India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவையில், எதிர்வரும் (15.01.2025) அன்று “திருவள்ளுவர் தினத்தை” முன்னிட்டு, அன்றைய தினம் ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, கோழி இறைச்சி மற்றும் பன்றி இறைச்சி கடைகளை மூடும்படி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி செயல்படுவோர் மீது மாநகராட்சி சட்ட விதிகளின் படி, அபராதம், பறிமுதல் மற்றும் உரிமம் இரத்து போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என, ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் இன்று தெரிவித்துள்ளார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் 3 மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் நடுத்தர குடும்பத்தினர் அவதிக்குள்ளாகினர். மேலும் அரசு பேருந்து ரயில் கிடைக்காதவர்கள் ஆம்னி பேருந்து நிலையம் நாட வேண்டிய சூழ்நிலை உள்ளது. தற்போது 700 ரூபாய் வசூலிக்கப்பட்ட வந்த நிலையில் 2300 உயர்த்தப்பட்டுள்ளது தென்காசி ரூ.1,900, நாகர்கோவில் ரூ.2,000 வசூலிக்கப்படுகிறது.
பொங்கல் பண்டிகை காலங்களில் ஆம்னி பெயர்களை கூடுதல் கட்டுன வசலிப்பது தொடர்பாக பொதுமக்களில் இருந்து தொடர்ந்து புகார் எழுந்து வந்த நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் என நேற்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பேருந்துகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கட்டணம் குறித்து பொதுமக்கள் 9384808304 என்று தொடர்பு கொண்டு புகார் கூறலாம்.
தமிழர் திருநாளை முன்னிட்டு, பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று (09/01/2025) சென்னை சைதாப்பேட்டையில் துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, கோவை மாவட்டம், கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியம், காட்டம்பட்டி பகுதியில் உள்ள நியாய விலை கடையில் பொதுமக்களுக்கு பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே. ஈஸ்வரசாமி வழங்கி துவக்கி வைத்தார். தொடர்ந்து, சிறப்புரை ஆற்றினார்.
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டை இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். தொடர்ந்து பேசிய அவர், சென்னை போன்ற நகரங்களில் மட்டும் வளர்ச்சி என்று இல்லாமல் அனைத்து நகரங்களிலும் வளர்ச்சியை கொண்டு செல்லும் விதமாக கோவையில் 2 மில்லியன் சதுர அடியில் ஏஐ தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெருகும் என பேசினார்.
அன்னுார் அருகே உள்ள மன்னீஸ்வரர் கோவில் தேரோட்டம் நடைபெறும் வரும் 10தேதி நடைபெறவுள்ளது. இதனால் அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்க வேண்டும் என கோவில் அறங்காவலர் குழு சார்பில், கோவை கலெக்டரிடம் ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில் முகாமில் மனு அளித்துள்ளனர். ஆனால் இதுவரை அறிவிப்பு வெளியாகவில்லை. 10ம்தேதி உள்ளூர் விடுமுறை அளித்தால், மக்கள் தேர்த்திருவிழாவில் பங்கேற்க உதவியாக இருக்கும் என மக்கள் தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஆம்னி பேருந்துகள் அதிக அளவில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார். மேலும் பொதுமக்கள் ஆம்னி பேருந்துகளின் கூடுதல் கட்டணம் வசூலித்தால், 9384808304 என்ற வட்டாரப் போக்குவரத்து அலுவலக எண்ணிற்கு, புகார் தெரிவிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
மகா கும்பமேளாவை கருத்தில் கொண்டு கோவை, திருப்பூர், ஈரோடு சேலம் வழியாக, மங்களுர் முதல் பனாரஸ் வரை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் ஜனவரி 18ஆம் தேதி மற்றும் பிப்ரவரி 15ஆம் தேதி, மாலை 4.15 க்கு மங்களுரில் இருந்து புறப்படும் திங்கள்கிழமை மதியம் 2.50 பனாரஸ் சென்றடையும் என இன்று தெரிவித்துள்ளனர். மறு மார்க்க ரயில் ஜனவரி 21, பிப்ரவரி 18 ஆகிய தேதிகளில் மாலை 6.20க்கு பனாரஸில் இருந்து புறப்படும்.
கோவை மாவட்டத்தில் இன்று (08.01.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக, சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் இன்று தெரிவித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, திருவனந்தபுரத்தில் இருந்து போத்தனூர், திருப்பூர், ஈரோடு வழியாக சென்னை செல்லும் சிறப்பு ரயில், திருவனந்தபுரத்தில் இருந்து வரும் 15ம் தேதி மாலை 4.25 க்கு புறப்பட்டு, இரவு 11 மணிக்கு சென்னை செல்லும். மறுநாள் மதியம் சென்னையில் இருந்து மதியம் 1மணிக்கு புறப்படும்.
Sorry, no posts matched your criteria.