India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை மரக்கடை மேம்பாலத்தின் மீது இன்று காலை வந்து கொண்டிருந்த, கேஸ் லாரி ரவுண்டானாவில் திடீரென கவிழ்ந்தது. இதில் அந்த லாரியில் இருந்த கேஸ் டேங்கில் சேதம் ஏற்பட்டு, தற்போது கேஸ் கசிந்து வருகிறது. உடனடியாக அங்கு விரைந்த தீயணைப்புத்துறையினர், அசம்பாவிதம் நிகழாமல் தடுக்க, அனைத்து மீட்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள, நீர் நிலைகளைப் பாதுகாக்க, பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு, செயல்படுபவர்களுக்கு, முதலமைச்சரின் நீர்நிலைப் பாதுகாவலர்” விருதும், ரூ.1 இலட்சம் ரொக்கப் பரிசும் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான விருதிற்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள், இன்று முதல் 17.01.2025 வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் இன்று (02.01.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை, மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மேலாண்மை இணை இயக்குனர் இன்று கூறியதாவது.. “கோவை மாவட்டத்தில் நடப்பு ராபி பருவத்திற்கான இரசாயண உரங்கள், தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது என்றார்.மேலும் மானிய விலை உரம் விற்பனை செய்யும் உரிமம் பெற்ற மொத்த/சில்லரை விற்பனையாளர்கள், மானிய உரங்களை பிற மாநிலம் / மாவட்டங்களுக்கு அனுப்புவதோ, பிற மாவட்டங்களிலிருந்து கொள்முதல் செய்யவோ கூடாது என்று தெரிவித்துள்ளார்.
கோவை மாநகர் விரிவடைகின்றது. அதன் அடிப்படையில், மதுக்கரை நகராட்சி, இருகூர் பள்ளபாளையம் பேரூர் வெள்ளலூர் ஆகிய பேரூராட்சிகளும், நீலாம்பூர், மயிலம்பட்டி, குருடம்பாளையம், சோமையம் பாளையம், பேரூர்செட்டிப்பாளையம், கீரனத்தம், வெள்ளாணம்பட்டி பட்டணம், சின்னியம்பாளைம், கள்ளிப்பாளையம்மற்றும், சீரபாளையத்தின் ஒரு பகுதி என 11 ஊராட்சிகளும் கோவை மாநகராட்சியோடு இணைகின்றது.
கோவை சரக டி.ஐ.ஜி ஆக இருந்தவர் சரவண சுந்தர். கோவை மாநகர போலீஸ் கமிஷனராக நியமனம் செய்யப்பட்டார். இவருக்கு பதிலாக சசி மோகன், கோவை சரக டி.ஐ.ஜி யாக நியமிக்கப்பட்டார். அவர் இன்று டி.ஐ.ஜி அலுவலகத்தில் பொறுப்பு ஏற்றுக் கொண்டார். அப்போது, கோவை சரகத்தில் சட்டம் – ஒழுங்கு, போக்குவரத்து, குற்ற தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என தெரிவித்தார்.
கோவை அரசு மருத்துவமனையில் ஆங்கிலப் புத்தாண்டு தினத்தில் 4 குழந்தைகள் பிறந்தன. இதில், 3 ஆண் குழந்தைகள், ஒரு பெண் குழந்தைகள் ஆகும் மேலும். கடந்த ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை கோவை அரசு மருத்துவமனையில் 6,181 பிரசவங்கள் நடந்துள்ளது. இதில், 6,164 குழந்தைகள் பிறந்தன. இதில், 3,164 ஆண் குழந்தைகள், 3 ஆயிரம் பெண் குழந்தைகள் பிறந்துள்ளதாக அரசு மருத்துவமனையின் டீன் நிர்மலா தெரிவித்துள்ளார்.
கோவை அரசு மருத்துவமனை அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாவட்டத்தில் தற்போது டெங்கு காய்ச்சல் பாதிப்பு பரவலாக இருந்து வருகிறது. கோவை அரசு மருத்துவமனையில், தற்போது டெங்கு காய்ச்சல் பாதித்த, 6 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காய்ச்சல் பாதிப்பு காரணமாக, தினமும் 50 முதல் 60 பேர் வரை, புற நோயாளிகளாக சிகிச்சை பெற்று செல்கிறார்கள் என்று தெரிவித்துள்ளனர்.
போளுவாம்பட்டி வனச்சரகத்திற்குட்பட்ட, மேற்குத் தொடர்ச்சி மலையில், கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இங்கு ஆங்கில புத்தாண்டு மற்றும் அரையாண்டு பள்ளி விடுமுறை ஒட்டி கோவை குற்றால அருவியில் குளிப்பதற்காக சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்திருந்தனர். மேலும், கோவை குற்றாலம் நீர் வீழ்ச்சியில், மிதமான அளவில் கொட்டும் தண்ணீரில், நீண்ட நேரம் குளித்து மகிழ்ந்தனர்.
கோவை மாவட்டத்தில் உள்ள ஈஷா யோகா மையம் கோவை மக்களின் சுற்றுலாத்தலமாக விளங்கி வருகிறது. இந்த நிலையில் 2025 புத்தாண்டு முன்னிட்டு கோவை ஈஷா யோகா மையத்தில், 10 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் வருகை தந்துள்ளனர் என்று, கோவை ஈஷா யோகா மையத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.