India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை வெதர்மேன் சந்தோஷ் கிருஷ்ணன் இன்று (ஜனவரி.17) தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கொங்கு மண்டல பகுதிகளில் வரும் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்நாட்களில் கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படவும் அவ்வப்போது சாரல் மழை பெய்யவும் வாய்ப்புள்ளது என அவர் கணித்துள்ளார்.
கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவை நாடாகவே ஏற்க மறுக்கும் திமுகவின் தேசவிரோத பாதையில் காங்கிரஸ் கட்சியும் பயணிக்க தொடங்கி விட்டது என்பதையே ராகுல் காந்தியின் பேச்சு காட்டுகிறது. அதனால்தான் திமுகவைப்போல மாநில கட்சியாக காங்கிரஸ் சுருங்கிக் கொண்டிருக்கிறது. திமுகவின் இந்த இரட்டை வேடத்தை கபட நாடகத்தை மக்கள் நம்ப மாட்டார்கள் என்றார்.
கோவை சர்வதேச விமான நிலையத்திலிருந்து இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை அதிகரிப்பால், கோவை விமான நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கோவையிலிருந்து சென்னைக்கு, 10, மும்பைக்கு 6, ஐதராபாத், பெங்களூருக்கு தலா 5, டில்லிக்கு 4, புனே, கோவாவுக்கு தலா 1 என, பல்வேறு விமான நிறுவனங்களால், மொத்தம் 32 உள்ளூர் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
தமிழக அரசு பொங்கல் விழாவை முன்னிட்டு அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பை வழங்க உத்தரவிட்டது. அதன்படி கோவை மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு கடந்த 9 முதல் 13 ஆம் தேதி வரை பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது. இதுவரை பொங்கல் தொகுப்பு பெறாதவர்கள், நாளைக்குள் (18ஆம் தேதி) பெற்றுக்கொள்ளலாம் என கோவை மாவட்ட கூட்டுறவு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கடந்த 12ம் தேதி முதல், 15 ம் தேதி வரையில், கோவை, காந்திபுரம், சிங்காநல்லூர், சூலூர், சாய்பாபா காலனி ஆகிய பேருந்து நிலையங்களில் இருந்து, பயணிகளின் வசதிக்காக, கோவை மண்டலத்தில் இருந்து 850 பேருந்துகள் இயக்கப்பட்டன. இச்சிறப்பு பேருந்துகள் வாயிலாக 1.78 லட்சம் மக்கள், தங்களது சொந்த ஊர்களுக்கு பயணித்துள்ளனர் என்று போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவை மாவட்ட கிரிக்கெட் அணிக்கான, 25 வயதுக்கு உட்பட்ட வீரர்கள் தேர்வு, ஆவாரம்பாளையம் ரோட்டில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி மைதானத்தில் வரும், 24ம் தேதி மதியம், 2:30 மணிக்கு நடக்கிறது. பங்கேற்க விரும்பும் வீரர்கள், 1999ம் ஆண்டு செப்., 1ம் தேதி அன்றோ, அதன் பின்னரோ பிறந்திருத்தல் வேண்டும். மேலும் விபரங்களுக்கு, 80729 48889, 94420 02622 ஆகிய மொபைல் போன் எண்களில் தொடர்புகொள்ளலாம்.
கோவை உருமாண்டம்பாளையத்தில் அலுமினிய நிறுவனம் நடத்தி வந்த அரிச்சந்திரன் என்பவருக்கு, பணிக்கு வந்த கலைத்தாயுடன் பழக்கமாகி தகாத உறவு ஏற்பட்டுள்ளது. இவர் திருமணமானவர். இவர் அரிச்சந்திரனிடம் ரூ.2 லட்சம் பெற்று திருப்பி தராமல் வேலையை விட்டு நின்றுள்ளார். ஆத்திரமடைந்த அரிச்சந்திரன், உறவினர் பிரசாந்த் என்பவருடன் சேர்ந்து, அவரை குத்தி கொலை செய்துள்ளார். புகாரின் பேரில் இருவரும் இன்று கைது செய்யப்பட்டனர்.
கோவை மேற்கு ரிங் ரோட்டின் மீதம் உள்ள பகுதிகளை அமைப்பதற்கான நிலம் எடுக்கும் பணிகள் தொடங்கி உள்ளன. இதனால் விரைவில் இந்த ரிங் ரோடு பணிகள் முழுமையாக நிறைவு பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதே வேகத்தில் பணிகள் செல்லும் பட்சத்தில் செப்டம்பர் 2025க்குள் பணிகள் முடிவடையும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
கோவை மாவட்டத்தில், பெரியநாயக்கன்பாளையம், பேரூர், கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய பகுதிகளில் இன்று (ஜனவரி.16) இரவு நேர ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை, மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 டயல் செய்யலாம் என்று, கோவை மாநகர போலீசார், தங்களது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.
கோயமுத்தூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணி தலைவியுமான வானதி சீனிவாசன், பிரிட்டன் பாராளுமன்ற எம்.பி.க்கள் மற்றும் தமிழ் சமூகத்தினருடன் இன்று (ஜன–16) நடைபெற்ற பொங்கல் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார். இந்நிகழ்வை பிரிட்டனில் Tamils Forum மற்றும் தமிழர்களுக்கான அனைத்து கட்சி பாராளுமன்ற குழுக்கள் ஒருங்கிணைத்தது.
Sorry, no posts matched your criteria.