அனைத்துப் பகுதிகளிலும் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. வானம் மேகமூட்டமின்றி, தெளிவாக இருக்கும்போது, பனிப்பொழிவின் தாக்கம் அதிகமாக இருக்கும். இரவு 10:00 மணி முதல் பனிப்பொழிவின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கும். வரும் நாட்களில் பனிப்பொழிவின் தாக்கம், அதிகரிக்க வாய்ப்புள்ளது,என்று கோவை வேளாண் பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி தெரிவித்தார்.

News December 22, 2024

கோவை – பெங்களூரு வந்தே பாரத் ரயில் தாமதம்

image

சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், கோவையில் இருந்து கோவை – பெங்களூரு வந்தே பாரத் ரயில், ஒசூரில் நடைபெறும் பொறியியல் பராமரிப்புப் பணி காரணமாக, டிசம்பா் 23, 24, 25, 27, 28, 31 மற்றும் ஜனவரி 1,4,5,6 ஆகிய தேதிகளில் செல்லும் வழியில், 15 நிமிடங்கள் நிறுத்தப்பட்டு, தாமதமாகச் சென்றடையும். மறுமார்க்கமாகவும் 15 நிமிடங்கள் தாமதமாக செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!