Coimbatore

News January 18, 2025

கோவையில் ஆன்லைனில் நடைபெற்ற நூதன மோசடி

image

கோவையை சேர்ந்தவர் யுவராஜ் (71) இவரை தொடர்பு கொண்ட மர்மநபர்கள் சிலர், பங்குச்சந்தையில் முதலீடு செய்தல் அதிக லாபம் பெறலாம் என்று தெரிவித்தனர். இதை நம்பிய யுவராஜ் 1,00,65,000 தொகையை அவர்கள் கூறிய நிறுவனத்திற்கு முதலீடு செய்து ஏமாற்றம் அடைந்தார். இதுகுறித்து கோவை சைபர் குற்றப்புலனாய்வு நிலையத்தில் நேற்று புகார் அளித்தார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 18, 2025

கோவையில் இன்றைய இரவு ரோந்து காவலர்களின் விவரம்

image

கோவை மாவட்டத்தில், பெரியநாயக்கன்பாளையம், பேரூர், கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய பகுதிகளில் இன்று (ஜனவரி.18) இரவு நேர ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை, மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 டயல் செய்யலாம் என்று, கோவை மாநகர போலீசார், தங்களது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

News January 18, 2025

கோவையில் பொங்கல் தொகுப்பு வாங்க இன்று கடைசி நாள்

image

கோயமுத்தூர் மாவட்டத்தில், பொங்கல் தொகுப்பு வாங்குவதற்கான இன்று கடைசி நாள் என்று கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் திரு ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். பொங்கல் பண்டிகை முன்னிட்டு தமிழக அரசாங்கம் ஜனவரி மாதம் 9 தேதி முதல் 13 ம் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது. இன்னும் வாங்காதவர்கள் இன்று வாங்கிக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய கடைசி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

News January 18, 2025

பியூட்டி பார்லரின் கதவை உடைத்து திருட்டு

image

கோவை பி.என்.புதூர் அருகே மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த சங்கீதா, பூம்புகார் நகரில், பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். இவர் இரு தினங்களுக்கு முன்னர், கடையை பூட்டி விட்டு, பொங்கல் விடுமுறைக்கு பின்னர், நேற்று கடைக்கு சென்றுள்ளார். அப்போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, ரூ.5 ஆயிரம் பணம், செல்போன், அழகு சாதன பொருட்கள் திருடு போனது தெரிந்தது. புகாரின்பேரில் போலீசார் விசாரிக்கின்றனர்.

News January 18, 2025

கோவையில் இன்று மின் தடை ஏற்படும் பகுதிகள்

image

கோவை மாவட்டத்தில் இன்று பல்வேறு பகுதிகளில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. அதன்படி இன்று காலை 9 மணி முதல், மாலை 4 மணி வரை, கோவை காந்திபுரம், சாய்பாபா கலானி, சிவானந்தாகாலனி, மேட்டுப்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகள், சூலூர் சுற்றுவட்டாரப் பகுதிகள், அன்னூர் சுற்றுவட்டாரப்பகுதிகள், முதலிபாளையம், பூனாண்டம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 18, 2025

பதக்கம் என்ற காவலருக்கு வாழ்த்து!

image

கோவை மாநகரக் காவல் துறையில் பணிபுரிந்து வரும் பெண் காவலர் ஸ்ரீலேகா, கர்நாடக மாநிலம் மங்களூரில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில், தமிழகத்தின் சார்பில் கலந்து கொண்டு, வெள்ளிப்பதக்கத்தை வென்றுள்ளார். இந்த நிலையில் இன்று இவருக்கு கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் நேரில் வாழ்த்து தெரிவித்தார்.

News January 17, 2025

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வளர்ப்பு தந்தை 

image

கோவை: சிறுமுகையைச் சேர்ந்த 11 வயது மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை, வளர்ப்பு தந்தை மதுபோதையில் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சைல்டு ஹெல்ப் லைன் எண் 1098க்கு வந்த தகவலின் பேரில், மாவட்ட குழந்தைகள் உதவி மைய மேற்பார்வையாளர் கிருஷ்ணகுமாரி விசாரித்ததில், உண்மை என தெரிந்தது. அவர் கொடுத்த புகாரின் பேரில், அனைத்து மகளிர் போலீசார், வளர்ப்பு தந்தையை போக்ஸோவில் கைது செய்தனர்.

News January 17, 2025

கோவை: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (17.01.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News January 17, 2025

கோவையில் சிறப்பு வரி வசூல் முகாம்

image

கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, தொழில்வரி மற்றும் குடிநீர் கட்டணம் ஆகிய வரியினங்களை பொதுமக்கள் செலுத்துவதற்கு வசதியாக, அனைத்து மண்டல வரிவசூல் மையங்கள் மற்றும் சிறப்பு வரிவசூல் முகாம்கள் (18.01.2025) சனிக்கிழமை மற்றும் (19.01.20250 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 4.00 வரை வரிவசூல் நடைபெறும்” என்றார்

News January 17, 2025

எம்ஜிஆர் பிறந்தநாள் விழாவில் எம்எல்ஏக்கள்

image

கோவை மாவட்ட அதிமுக சார்பில், முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் 108-வது பிறந்தநாளை முன்னிட்டு, சிங்காநல்லூர் எம்எல்ஏ ஜெயராம், கோவை வடக்கு எம்எல்ஏ அம்மன் கே.அர்ஜுனன் ஆகியோர் அவினாசி சாலையில் உள்ள அவரது திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியும், அதிமுக கழக மாவட்ட தலைமை அலுவலகத்தில், அவரது திரு உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். தொடர்ந்து, அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

error: Content is protected !!