Coimbatore

News January 14, 2025

புது மைல்கல்லை தொட்ட கோவை விமான நிலையம்

image

கோவை வந்த விமானங்களில், கோவை வந்தோர் 5,042, கோவையில் இருந்து பிற முக்கிய இந்திய நகரங்களுக்கு சென்ற பயணிகள் 5,092. இத்துடன் 10,000க்கும் அதிகமான சர்வதேச பயணிகள் விமான நிலையத்தை பயன்படுத்தி உள்ளனர். 2025ல் இது கோவை விமான நிலையத்துக்கு ஒரு புதிய மைல்கல் என பார்க்கப்படும் நிலையில், விமான நிலைய வரலாற்றில் 10,000க்கும் அதிகமான பயணிகள் நிலையத்தை ஒரே நாளில் பயன்படுத்துவது இதுவே முதல்முறை.

News January 14, 2025

கோவை: ஷார்ஜாவுக்கு 2 டன் கரும்பு அனுப்பி வைப்பு

image

கோவை விமான நிலையத்தில் இருந்து, வழக்கமாக ஒவ்வொரு முறையும், 3 டன் வரை சரக்குகள் கையாளப்படுகின்றன. இதற்காக காய்கறிகள், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் உள்ளிட்ட பொருள்கள் முன்பதிவு செய்யப்படும். இதில் கடந்த ஜன.10, 11ஆம் தேதிகளில் மட்டும், கோவை விமான நிலையத்தில் இருந்து, மதுரை, திண்டுக்கல் பகுதிகளில் இருந்து வரவழைக்கப்பட்ட, 2 டன் கரும்புகள் முன்பதிவு செய்யப்பட்டு ஷார்ஜாவுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

News January 14, 2025

தைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு ரயில் இயக்கம்

image

தைப்பூச விழாவினை முன்னிட்டு (05.02.2025) முதல் (14.02.2025) வரை கோவை – திண்டுக்கல் இடையே (06106-06107) சிறப்பு MEMU முன்பதிவில்லா விரைவு ரயில் சேவை போத்தனூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலை, பழநி வழியாக இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த சேவையானது பக்தர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News January 14, 2025

கோவை ரயில் பயணிகள் கவனத்திற்கு

image

கோவை ரயில்வே துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவனந்தபுரம் வடக்கிலிருந்து போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக விஜயவாடாவுக்கு ஒரு வழி சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. ரயில் எண்.06152 திருவனந்தபுரம் வடக்கிலிருந்து 15.01.2025 புதன்கிழமை மதியம் 01.00 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் மாலை 05.20 மணிக்கு விஜயவாடா சென்றடையும். இந்த ரயில் போத்தனூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்றனர்.

News January 14, 2025

கோவைக்கு 52 இருசக்கர ரோந்து வாகனங்கள்

image

கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், கோவை மாநகர காவல் எல்லையில் உள்ள அனைத்து மாநகராட்சி மற்றும் பஞ்சாயத்து வார்டுகளை உள்ளடக்கி, காவல் நிலையம் வாரியாக, 52 இருசக்கர வாகன ரோந்து மேம்படுத்தப்பட்டு அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதனை கோவை மாநகர காவல் ஆணையர் ரோந்து காவல்துறையினருக்கு இன்று வழங்கினார்.

News January 13, 2025

 கோவை: மதுக்கடைகளை மூட உத்தரவு

image

கோவை மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபானக்கடைகள்/பார்கள் (FL1) நட்சத்திர ஹோட்டல்களில்(FL3) செயல்படும் மதுக்கூடங்கள், தமிழ்நாடு ஹோட்டல் சுற்றுலாத்துறை மூலமாக நடத்தப்படும் மதுக்கூடங்கள்(FL3AA) உள்ளிட்ட அனைத்து உரிமத்தளங்களையும் எதிர்வரும் 15.01.2025 (புதன் கிழமை) திருவள்ளுவர் தினத்தன்று மூட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

News January 13, 2025

கோவை: விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

image

நாடு முழுவதும் உள்ள 33 சைனிக் பள்ளிகளில் 2025-26 ஆம் கல்வி ஆண்டில் 6, 9 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான தேசிய நுழைவு தேர்வு பிப்ரவரியில் நடைபெற உள்ளது. தேர்வுக்கான இணையதள விண்ணப்ப பதிவு, கடந்த டிசம்பர் 24ல் இருந்து நடந்து வருகிறது. விண்ணப்பிக்கும் அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. விருப்பம் உள்ளவர்கள் https://exams.nta.ac.in/AIS என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

News January 13, 2025

கோவை மாநகர காவல் துறை சார்பில் விழிப்புணர்வு

image

கோவை மாநகர காவல் துறை இன்று தனது முகநூல் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நடிகர் அஜித்குமார் கார் பந்தயத்தில் மூன்றாவது இடத்தை பிடித்ததை குறிப்பிட்டு, திறமை இருந்தால் அவர் மாதிரி களத்தில் போய் ஜெயிச்சு முன்னேற பாரு. அதை விட்டுவிட்டு ரோட்டில் சாகசத்தை காட்டுறேன்னு கேஸ் வாங்கிட்டு கிடக்காதே என்று குறிப்பிட்டு காவல்துறையினர் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர்.

News January 13, 2025

மாடுகளுக்கு பொங்கல் கொடுக்கும்போது கவனம் தேவை

image

மாட்டு பொங்கல் திருவிழாவின் போது, வேளாண் பெருமக்கள், மாடுகளுக்கு பொங்கல் கொடுக்கும் போது, கவனம் தேவை. பொங்கலால் மாடுகளுக்கு செரிமான பிரச்னையை ஏற்படுத்தும். வயிறு உப்புசம் ஆகி, மாடுகள் மூச்சு விட சிரமப்படும். உடனடியாக கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்காவிட்டால் அவற்றின் உயிருக்கே ஆபத்தாகி விடும். எனவே இதனை தவிர்க்கப்பட வேண்டும் என, கோவை மண்டல இணை இயக்குனர் ராஜாங்கம் தெரிவித்துள்ளார்.

News January 12, 2025

கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (12.01.2025) இரவு ரோந்து பணிக்கு, காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை, மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும், அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!