Coimbatore

News December 25, 2024

ஆந்திராவில் இருந்து கோவைக்கு 504 டன் உரம் வந்தது

image

ஆந்திராவில் உள்ள கிருஷ்ணபட்டினம் துறைமுகத்தில் இருந்து, கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு தேவையான உரங்கள், சரக்கு ரயில் மூலம், கோவை ரயில் நிலையம் இன்று வந்தடைந்தது. இதில், கோவைக்கு 504 டன், திருப்பூருக்கு 613 டன், நீலகிரிக்கு 229 டன் உரங்கள் என பிரித்து, லாரிகள் மூலம் கூட்டுறவு சங்கம் மற்றும் தனியார் உரக்கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

News December 25, 2024

லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் 10 பேர் காயம்

image

கோவையிலிருந்து இன்று காலை பொள்ளாச்சி நோக்கி தனியார் பேருந்து ஒன்று பயணிகளுடன் சென்றது.  அப்போது மயிலேறிபாளையம் அருகே வந்தவுடன் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து லாரி மீது மோதியது. இதில், பேருந்தில் பயணம் செய்த 10 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 25, 2024

கோவை வழியாக செல்லும் கேரள ரயில்கள் ரத்து

image

சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில் மொடுமரி ரயில் நிலையத்தில் உட்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் காரணமாக கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம் வழித்தடத்தில் இயக்கப்படும் திருவனந்தபுரம் – கோா்பா வாராந்திர ரயில் டிச.26, 30, ஜன.2, 6 தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது. கோா்பா – திருவனந்தபுரம் வாராந்திர ரயில் டிச.28, ஜன.1, 4, 8 ஆம் தேதிகளில் ரத்து செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

News December 25, 2024

போலீஸ் அதிகாரி போல் பேசி பெண்ணிடம் ரூ.7.70 லட்சம் மோசடி

image

கோவை, சரவணம்பட்டியை சேர்ந்த பிரேமா ஆனந்திக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு செல்போன் அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் போலீஸ் அதிகாரி என்றும், உங்களுக்கு வந்த பார்சலில் போதை பொருள் அனுப்பப்பட்டுள்ளது. வழக்கு பதியாமல் இருக்கவும், திரும்ப கிடைக்கும் எனவும் கூறி ரூ.7.70 லட்சம் பணம் பெற்றுள்ளனர். பணம் திரும்ப கிடைக்கவில்லை. இப்புகாரின் பேரில் கோவை சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.

News December 25, 2024

கோவையில் மெட்ரோ: புதிய தகவல்கள்

image

கோவையில் ரூ.10,740 கோடி செலவில் மெட்ரோ ரயில் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு நிலம் கையகப்படுத்துவதற்கான ஆயத்த பணி பிப் மாதம் துவங்கும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குனர் கூறினார். கோவையில் உயர்மட்ட பாலத்தில் மெட்ரோ ரயில் செல்லும். 30 மீ ஓரிடத்தில் தூண், மெட்ரோ ரயிலில் 3 கோச்சுகள் இருக்கும். ஒரு சமயத்தில் 700 பேர் பயணிக்கலாம். இத்திட்டம் கொண்டு வர மூன்றரை ஆண்டுகளாகும் என்றார்.

News December 25, 2024

கோவை புறநகரில் இரவு ரோந்து காவலர்கள் விபரம் வெளியீடு

image

கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளான, மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை, அன்னூர், கோவில்பாளையம், கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி, ஆனைமலை, வால்பாறை, பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், இன்றிரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவலர்களின் விவரங்களை, கோவை எஸ்பி அலுவலகம் இன்று வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் இதனை பயன்படுத்தி கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News December 24, 2024

கோவையில் ரூ.10,740 கோடியில் மெட்ரோ ரயில் திட்டம்

image

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ரூ.10,740 கோடி மதிப்பில் 34.8 கி.மீ தொலைவுக்கு மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக கூடுதல் விவரங்கள் ஒன்றிய அரசுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது எனவும், ஒப்புதல் விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம் எனவும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குநர் எம்.ஏ.சித்திக் தெரிவித்துள்ளார்.

News December 24, 2024

மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பு தீவிரம்

image

கோவை கலெக்டர் கிராந்திகுமார் பாடி நேற்று வெளியிட்ட அறிக்கையில், கேரளாவில் இருந்து தமிழ்நாட்டின் எல்லைக்குள் பயோமெடிக்கல் கழிவுகள் கொட்டுவதைத் தடுக்க மாவட்டத்தில் உள்ள 14 சோதனை சாவடிகளில் மாவட்ட நிர்வாகம் சார்பில் கண்காணிப்பு பணி 24 மணி நேரமும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சார் ஆட்சியர், ஆர்டிஓ, வட்டாட்சியர்களால் திடீர் தணிக்கை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

News December 24, 2024

ரயில்வே முன்பதிவு மைய வேலை நேரம் குறைப்பு

image

கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் நேற்று விடுத்த செய்தி குறிப்பில் கிறிஸ்துமஸை முன்னிட்டு ரயில்வே துறையில் முன்பதிவு மையங்கள் ஒரு ஷிப்ட் மட்டுமே செயல்படும் எனவும், அதன்படி இன்று, நாளை காலை 8 முதல் மதியம் 2 மணி வரை மட்டும் முன்பதிவு மையங்கள் செயல்படும் என அந்த செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

News December 23, 2024

சிப்காட் தொழிற்சாலை அமைக்கும் திட்டம் இல்லை

image

“சட்டமன்றத்திலோ, மானிய கோரிக்கையின் போதோ, மெட்டுவாவி கிராமத்தில், சிப்காட் தொழிற்சாலை அமைய உள்ளது என்று, எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. தமிழகம் முழுவதும் புறம்போக்கு நிலங்கள், எங்கெல்லாம் உள்ளது என்பதை அறிவதற்காக, தற்போது கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. சிப்காட் தொழிற்சாலை அமைய உள்ளது என, சில அரசியல் கட்சியினர், வதந்தி பரப்பி வருகின்றனர்” என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!