India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பொங்கல் தொகுப்பு, அனைத்து அரிசி கார்டுதாரர்களுக்கும் வழங்கப்படுகிறது. ரேஷன் கடை ஊழியர்கள் நேற்று முதல், டோக்கன் கொடுத்து வருகின்றனர்.கோவை மாவட்டம் முழுவதும் நேற்று மட்டும் 3.40 லட்சம் டோக்கன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இன்னும் இரண்டு நாட்களுக்குள், டோக்கன் முழுமையாக கொடுத்து முடிக்கப்படும் என கோவை மாவட்ட கூட்டுறவு சங்க துணைப் பதிவாளர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
கோவை உப்பிலிபாளையம் மேம்பாலத்தில் கேஸ் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இது குறித்து போலீசார் ஓட்டுநர் ராதாகிருஷ்ணனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை போக்குவரத்து புலனாய்வு போலிசார் லாரி ஓட்டுனர் ராதாகிருஷ்ணன் மீது பல்வேறு பிரிவின் கீழ் நேற்று வழக்கு செய்த நிலையில், தற்போது கைது செய்து விசாரணை செய்கின்றனர்.
கோவை மாவட்டத்தில் இன்று (03.01.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடப்பு 2024-25ஆம் நிதியாண்டின், 2ஆம் அரையாண்டு வரையில், கோவை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய, அனைத்து வரியினங்களையும், பொதுமக்கள் செலுத்துவதற்கு வரும் 4,5 ஆகிய தேதிகளில் வரி வசூல் முகாம்கள் நடைபெற உள்ளது. எனவே, இதை பயன்படுத்திக் கொள்ளுமாறு” தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் இன்று (ஜனவரி.3) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ மற்றும் நறுமணப் பயிர்கள் துறையில் வருகின்ற (07.01.2025) அன்று “மருத்துவ தாவரங்களின் நாற்றங்கால் மற்றும் அங்கக சாகுபடி தொழில்நுட்பங்கள்” குறித்த ஒரு நாள் பயிற்சி நடைபெற உள்ளது. இதில் விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
கோவை எஸ்பி கார்த்திகேயன் விடுத்த செய்தி குறிப்பில், போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டாலோ, சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் தயங்காமல் காவல் கட்டுப்பாட்டு அறை எண் : 94981-81212, whatsapp எண் : 77081-00100 என்ற எண்களை தொடர்பு கொண்டு, இதுபோன்ற குற்ற நடவடிக்கைகள் குறித்து தகவல் தெரிவிக்கலாம். ரகசியம் பாதுகாக்கப்படும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.
கோவையில் இருந்து சிங்கப்பூருக்கு தற்போது வாரத்தில் திங்கள், வெள்ளிக்கிழமைகளில் இண்டிகோ நிறுவனத்தின் சார்பில் நேரடி விமான போக்குவரத்து உள்ளது. தற்போது கூடுதலாக 3 வது விமான போக்குவரத்தை தொடங்க திட்டமிட்டுள்ளது. அதன்படி வாரத்தில் புதன்கிழமையில் கூடுதல் சேவை வழங்கப்படவுள்ளது. கோடை விடுமுறையை கருத்தில் கொண்டு, சுற்றுலா பயணிகளின் வசதிக்காக இந்த சேவையை திட்டமிட்டுள்ளதாக, இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
கோவையில் இன்று எல்.பி.ஜி லாரி கவிழ்ந்து, கேஸ் வெளியான நிலையில், அது தற்காலிகமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் கட்டுப்பாட்டில் உள்ளன. விபத்து நடைபெற்ற இடத்தில் இருந்து, ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு, போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட பின்னர் லாரி, பீளமேடு பகுதியில் உள்ள எல்.பி.ஜி குடோனுக்கு கொண்டு செல்லப்படும் என காவல் ஆணையர் சரவண சுந்தர் தெரிவித்துள்ளார்.
கோவை மாநகர காவல் துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், கோவை மாவட்டத்தில் கொலை மற்றும் சாலை விபத்து சம்பவங்கள் குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளது. குறிப்பாக, 2023-ம் ஆண்டில் 45-க்கும் மேற்பட்ட கொலை வழக்குகள் பதிவான நிலையில், 2024-ம் ஆண்டில் 38 வழக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. அனைத்து குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளனர்.
கோவை மரக்கடை மேம்பாலம், உப்பிலிபாளையம் பகுதியில், கேஸ் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரியில் இருந்த டேங்கரில், கேஸ் கசிவு ஏற்பட்டுள்ளது. இதனை சரிசெய்யும் பணியில் தீயணைப்புத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பாதுகாப்பு கருது, லாரி விபத்துக்குள்ளான இடத்தில், அருகாமையில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.