Coimbatore

News January 11, 2025

பொள்ளாச்சி விவகாரம்: ஆதாரம் சமர்ப்பிப்பு

image

சட்டபேரவையில் பொள்ளாச்சி வன்கொடுமை குறித்து அதிமுக, திமுக இடையே நேற்று கடும் விவாதம் நடைபெற்றது. இதில் திமுகவினர் 12நாள் பிறகே FIR பதிவு செய்யப்பட்டதாகவும், அதிமுகவினர் 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் கூறிவந்தனர். இந்நிலையில் இன்று சட்டபேரவை கூடியதும் திமுக, அதிமுக என 2 கட்சி சார்பில் சபாநாயகரிடம் ஆதாரங்கனை சமர்ப்பித்துள்ளனர். இதுகுறித்த விவாதம் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

News January 11, 2025

இரு நாட்கள் சிறப்பு வரி வசூல் முகாம்கள்

image

கோவை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் இன்று விடுத்த செய்தி குறிப்பில், பொதுமக்கள் சொத்து வரி உள்ளிட்ட அனைத்து வரியினங்களை மக்கள் எளிதில் செலுத்த அனைத்து சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (அரசு விடுமுறை நாட்கள் நீங்கலாக) சிறப்பு வரிவசூல் முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி 5 மண்டலங்களிலும் ஜன.11, 12 ஆம் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

News January 11, 2025

கூடுதல் கட்டணம் வசூலா: What’s app பண்ணுங்க

image

பொங்கல் பண்டிகை விடுமுறையையொட்டி கோவையில் இருந்து வெளியூர்களுக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகள் வழக்கத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக கூறப்படுகிறது. எனவே, மக்களே உங்க கிட்ட கூடுதல் கட்டணம் வசூல் செய்தால் உடனே 93848-08304 என்ற எண்ணுக்கு பயணம் செய்யும் தேதி, செல்லும் இடம், டிக்கெட் கட்டணத்துடன் வாட்ஸ் அப் பண்ணுங்க. Share பண்ணுங்க

News January 11, 2025

கோவை கோட்டத்திலிருந்து 1,520 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

கோவை கோட்டத்தில் இருந்து வெளியூா்களுக்கு இன்று முதல் 13ஆம் தேதி வரை இயக்க உள்ளதாக அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. அதன்படி கோவை – மதுரை இடையே 250 சிறப்பு பேருந்துகள், கோவை – திருச்சி 200, கோவை – தேனி 150, கோவை – சேலம் 250, ஈரோடு – மதுரை 100, ஈரோடு – திருச்சி 100, திருப்பூர் – மதுரை 200, திருப்பூர் – திருச்சி 200, திருப்பூர் – தேனி 70 என 1,520 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

News January 10, 2025

கயிறு இழுத்தல் போட்டியில் கலந்து கொண்ட ஆட்சியர்

image

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை முதல் மாலை வரை பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள், பொங்கல் வைத்து வழிபட்ட கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி உறியடி, கயிறு இழுத்தல் என பாரம்பரிய போட்டிகளை விளையாடி அசத்தினார். இந்த நிகழ்வில் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

News January 10, 2025

ரேஷன் கடைக்கு வர முடியாதவர்களுக்கு எப்போது பரிசு?

image

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 11 லட்சத்து 12 ஆயிரத்து 635 ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு இன்று முதல் வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் டோக்கனில் குறிப்பிட்ட தேதியில் ரேஷன் கடைக்கு வர முடியாதவர்களுக்கு 13ம் தேதி பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று கோவை கலெக்டர் கிராந்திகுமார் அறிவித்துள்ளார்.

News January 10, 2025

சீமான் மீது கோவையில் வழக்கு பதிவு

image

தந்தை பெரியாரை அவமரியாதையாக பேசியதாக, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, கோவை போத்தனூர் காவல் நிலையத்தில், இன்று வழக்கு பதிவு செய்தனர். கோவை வெள்ளலூரைச் சேர்ந்த பிரபாகரன் என்ற வழக்கறிஞர் அளித்த புகாரின் அடிப்படையில், இரண்டு பிரிவுகளின் கீழ், மாநகர போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 10, 2025

போத்தனூர் வழியாக பெங்களூருக்கு சிறப்பு ரயில்

image

போத்தனூர் ரயில் நிலையம் வழியாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு எர்ணாகுளம் – பெங்களூர் எஸ்வந்த்பூர் சிறப்பு ரயில் ஒன்றை ரயில்வே அறிவித்துள்ளது. 10–01–25 எஸ்வந்த்பூரில்(06571) புறப்பட்டு மறுநாள் 11–01–25 எர்ணாகுளம் சென்று அடைகிறது. மறு மார்க்கத்தில் 11–01–25 எர்ணாகுளத்தில்(06572)இருந்து புறப்பட்டு அன்று இரவு எஸ்வந்த்பூர் சென்றடைகிறது. பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

News January 10, 2025

கோவையில் இருந்து இத்தனை சிறப்பு பேருந்துகளா?

image

கோவை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், கோவை முதல் மதுரை வரை 250 பேருந்துகள், கோவை திருச்சி 200 பேருந்துகள், கோவை தேனிக்கு 150 பேருந்துகள், கோவை சேலம் 250 பேருந்துகள், கோவை மதுரைக்கு 100 பேருந்துகளும், அதே போல பல்வேறு ஊர்களுக்கும் மொத்தமாக 1520 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக இன்று போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

News January 9, 2025

கோவை: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம் 

image

கோவை மாவட்டத்தில் இன்று (09.01.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!