India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவையில் புத்தாண்டை ஒட்டி, குற்றச்சம்பவங்களை தடுக்கும் பொருட்டும், கோவை மாநகரில் 23 நான்கு சக்கர வாகனங்கள், 60 இரு சக்கர வாகன ரோந்து வாகனங்களும் ரோந்து பணியில் ஈடுபடும். அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 1600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். உதவிக்கு 04222300970, 9498181213, வாட்ஸ்ஆப் எண் 8190000100 தொடர்பு கொள்ளலாம் என காவல்துறை தெரிவித்துள்ளது.
கோவை மாவட்டத்தில் 1540 ரேஷன்கடைகள் உள்ளன. இந்த கடைகள் வாயிலாக11.42 லட்சம் கார்டு உள்ளது. இந்நிலையில் வரும் 2025ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அனைத்து அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கும், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் 1 முழுக் கரும்பு ஆகியவை பெற ஜன.1ம் தேதி முதல் டோக்கன் வழங்கப்படும் என கோவை மாவட்ட கூட்டுறவு சங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொள்ளாச்சியில் மொபைல் செயலி மூலம் மோசடியில் ஈடுபட்ட 9 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால், அதிக லாபம் ஈட்டலாமென ஆசைவார்த்தை கூறி மோசடியில் என புகார். பணத்தை இழந்த 50-க்கும் மேற்பட்டோர் கொடுத்த புகாரில் 9 பேரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும், மோசடி வழக்கில் தலைமறைவான முக்கிய நபர்கள் 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை மாநகராட்சியின் மன்ற கூட்டம் நேற்று மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் கமிஷனர் சிவகுரு பிரபாகரன் முன்னிலையில் நடைபெற்றது. இதில் அதிமுக உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதை கண்டித்து அதிமுக கவுன்சிலர் பிரபாகரன் உள்ளிட்டோர் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதனையடுத்து பிரபாகரனை இரு கூட்டங்களில் பங்கேற்க தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டது.
கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் புதுமைப் பெண் திட்டத்தின் பற்றட்டையை (Debit card) மாணவிகளுக்கு, கோவை எம்பி கணபதி ராஜ்குமார் வழங்கி, இத்திட்டத்திற்கான பயன்களை, இன்று எடுத்துரைத்தார். இதில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, கோவை வேளாண்மை பல்கலைக்கழகத் துணை வேந்தர் கீதாலட்சுமி மற்றும் சமூக நலத் துறை அலுவலர்கள் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
ஆங்கிலப் புத்தாண்டு அன்று மட்டும், இரவிலும், இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ், செயல்படும் திருக்கோவில்கள், நடை திறந்து இருக்கும் என்று, இந்து அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. ஆகம விதிமுறைகளின் கீழ், இரவு நேரங்களில் கோவிலை திறக்க கூடாது என்று, கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள, இந்து அறநிலையத்துறை அலுவலகத்தில், இந்து மக்கள் புரட்சி படையினர், கண்களை கட்டி மனு அளித்தனர்.
கோவை மாவட்டத்தில் இன்று (30.12.2024) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
கோவை மாநகர் மாவட்டம், அதிமுக இளைஞர், இளம் பெண்கள் பாசறை சார்பாக, கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. போஸ்டரில் ‘SaveOur Daughters’. ‘திமுக அண்ணா அறிவாலயத்தின் அவல ஆட்சி, அண்ணா பல்கலைக் கழக சம்பவமே சாட்சி’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நகரின் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கோவை சாய்பாபா காலனி சேர்ந்தவர் சரஸ்வதி ஜெகன் (51). இவரிடம் கடந்து சில நாட்களுக்கு முன்பு, சுப்புராஜ் என்பவர் அணுகி, மகனுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக தெரிவித்தார். இதனை நம்பி, சரஸ்வதி ஜெகன் ரூ.39,16,028 மற்றும் அசல் கல்லூரி சான்றிதழ்களை வழங்கினார். ஆனால் வேலை வாங்கி தராமல் மோசடி செய்ததாக தெரிகிறது. இது குறித்து சரஸ்வதி அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை இன்று துடியலூர் பகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் கோவை புறநகர் வடக்கு மாவட்டப் சட்டமன்ற உறுப்பினர் பி ஆர் ஜி அருண்குமார் தலைமையில் பேருந்து நிறுத்தம் அருகில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பி ஆர் ஜி அருண்குமார் பேசிக் கொண்டிருக்கும்போது திடீரென்று காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.
Sorry, no posts matched your criteria.