India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை மாவட்டத்தில் இன்று (28.12.2024) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
கோவை வேளாண்மை பல்கலைக்கழக அதிகாரிகள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோவை மாவட்டத்தில் ஆண்டிற்கு சராசரியாக 26,088 ஹெக்டேரில் இறவை மற்றும் மானாவாரி நிலங்களில் சோளம் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த நிலையில் மகத்துவ சோளத்தில் புரதம், மாவுசத்து, நார்சத்து நன்றாக வளரும் தன்மை உடையது. எனவே, நடப்பு மார்கழி பட்டத்திற்கு உயர் விளைச்சல் தரக்கூடிய சோளம், கோ32 மற்றும் K12 ரகங்களை பயன்படுத்துங்கள் என கூறினார்.
கோவை மாவட்டத்தில் இன்று (27.12.2024) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
கோவையில் உள்ள தனது வீட்டு வாசல் முன்பு அண்ணாமலை சாட்டையடி போராட்டத்தை நடத்தினர். அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் துன்புறுத்தல் சம்பவத்தை கண்டித்து, நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர் திமுகவை ஆட்சியை விட்டு நீக்கும் வரை செருப்பு அணிவதில்லை என்றும், தன்னைத்தானே சாட்டையால் அடித்துக் கொள்ளப் போவதாகவும் கூறியிருந்தார். இந்நிலையில் தனது சபதத்தை நிறைவேற்றியுள்ளார்.
கோவை மாவட்டத்தில் கடந்த ஜன.1 முதல் நவ.30 வரை கருக்கலைப்பு மாத்திரை விற்பனையில் விதி மீறிய 27 மருந்தகங்கள் தற்காலிகமாகவும், 7 மருந்தகங்களின் லைசென்ஸ் நிரந்தரமாகவும் ரத்து செய்யப்பட்டுள்ளது. 13 கடைகள் மீது நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கோவை மண்டல மருந்து கட்டுப்பாடு உதவி இயக்குனர் மாரிமுத்து தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்ட நட்சத்திர ஓட்டல்கள், விடுதிகள், ரிசார்ட்டுகளில் புத்தாண்டு கொண்டாட்டத்தை விமரிசையாக கொண்டாட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. புத்தாண்டை ஒட்டி இளைஞர்கள் பைக்ரேஸ் செய்வது, பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபடுவது, கூட்டத்தை பயன்படுத்தி ஜேப்படி செய்வது போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபட வாய்ப்புள்ளது. இதனை தடுக்க கோவையில் புத்தாண்டு அன்று இரவு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில், பெரியநாயக்கன்பாளையம், பேரூர், கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய பகுதிகளில் இன்று (டிசம்பர்.26) இரவு நேர ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை, மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 டயல் செய்யலாம் என்று, கோவை மாநகர போலீசார், தங்களது முகநூல் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளனர்.
கோவை விமான நிலையம் அருகே உள்ள, தனியார் உணவக அரங்கில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய, பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, திமுக ஆட்சியை தமிழகத்திலிருந்து அகற்றும் வரை, செருப்பு போட மாட்டேன் என்று செருப்பை தூக்கி காட்டினார். மேலும் நாளை காலை தனது வீட்டின் முன்பாக, சவுக்கால் 6 முறை அடித்து கொள்ளுவதாக தெரிவித்தார்.
கோவை சாய்பாபா காலனி பகுதியில், விபச்சாரம் நடைபெறுவதாக, சாய்பாபா காலனி காவல்துறையினருக்கு, நேற்று தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில், சம்மந்தப்பட்ட இடத்தில், நேற்று காவல்துறையினர் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு, இளம் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபட வைத்த, தயானந்தன் (32), கிருஷ்ணவேணி (31), ரோஸ்மீனா பேகம் (31) ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.
கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இன்று (டிசம்பர் 26) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தொடர் குற்றவாளிக்கு கட்சிப் பொறுப்பு கொடுத்து எளிதாக உலவ விட்டு தற்போது பாதிக்கப்பட்ட பெண்ணின் தகவல்களையும் பொதுவெளியில் பரப்பி விடுவது தான் திராவிட மாடல் அரசா? என கேள்வி எழுப்பி உள்ளார்.
Sorry, no posts matched your criteria.