India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கணியூரில், கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த இளைஞரை, போலீசார் கைது செய்தனர். கணியூர் பெருமாள் கோவில் பின்புறம், கஞ்சா விற்பனை நடைபெறுவதாக, கருமத்தம்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சோதனை செய்து, கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த, சிங்காநல்லூர் காமாட்சிபுரம் பகுதியை சேர்ந்த, சுருளி(எ) சுரேந்திரன் என்பவரை கைது செய்து, 1.3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், திருநெல்வேலி, திருச்சி, சேலம், மதுரை ஆகிய மாவட்டங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளை விசாரிக்க தனி சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். பெண்களின் பாதுகாப்பிற்காக சட்டப்பேரவையில் தமிழக முதலமைச்சர் அறிவிப்பு ஒன்றை அறிவித்து உள்ளார்.
கோவை மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், பொதுமக்களாகிய உங்கள் விடுமுறை, பயணத் திட்டங்கள் போன்றவற்றை சமூக ஊடகங்களில் அறிவிக்காதீர்கள். அப்படி நாம் சமூக வலைத்தளங்களில் பதிவிடும் போது, குற்றவாளிகள் அதை திருட்டு மற்றும் வேறு மாதிரியான குற்ற சம்பவம் போன்றவற்றுக்கு வாய்ப்பாகப் பயன்படுத்தலாம் என குறிப்பிட்டுள்ளனர். (இதை மற்றவர்களுக்கும் SHARE செய்யுங்கள்)
கோவை மாவட்டத்தில் இன்று (11.01.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், திருநெல்வேலி, திருச்சி, சேலம், மதுரை ஆகிய மாவட்டங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளை விசாரிக்க தனி சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். பெண்களின் பாதுகாப்பிற்காக சட்டப்பேரவையில் தமிழக முதலமைச்சர் அறிவிப்பு ஒன்றை அறிவித்து உள்ளார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவையில் உள்ள பொதுமக்கள் சொந்த ஊருக்கு செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் இன்று கோவை ரயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் கோவை ரயில் நிலைய சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் வாகனங்கள் ஊர்ந்து சென்று வருகிறது.
கோவை சர்வதேச விமான நிலையத்தை நேற்று ஜன.10 ஒரே நாளில் 10,000க்கும் அதிகமான உள்நாட்டு பயணிகள் பயன்படுத்தியுள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது. இது விமான நிலைய வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. மேலும், கோவை விமான நிலைய உள்நாட்டு பயணிகள் வரலாற்றில் 10,000க்கும் அதிகமான பயணிகள், நிலையத்தை ஒரே நாளில் பயன்படுத்துவது இதுவே முதன்முறை என பார்க்கப்படுகிறது.
சைபர் கிரைம் மோசடி அதிகரித்துள்ளதால், கோவை மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என கோவை சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். அதில் புத்தாண்டு, பொங்கல் சலுகையாக 3 மாத ரீசார்ஜ் இலவசம், அதில் உள்ள லிங்கை கிளிக் செய்யவும் என எஸ்எம்எஸ் வந்தால் நம்ப வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கு விசாரணை தொடர்பான ஆதாரங்களை சபாநாயகரிடம் இன்று திமுக, அதிமுகவினர் ஒப்படைத்தனர். இதுகுறித்து சபாநாயகர் கூறுகையில், 2 தரப்பு ஆவணங்களில் பார்த்ததில் முதல்வர் கூறியது தான் உண்மை என்றார். முன்னதாக, 12 நாட்களுக்கு பின் FIR பதிவு செய்யப்பட்டதாக முதல்வர் ஸ்டாலின் கூறிய நிலையில், 1 நாளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது என இபிஎஸ் கூறியிருந்தார்.
சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் நேற்று விடுத்த செய்தி குறிப்பில் பொங்கலை முன்னிட்டு சென்னை சென்ட்ரலில் இருந்து ஜன.11 ஆம் தேதி பிற்பகல் புறப்படும் சென்னை – மதுரை சிறப்பு ரயில் மறுநாள் காலை மதுரை ரயில் நிலையத்தை அடையும். மறுமார்க்கமாக மதுரை ரயில் நிலையத்தில் இருந்து ஜன.12ஆம் தேதி இரவு புறப்படும் ரயில் மறுநாள் காலை சென்னை சென்றடையும். இந்த ரயில் கோவை வழியாக இயக்கப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.