India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை மாவட்டத்தில் இன்று (01.01.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
திமுகவை நரி என விமர்சனம் செய்து, கோவை மாநகரில் ஆங்காங்கே ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உற்ற துணையாக நிற்பது தான் பாரதிய ஜனதா கட்சி, கருப்பு சிவப்பு நரிகளிடம் இருந்து, பெண்களை காப்பதே, எங்கள் பணி என்று, கோவை ரயில் நிலையம், காந்திபுரம், உள்ளிட்ட பகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கோவை மாநகரில் நடப்பாண்டில் நிகழ்ந்த விபத்தில் அதிவேகம், அலட்சியமாக வாகனத்தை இயக்குதல் போன்ற காரணங்களுக்காக விபத்து ஏற்பட்டுள்ளது. மாதத்தில் 25 பேர் விபத்தில் பலியாகியுள்ளனர். மாதம் 75 பேர் காயமடைகின்றனர். அந்த வகையில் நடப்பாண்டில் கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் டிசம்பர் வரை 286 பேர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். 883 பேர் படுகாயமடைந்துள்ளனர் என போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவை சரக டிஐஜியாக பணியில் இருந்து வந்த சரவணசுந்தர், கோவை மாநகர காவல் ஆணையராக, இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக STF காவல் கண்காணிப்பாளராக இருந்த, சசிமோகன் IPS, பதவி உயர்வு பெற்று, கோவை சரக டிஐஜியாக அண்மையில் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் இன்று கோவை சரக டிஐஜியாக சசிமோகன் ஐபிஎஸ், அவரது அலுவலகத்தில் பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு சக காவலர்கள் தங்களது, வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
கோவை வேளாண்மை துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், மிட்டாய்கள் தயாரிக்கும் பயிற்சி, வரும் 3ம் தேதி அன்று நடைபெறுகிறது. இதில் இந்தப்பயிற்சி சிறுதொழில் முனைவோருக்கு, தங்களது வருமானத்தைப் பெருக்க, பெரிதும் உதவியாக இருக்கும் என்றும், ஆர்வமுள்ளவர்கள் வேளாண் பல்கலைக்கழகத்தை அணுகலாம் என்று தெரிவித்துள்ளனர்.
கோவை ரேஸ் கோர்ஸ் சாலையில் அதிக அளவில் பொதுமக்கள் குவிந்ததால் கடுமையான போக்குவரத்து நெரிசல் மேற்பட்டது. மேலும் வாகனங்களை சரியாக நிறுத்தாமல் சாலையில் ஆங்காங்கே நிறுத்தியதால் இந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், ரேஸ்கோர்ஸ் நடைபாதையில் இருசக்கர வாகனங்கள் அணிவகுத்து நின்றது. இதனால் பொதுமக்கள் யாரும் நடக்க முடியாமல் அவதி அடைந்தனர்.
கோவை ஆலாந்துறையில், ஈஷா சார்பாக புத்தாண்டு கொண்டாடப்பட்டது. இதில் ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் சத்குரு கலந்து கொண்டு, சத்குரு பேசுகையில் “அடுத்த ஆண்டில் நாம் ‘மிராக்கிள் ஆப் தி மைண்ட்’ என்ற செயலியை அறிமுகம் செய்ய இருக்கிறோம். புத்தாண்டில் நீங்கள் இந்த உலகத்தை ஒளிரச் செய்ய வேண்டும். நீங்கள் மிகவும் அற்புதமான மனிதராக இருப்பதன் மூலம், இந்த உலகிற்கு சிறந்த பரிசினை அளிக்க முடியும் என்றார்.
கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கூறியதாவது. ” 2024ம் என்பது பாஜக அரசுக்கும், இந்தியாவுக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டாக அமைந்தது. மூன்றாவது முறையாக மோடி பிரதமர் ஆகியுள்ளார். இதே போல 2025ம் ஆண்டும் அமையவேண்டும் பாரதிய ஜனதா கட்சி மூலமாக இந்தியா ஒளிர வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ்நாடு முன்னாள் முதல்வர், ‘பேரறிஞர்’ அண்ணா பிறந்தநாளினை சிறப்பிக்கும் வகையில், 04.01.2025 அன்று, பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு, விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், கோவை மாவட்டப்பிரிவு மூலமாக மிதிவண்டி போட்டிகள் நடத்தப்படவுள்ளது. மிதிவண்டிபோட்டிகள் கோவைபுதூர் மின்வாரிய அலுவலகம் முன் துவங்கி, ஆர்டிஓ அலுவலகம் CBM கல்லூரி வழியாக நடைபெறும் என்றார்.
கோவை மாவட்டத்தில், 2024ன் இறுதி நாளான இன்று, புத்தாண்டு இரவில், சாலை பாதுகாப்பை பலப்படுத்த, கோவை மாநகரில் வாகனப் போக்குவரத்தை கண்காணிக்கவும், விபத்துக்களை தடுக்கும் விதமாகவும், மற்றும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்காகவும், கோவை மாநகரில் உள்ள அனைத்து மேம்பாலங்களிலும், இன்று (31.12.2024) இரவு, புத்தாண்டு தினத்தன்று, போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது என கோவை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.