India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை கலெக்டர் கிராந்திகுமார் பாடி இன்று விடுத்த செய்தி குறிப்பில், ஜன.1 2025 ஆம் தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் சுருக்க முறை திருத்தம் மேற்கொள்ளும் பணிகள் நிறைவுற்ற நிலையில், நாளை (ஜன.6) மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான கிராந்திகுமார் பாடி தலைமையில், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் கலெக்டர் அலுவலகத்தில் வெளியிடப்பட உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி இன்று கூறியதாவது. 18 பூர்த்தியடைந்த இளம் வாக்காளர்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க வசதியாக கோவை மாவட்டம் முழுவதும் 1,017 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற்றது. இதில் கோவை மாவட்டத்தில் 28 ஆயிரம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வரைவு வாக்காளர் பட்டியல் நாளை 6ம் தேதி வெளியிட பட உள்ளது என்றார்.
கோவை புதிய கமிஷனராக சரவண சுந்தர், டி.ஐ.ஜி.,யாக சசி மோகன், வடக்கு துணை கமிஷனராக தேவநாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். புதிய கமிஷனர் சரவண சுந்தர் மற்றும் டி.ஐ.ஜி., சசி மோகன் ஆகியோர் கடந்த 1ம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டனர். இந்நிலையில் கோவை வடக்கு துணை கமிஷனராக தேவநாதன் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இவர், சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி.,யாக பணியாற்றி வந்தார்.
சேலத்தை சேர்ந்த சுற்றுச்சூழல் செயற்பாட்டாளரான பியூஸ் மனுஷ், நேற்று கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது புகார் மனு அளித்தார். அதன்பின், அவர் நிருபர்களிடம் கூறுகையில், கோவையில் அண்ணாமலை மத கலவரத்தையும், வன்முறையையும் தனது பேச்சு மூலம் தூண்டி வருகிறார். அதனால் புகார் அளித்துள்ளேன் என்றார்.
கோவை, மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை, பெரியநாயக்கன்பாளையம், மதுக்கரை, போளுவாம்பட்டி உள்ளிட்ட 7 வனச்சரகங்கள் உள்ளது. இந்த 7 வனச்சரகங்களில் புலிகளின் கணக்கெடுப்பு பணிகள் இன்று துவங்கியுள்ளது. இந்த கணக்கெடுப்பு பணிகள் 8 நாட்கள் நடைபெற உள்ளன. கணக்கெடுக்கும் பணியில் வனத்துறையினர் மற்றும் வனவிலங்கு ஆர்வலர்கள் ஈடுபட்டுள்ளனர்
கோவை மாவட்டத்தில் இன்று (04.01.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
கோவை: நெகமம் அடுத்த கானியாலாம்பாளையம் பகுதியில், தனியார் உணவு உற்பத்தி நிறுவனத்தில், தொழிலாளர்கள் கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக கட்டப்பட்டு வந்த கட்டிடம் சரிந்து விழுந்ததில், மேற்கு வங்கத்தை சேர்ந்த ரியாஸ்சன்சேக் (28), பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சன்னர்மஜித் (40) ஆகிய இருவரும், இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். இதுகுறித்து நெகமம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோயம்புத்தூர் மாவட்ட காவல்துறை, பொதுமக்களுக்காக எச்சரிக்கை புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த பதிவில், உங்களது மொபைல் தொலைந்தால் அல்லது திருடப்பட்டால், உங்களுடைய அனைத்து கணக்குகளிலும் உள்ள கடவுச்சொற்களை உடனே மாற்றி விடுமாறும் மற்றும் 1930 என்ற சைபர் கிரைம் கட்டணமில்லா சேவையையும், www.cybercrime.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியில் புகார் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தக்காளி மற்றும் பப்பாளி பழத்திலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி (7.01.2025 – 8.01.2025) ஆகிய நாட்களில் வழங்கப்படவுள்ளது. இதில் தக்காளி – சாஸ், கெட்சப், பேஸ்ட், பியுரி, பப்பாளி – ஜாம், ஸ்குவாஷ், பேஸ்ட், கேண்டி வழங்கப்பட உள்ளது. மேலும் விவரங்களுக்கு 94885-18268 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என பல்கலைக்கழகம் இன்று அறிவித்துள்ளது.
கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தக்காளி மற்றும் பப்பாளி பழத்திலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி (7.01.2025 – 8.01.2025) ஆகிய நாட்களில் வழங்கப்படவுள்ளது. இதில் தக்காளி – சாஸ், கெட்சப், பேஸ்ட், பியுரி, பப்பாளி – ஜாம், ஸ்குவாஷ், பேஸ்ட், கேண்டி வழங்கப்பட உள்ளது. மேலும் விவரங்களுக்கு 94885-18268 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என பல்கலைக்கழகம் இன்று அறிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.