Coimbatore

News January 7, 2025

பலூன் திருவிழா: பொள்ளாச்சியில் 14ஆம் தேதி

image

தமிழக அரசின் சுற்றுலாத் துறை, தனியார் அமைப்புடன் இணைந்து ஆண்டுதோறும் சர்வதேச பலூன் திருவிழாவை நடத்தி வருகிறது. இதற்காக வெளிநாடுகளில் இருந்து ராட்சத பலூன்கள் கொண்டு வரப்பட்டு பறக்கவிடப்படும். இந்நிகழ்வை காண, பலூன்களில் ஏறி பயணம் செய்ய ஆயிரக்கணக்கான மக்கள் பலூன் திருவிழாவில் கூடுவார்கள். அதன்படி வரும் ஜன.14 முதல் 16 ஆம் தேதி வரை பொள்ளாச்சி ஆச்சிப்பட்டி ரைட் கொங்கு சிட்டியில் நடைபெற உள்ளது.

News January 7, 2025

கோவையில் இன்றைய நிகழ்வுகள்

image

கோவையில் இன்று (7.1.25) முக்கிய நிகழ்வுகள். 1) மாநில கைத்தறி கண்காட்சி கல்பனா திருமண மண்டபம் கவுண்டம்பாளையத்தில் இன்று நடைபெறுகிறது. 2) பதிவு பெற்ற பொறியாளர்களுக்கு கலந்தாய்யு கூட்டம் மாநகராட்சி கலையரங்கத்தில் மாலை 4 மணிக்கு நடக்கிறது. 3) சிறப்பு செய்முறை வகுப்குகளில் பங்கேற்க வாய்ப்பளித்து பாரதியார் பல்கலை அழைப்பு விடுத்துள்ளது. 4) நீலாம்பூர் பகுதியில் நாளை (8.1.25) மின்தடை ஏற்படுகிறது.

News January 6, 2025

எண்ணெய் வித்துக்களின் அரசியான எள் சாகுபடி

image

கோவை வேளாண்துறை அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில், கோவை ஆண்டிற்கு சராசரியாக 4,327 ஹெக்டேரில், எண்ணெய் வித்து பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. எதிர் வரும் இறவை சாகுபடியில், தைப்பட்டதில் எண்ணெய் வித்துக்களின் அரசியான, எள் சாகுபடி செய்யலாம். எள் குறைந்த வயதுடையது (90 நாட்கள்), அதிக நீர் தேவை இல்லாதது. 250 மி.மீ அளவு மட்டுமே நீர் தேவை உள்ளது. குறைந்த மண்வளத்திலும் சாகுபடி செய்யலாம் என கூறியுள்ளனர்.

News January 6, 2025

இறுதி வாக்காளர் பட்டியலில் கோவைக்கு மூன்றாம் இடம்

image

கோவை மாவட்டத்தில், வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் செய்யும் பணிகள் நடைபெற்றன. பணிகள் முடிவுற்று, இன்று இறுதி வாக்காளர் பட்டியல், ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தலைமையில், அனைத்து கட்சியினர் முன்னிலையில் வெளியிடப்பட்டது. அதன்படி கோவை மாவட்டத்தில் 31,85,594 வாக்காளர்கள் உள்ளனர். அதிக வாக்காளர்களை கொண்ட மாவட்டங்களில் கோவை 3 ஆம் இடத்தை பிடித்துள்ளது.

News January 6, 2025

கோவை எஸ்பி கடும் எச்சரிக்கை

image

கோவை எஸ்பி கார்த்திகேயன் இன்று விடுத்த செய்தி குறிப்பில், போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட-ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற புகார்களுக்கு உடனடியாக காவல்துறை கட்டுப்பாட்டு அறை எண் : 94981-81212, whatsapp எண் : 77081-00100 என்ற எண்களை தொடர்பு கொண்டு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம். ரகசியம் காக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

News January 6, 2025

கஞ்சா சாக்லேட்டுகள் விற்பனை: வடமாநில இளைஞர் கைது

image

கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி அடுத்த, சென்னியாண்டவர் கோவில் அருகே இன்று, வாகன சோதனையை காவல்துறையினர் மேற்கொண்டனர். அப்போது கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ராகேஷ் பாஸ்வான் (27) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து சுமார் 1 ¼ கிலோ கஞ்சா மற்றும் 300 கிராம் கஞ்சா சாக்லேட் ஆகியவற்றை பறிமுதல் செய்து மேற்படி நபரை சிறையில் அடைத்தனர்.

News January 6, 2025

சிறப்பு ரயில் இயக்க கோரிக்கை

image

பொள்ளாச்சி வழித்தடத்தில் கோவை -திண்டுக்கல் அகல ரயில்பாதை பணிகள் நிறைவேற்றப்பட்டு, கடந்த 2015-ம் ஆண்டு முதல் மீண்டும் ரயில் போக்குவரத்து தொடங்கியது. இந்நிலையில் நடப்பாண்டு தைப்பூசத்திற்காக கோவை மாவட்டம் மற்றும் கேரள மாநிலத்தில் இருந்து அதிக அளவில் பக்தர்கள் பழநி செல்வதால், பொள்ளாச்சி வழியாக பழநிக்கு சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News January 6, 2025

வேளாண் பல்கலை.யில் காளான் வளா்ப்பு பயிற்சி

image

கோவை வேளாண் பல்கலையின் பயிா் நோயியல் துறை சாா்பில், மாதந்தோறும் நடைபெறும் காளான் வளர்ப்பு இன்று (ஜன.6) நடக்கிறது. இதில் ரூ.590 செலுத்தி பங்கேற்கலாம். பங்கேற்பாளா்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சியானது, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். பங்கேற்க விரும்புபவா்கள் பயிா் நோயியல் துறையை அணுகலாம். விபரங்களுக்கு 0422 – 6611336, 6611226 என்ற எண்களை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News January 6, 2025

கோவை புறநகர் இரவு நேர ரோந்து காவலர்களின் விவரம்

image

கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளான, மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை, அன்னூர், கோவில்பாளையம், கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி, ஆனைமலை, வால்பாறை, பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், இன்றிரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவலர்களின் விவரங்களை, கோவை எஸ்பி அலுவலகம் இன்று வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் இதனை பயன்படுத்தி கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News January 5, 2025

கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம் 

image

கோவை மாவட்டத்தில் இன்று (05.01.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!