Coimbatore

News December 26, 2024

ஈஷாவின் கிராமோத்சவம்: கோவை வருகிறார் சேவாக்

image

கோவை மாவட்டம், ஈஷா யோக மையத்தில், ஆதியோகி முன்னிலையில், ஈஷாவின் 16வது கிராமோத்சவம், கிராமப்புற விளையாட்டுத் திருவிழா ஞாயிறு அன்று இறுதிப்போட்டிகள் நடைபெற உள்ளது. இதில், 5 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசத்தில் இருந்து 4,858 அணிகள் மற்றும் 10,311 வீராங்கனைகள் (பெண்கள்) உட்பட 43,144 வீரர்கள் பங்கேற்கிறார்கள். இதில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்தர் சேவாக் பங்கேற்க உள்ளார்.

News December 26, 2024

இன்ஸ்டாகிராம் மோகத்தில் காதலில் விழுந்த பெண் ஏமாற்றம்

image

கோவை சரவணம்பட்டியில் பிரபல ஐடி நிறுவனத்தில் மேனேஜராக 28 வயது இளம் பெண் ஒருவர் பணியாற்றி வருகிறார். அவர் அவ்வப்போது இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பார்ப்பது வழக்கம். அப்படி பார்க்கும்போது பழக்கமான நபருடன் திருமணம் செய்யாமலேயே அந்த பெண் சேர்ந்து வாழ்ந்துள்ளார். ஆனால் அந்த இளைஞரோ முதல் திருமணத்தை மறைத்து குடும்பம் நடத்தியது தெரியவந்தது. அவர் தலைமறைவாகிவிட்டார், துடியலூர் போலீசார் தேடி வருகின்றனர்.

News December 26, 2024

அதிமுக மாணவரணி செயலாளராக சிங்கை ராமச்சந்திரன் நியமனம்

image

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிக்கையில் அதிமுக மாணவர் அணி செயலாளர் பொறுப்பில் இருக்கும் விஜயகுமார், ஐடி விங் தலைவர் சிங்கை ராமச்சந்திரன், இணை செயலாளர் கோவை சத்யன் இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள். மாணவரணி செயலாளராக சிங்கை ராமச்சந்திரனும், ஐடி விங் தலைவராக கோவை சத்யனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

News December 26, 2024

திமுக அரசு மீது எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு

image

கோவை, மேட்டுப்பாளையம் சாலை அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகே நடைபெற்று வரும் மேம்பால பணிகளை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று பார்வையிட்டார். பின்னர் செய்தியாளரிடம் பேசுகையில், இபிஎஸ்முதலமைச்சராக இருக்கும்போது எத்தனை திட்டங்களை மக்களுக்கு கொடுத்துள்ளார். மூன்று ஆண்டுகளாக எந்த திட்டங்களையும் இந்த அரசு செய்யவில்லை. இதை பார்த்தாவது சரியான முறையில் செய்ய வேண்டும் என்றார்.

News December 26, 2024

மருதமலையில் அன்னதானம் திட்டம் துவக்கம்

image

மருதமலையில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின், தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக்காட்சி மூலம் திட்டத்தை தொடக்கி வைத்தார். இதே போல் மதுரை கள்ளகழர் கோயில், பழனி முருகன் கோவில் சார்பில் நடத்தப்படும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவர்களுக்கு மதிய உணவு திட்டத்தை துவக்கி வைத்தார்.

News December 26, 2024

கோவை: 1,428 பயனாளிகளுக்கு கனவு இல்லம் கட்ட உத்தரவு

image

கோவை மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் குடிசைகளில் வசிக்கும் மக்கள், பாதுகாப்பாக வசிக்கும் வகையில், ஊரக வளர்ச்சி முகமை மூலமாக 1,428 பயனாளிகளுக்கு ரூ.49.98 கோடியில்,கலைஞர் கனவு இல்லம்’ கட்டிக் கொடுக்கப்பட உள்ளது. ஒவ்வொரு வீடும், 360 சதுரடியில், 3.60 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்படுகின்றன, இதற்கான உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.

News December 26, 2024

மருதமலை செல்கின்றார்களா? இதை கவனியுங்க

image

கோவை மருதமலை தேவஸ்தானம் அதிகாரிகள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வரும் ஜனவரி 1ம் தேதி ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அதிகளவில் பக்தர்கள் வருவதை கருத்தில் கொண்டு, அந்த நாளில் மலைக்கோவிலுக்கு 4 சக்கர வாகனங்களில் பக்தர்கள் செல்வதற்கு அனுமதி இல்லை. 2 சக்கர வாகனங்கள் மூலமாகவும், மலைப்படிகள் வழியாகவும், கோவில் பஸ் சுவாமி தரிசனம் செய்யலாம் என்றனர்.

News December 26, 2024

கோவை அருகே யானை உயிரிழப்பு: வெளியான தகவல்

image

கோவை துடியலூர் வரப்பாளையத்தில் நேற்று முன்தினம் பெண் யானை ஒன்று இறந்து கிடந்தது. நேற்று கால்நடை மருத்துவர்கள் நடத்திய பிரேத பரிசோதனையில் காட்டு யானைக்கு 30 வயது என்பதும், கர்ப்பமாக இருப்பதும், இதயம், ஈரல், நுரையீரல் பகுதியில் வீக்கம் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளதும் தெரியவந்தது. எழுந்திருக்க முயன்ற போது மாரடைப்பு ஏற்பட்டு உட்கார்ந்த நிலையிலேயே இறந்ததாக மருத்துவர்களின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

News December 26, 2024

கோவை விமானத்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கை

image

கோவை விமானத்துறை அதிகாரிகள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடுகையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் போக்குவரத்து 18% வளர்ச்சியடைந்துள்ளது. அபுதாபிக்கு இண்டிகோ சர்வதேச விமானங்கள் மற்றும் சிங்கப்பூருக்கு தினசரி விமானங்கள் தொடங்கப்பட்ட பிறகு, சர்வதேச பயணிகள் இயக்கத்தில் 42% மற்றும் CJB இல் சர்வதேச சரக்கு கையாளுதலில் 107% அதிகரித்துள்ளது என்றனர்.

News December 25, 2024

இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

கோவை மாவட்டத்தில் இன்று (25.12.2024) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!