Coimbatore

News January 8, 2025

கோவையில் வாகனங்கள் ஏலம்

image

“கோவை மாவட்ட காவல் துறையினரால், மதுவிலக்கு குற்றங்களில் கைப்பற்றப்பட்டு, அரசுடமையாக்கப்பட்ட, 3 கனரக வாகனங்கள், 7 நான்கு சக்கர வாகனங்கள், 62 இருசக்கர வாகனங்கள் ஆக மொத்தம் 72 வாகனங்கள், வரும், 23.01.2025 ஆம் தேதி கோவை அவினாசி சாலையிலுள்ள, கோவை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வைத்து, பொது ஏலத்தில் விடப்படும்” என்று கோவை மாநகர காவல் ஆணையர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

News January 8, 2025

கோவை கொலை: மூன்று தனிப்படைகள் அமைப்பு!

image

கோவை வெள்ளலூரில் இன்று, இளைஞர் ஒருவரை வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், சம்பந்தப்பட்டவர்களை, உடனடியாக கைது செய்ய, மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளை விரைவில் பிடிக்க மாநகர காவல் ஆணையர் சரவணசுந்தர், காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். இதனால் காவல்துறையினர் குற்றவாளிகளை பிடிக்க, பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

News January 8, 2025

உள்ளாட்சி அமைப்பை கலைக்கக் கூடாது: எஸ்.பி.வேலுமணி

image

சட்டப்பேரவை எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி நேற்று வெளியிட்ட அறிக்கையில், கோவை மாவட்டத்தில் மட்டும் 15 கிராம ஊராட்சி அமைப்புகள் கலைக்கப்படுவது மிகவும் கவலையளிக்கிறது. மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் முடிவு கடும் கண்டனத்துக்குரியது. மக்களின் விருப்பத்தையும், மத்திய அரசின் திட்டங்கள், வேலைவாய்ப்புகளை கருத்தில் கொண்டு இந்த திட்டத்தை திமுக அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

News January 8, 2025

லாட்டரி சீட்டு விற்பனை செய்த 118 நபர்கள் கைது

image

கோவை காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாவட்டம் முழுவதும், நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, வெளி மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனைக்கு வைத்திருந்த, 110 வழக்குகள் பதிவு செய்யப்பட்டும், 118 பேரை கைது செய்தும், அவர்களிடமிருந்து இரண்டு சக்கர வாகனம்-4, செல்போன்-11 மற்றும் ரூபாய் 2,24,00,170/- பறிமுதல் செய்தனர் என்றார்.

News January 8, 2025

மருதமலை செல்லும் பக்தர்களுக்கு கவனத்திற்கு

image

கோவை மருதமலை தேவஸ்தானம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மருதமலை எதிர்வரும் 14.01.2025 முதல் 19.01.2025 பொங்கல் திருவிழா (ம) தொடர் விடுமுறையை முன்னிட்டு,  அதிக அளவில் பக்தர்கள் வருவதை கருத்திற்கொண்டு அந்த நாளில் மலைக்கோயிலுக்கு, நான்கு சக்கர வாகனங்களில் செல்வதற்கு பக்தர்களுக்கு அனுமதியில்லை. இரு சக்கர வாகனங்கள் மூலமாகவும், மலைப்படிகள் வழியாகவும், பக்தர்கள் செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 8, 2025

HMPV வைரஸ்: அச்சம் வேண்டாம்

image

தமிழகத்தில் சென்னை, சேலத்தில் 2 பேருக்கு எச்.எம்.பி.வி பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனால் பொதுமக்களிடம் பதட்டம் ஏற்பட்டது. மீண்டும் ஒரு வைரஸ் பரவலா என மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதுகுறித்து பொள்ளாச்சி அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ராஜா கூறுகையில், இது மழை காலத்தில் வரும் ப்ளு காய்ச்சல் போன்றதும். இந்த வைரஸ் குறித்து அச்சம் அடைய வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

News January 7, 2025

கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (07.01.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News January 7, 2025

சைபர் கிரைம் மோசடியால் ரூ.94 கோடி இழப்பு

image

2024ம் ஆண்டு கோவை மாநகர சைபர் கிரைம் போலீஸ் ஸ்டேஷனில், 8,254 புகார்கள் பெறப்பட்டுள்ளன. அதில் 5,945 பண மோசடி புகார்கள். 300 எப்.ஐ.ஆர்.பதிவு செய்யப்பட்டுள்ளது. ரூ. 93 கோடியே 95 லட்சத்து,56 ஆயிரத்து,305 இழப்பு ஏற்பட்டுள்ளது. அதில் ரூ.11 கோடியே 16 லட்சத்து 24 ஆயிரத்து 523 மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 50 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்என சைபர் கிரைம் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

News January 7, 2025

சுற்றுலாப் பயணிகளுக்கு  தடை

image

வால்பாறையில் இருந்து மளுக்குப்பாறை வழியாக கேரளாவின் அதிரப்பள்ளி செல்லும் ரோடு புதுப்பிக்ககும் பணி நடப்பதால் நேற்று முதல் 12ம் தேதி வரை சுற்றுலா வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 20-ம் தேதி முதல் பிப்ரவரி 5-ம் தேதி வரையிலும் சுற்றுலா வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு பஸ்கள் மற்றும் ஆம்புலன்ஸ் செல்ல தடை இல்லை என கேரளா மாநில நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

News January 7, 2025

திருநங்கையர்களில் ஒருவருக்கு விருது!

image

கோவை மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 2025 ஆம் ஆண்டு திருநங்கையர்களில், சிறப்பாக முன்னேறியவர்களில் ஒருவருக்கு, முன்மாதிரி விருது வழங்கப்படும். மேலும் ரூ.1 லட்சம்  காசோலை வழங்கப்பட உள்ளது. திருங்கையர் தினமான ஏப்ரல்-15 அன்று, வழங்குவதற்கு தகுதியான திருநங்கைகள், மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகி, விருதிற்கான விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!