Coimbatore

News December 30, 2024

கோவை மாவட்ட காவல் துறையின் எச்சரிக்கை

image

கோவை மாவட்ட காவல்துறையினர் இன்று பொது மக்களுக்கு ஒரு எச்சரிக்கை பதிவு செய்துள்ளனர். அதில் ஜியோ இன்டர்நெட் ஸ்பீட் 5ஜி நெட் ஒர்க் கனெக்சன் ஏபிகே ஃபைல் என்ற பெயரில் முன்பின் தெரியாத வாட்ஸ்அப் எண்கள் இருந்து மெசேஜ் வருவதாகவும், அதை யாரும் திறந்து பார்க்க வேண்டாம், அப்படி திறந்தால் அவனுடைய கைப்பேசி கேக் செய்யப்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த தகவலை பொதுமக்கள் அனைவரும் கவனமாக எடுத்துக்கொள்ளவும்.

News December 30, 2024

ரேஷன் அரிசி கடத்தியதாக 815 பேர் கைது

image

கோவை சரகத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை ரேஷன் அரிசி கடத்தியதாக 695 வழக்குகளை பதிவு செய்யப்பட்டு 196 டன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 815 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், அதில் தொடர்ந்து ரேஷன் கடையில் 11 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.

News December 30, 2024

மாநகராட்சியின் சாதாரண கூட்டம் 

image

கோவை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் இன்று விடுத்த செய்தி குறிப்பில் மாநகராட்சி மாமன்றத்தில் சாதாரண கூட்டம் இன்று (டிச.30) காலை 10 மணிக்கு பிரதான அலுவலக வளாகத்தில் உள்ள விக்டோரியா ஹாலில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் கமிஷனர் சிவகுரு பிரபாகரன் முன்னிலையில் நடைபெற உள்ளது என அந்த செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

News December 30, 2024

கோவை போலீஸ் கமிஷனர் இடமாற்றம்

image

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணனை தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. அவருக்கு பதிலாக கோவை சரக டிஐஜி சரவண சுந்தர் கோவை மாநகர போலீஸ் கமிஷனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல் கோவை மாநகர போலீஸ் துணை கமிஷனர்கள் ஸ்டாலின், சரவணகுமார் உள்ளிட்டோரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

News December 30, 2024

கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

கோவை மாவட்டத்தில் இன்று (29.12.2024) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News December 29, 2024

கோவையில் சிறு,குறு விவசாயிகளுக்கு மானியம்

image

கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி இன்று கூறியதாவது, கோவை மாவட்டத்தை சுற்றியுள்ள விவசாயிகளுக்கு கைபேசி மூலமாக பம்பு செட்டுகளை இயக்கும் கருவிகளை வாங்க, அரசு சார்பில் மானியம் வழங்கப்பட உள்ளது. இதற்காக ஆதிதிராவிடர், பழங்குடியினர், சிறு குறு பெண் விவசாயிகளுக்கு சொந்த செலவில் 50 சதவிகிதம் மானியம் வழங்கப்படுகிறது. இதனை பயண்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

News December 29, 2024

சிறுவனை வேலைக்கு அழைத்து வந்த இருவர் மீது வழக்கு

image

கோவை ரயில் நிலையத்தில் குழந்தை தொழிலாளர் தடுப்பு பிரிவு மேற்பாா்வையாளா் கிறிஸ்டோபா் தலைமையிலான ஊழியர்கள் ரயில்வே போலீசாருடன் நேற்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு 16 வயது சிறுவனுடன் வந்த இருவரிடம், விசாரித்ததில் அவர்கள், ஒடிசாவை சோ்ந்த தீபன்குமாா், முகேஷ்குமாா் என்பதும், சிறுவனை வேலைக்கு அழைத்து வந்ததும் தெரிந்தது. புகாரின் பேரில் இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர்.

News December 29, 2024

கோவை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

image

சென்னை உயர்நீதிமன்றத்தில் பல்ராம்சிங், என்பவர் தொடரப்பட்ட வழக்கில், வழங்கப்பட்ட ஆணைகளின்படி, மனிதக்கழிவுகளை மனிதர்களே, கைகளால் அகற்றும் பணியை, மேற்கொள்ளும் நபர்களை கணக்கெடுப்பு செய்யப்பட்டதில், எவரும் கண்டறியப்படவில்லை என தெரிகிறது. ஊரக உள்ளாட்சி பகுதிகளில், ஏதேனும் ஆட்சேபணையிருப்பின், வட்டார வளர்ச்சி அலுவலரிடம் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கலாம் என கோவை ஆட்சியர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.

News December 29, 2024

கோவையில் கிரிக்கெட் வீரர் வீரேந்தர் சேவாக்

image

கோவை மாவட்டம் பேரூரில் புகழ்பெற்ற பட்டீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் அதிகளவிலான மக்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்த நிலையில் நேற்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வீரேந்தர் சேவாக் சாமி தரிசனம் செய்தார். சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியில் வந்த அவரை, ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு புகைப்படம் எடுத்தனர்.

News December 28, 2024

இந்த ஆண்டின் கடைசி ஹாப்பி ஸ்ட்ரீட் நிகழ்வு

image

கோவை மாநகராட்சி மாற்று மாநகர போலீசார் இணைந்து நடத்தும் ஹாப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி கோவை ஆர்.எஸ்.புரத்தின் பிரதான பகுதியில் தொடர்ச்சியாக நாளை (டிச.29) ஞாயிறுகளில் நடைபெற்றுள்ளது. இதன் இறுதி நிகழ்வு நாளை அதே ஆர்.எஸ். புரம் பகுதியில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள், விளையாட்டுகளுடன் நடைபெறுகிறது. இதுவே இந்த ஆண்டின் கடைசி ஹாப்பி ஸ்ட்ரீட் நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!