India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோயம்புத்தூர் மாவட்ட காவல்துறையினர் இன்று தங்களது முகநூல் பக்கத்தில்பொதுமக்களுக்கு ஓர் எச்சரிக்கை பதிவை வெளியிட்டுள்ளனர். அதில், ஆன்லைன் மூலம் உங்களை யாரேனும் தொடர்பு கொண்டால் அவர்களை நம்ப வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. அதாவது, தீங்கிழைக்கும் நோக்கத்துடன் நம்பிக்கையை வளர்க்கும் ஆன்லைன் அந்நியர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
கோவை சிட்டி போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் நேற்று விடுத்த செய்தி குறிப்பில், மாநகரில் தொடர் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவோரின் நடவடிக்கைகள் குறித்து நேரடியாகவும், ரகசிய விசாரணையும் நடத்தியதில் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வருவது தெரிந்தது. இவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுக்க அஞ்சுகின்றனர். இதனையடுத்து 27 பேரையும் 6 மாதங்களுக்கு மாநகரை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கோவை கணபதி அருகே தம்பதி பீப் கடை வைத்ததற்கு பாஜக பிரமுகர் மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைக் கண்டிக்கும் விதமாக கோவை மாவட்ட பாஜக அலுவலகம் மீது மாட்டிறைச்சி வீசி போராட்டம் நடத்த முயன்ற ஆதி தமிழர் கட்சியினர் 5 பேர் கைது செய்யப்பட்டனர். சாலையில் படுத்து கொண்டும் போராட்டம் நடத்தினார்கள். அவர்களை காவல்துறையினர் குண்டுகட்டாக தூக்கிசென்று கைது செய்தனர்.
வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை, நேற்றிரவு பெரியநாயக்கன்பாளையம் பழைய புதூர் பகுதியில், சுமார் 8 மணியளவில் நுழைந்தது. அப்போது, அப்பகுதியை சேர்ந்த முதியவர் வேலுமணி என்பவரை யானை தாக்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். வனத்துறையினர், போலீசார் விரைந்து சென்று, சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, கோவை ஜிஹெச் அனுப்பி வைத்தனர். யானையை விரட்டும் பணி நடைபெற்று வருகிறது.
தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கோவை ராமகிருஷ்ணன் இன்று கூறுகையில், தமிழர்களுக்கு தன்மானத்தை ஊட்டிய பெரியாரை சீமான் இழிவுபடுத்துகிற செயல் ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் மன வேதனையையும், கொந்தளிப்பையும் உண்டாக்கி வருகிறது. பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் வரும் ஜன.22 சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
கோவை கலெக்டர் கிராந்திகுமார் பாடி இன்று விடுத்த செய்தி குறிப்பில், தேசிய தொழில் பழகுநர் ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ், தமிழக அரசு வேலைவாய்ப்பு, பயிற்சி துறை சார்பாக, மாவட்ட அளவில் தேசிய தொழில் பழகுநர் சேர்க்கை முகாம், அரசு ஐடிஐயில் ஜன.20 ஆம் தேதி நடக்கிறது. மேலும், விவரங்களுக்கு 95665 31310, 94864 47178 என்ற எண்களை தொடர்பு கொண்டு தகவல் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை வானிலை மைய அதிகாரிகள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவையில் ஒரு சில பகுதிகளில் மிதமான மழையும், நாளை லேசான மழையும் பதிவாக வாய்ப்புள்ளது. நாளை குறைந்தது 23 டிகிரி செல்சியஸ் முதல், அதிகபட்சம் 30 டிகிரி செல்சியஸ் வரை, வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது. ஜனவரி, 16,17ம் நாட்களிலும் குறைந்தது, 21 டிகிரி செல்சியஸ் முதல் அதிகபட்சம் 31 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது.
அதிமுக தகவல் தொழில்நுட்ப துறையின் (ஐடிவிங்) தலைவர் கோவை சத்யன் சிறிது காலம் சமூகவலைதள பக்கங்களில் இருந்து விலகி கொள்வதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘விடை பெறுகிறேன். டிவிட்டர், இன்ஸ்டா, முகநூல் மற்றும் திரெட் சமூக வலைதளங்களில் இருந்து சில மாதங்கள் விலக முடிவு செய்துள்ளேன். மீண்டும் சந்திக்கும் வரை’ என குறிப்பிட்டுள்ளார்.
அரசு அதிகாரிகளைப் போல ஆள்மாறாட்டம் செய்யும் மோசடி நபர்கள், பாதிக்கப்பட்டவரை கைது செய்வதாக அச்சுறுத்துதல், வீடியோ அழைப்பு மூலம், பிணை மற்றும் தீர்வுக்காக பணம் பறித்தல். இதுபோன்ற ஆள்மாறாட்ட மோசடியில் சிக்கிக் கொள்ளாதீர்கள். இதுபோன்ற அழைப்புகளைப் புறக்கணியுங்கள் மற்றும் பணத்தை அனுப்பவோ/மாற்றவோ வேண்டாம். முக்கியமான/தனிப்பட்ட தகவல்களைப் பகிர வேண்டாம் என கோவை மாநகர காவல்துறை இன்று அறிவுறுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் நடைபெற்றன. இதில் கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி பிரியதர்ஷினி கவின்கலை, நுண்கலை பிரிவிற்கான போட்டிகளில் மணல் சிற்பம் செய்து, முதல் பரிசு பெற்றுள்ளார். தமிழகத்தில் உள்ள 35 மாவட்டங்களில் இருந்து கலந்து கொண்ட மாணவர்களில் கோவை மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.