Coimbatore

News January 20, 2025

 நாளை மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

image

கோயம்புத்தூர் மாநகராட்சியில் ஒவ்வொரு செவ்வாய் கிழமைகளிலும் மக்கள் குறைதிறக்கும் நாள் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாளை (21–01–2025) செவ்வாய்க்கிழமை கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளதாக மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார்.

News January 20, 2025

கோவை பாஜக கோவை தெற்கு மாவட்ட புதிய தலைவர் 

image

பாரதிய ஜனதா கட்சியில் உட்கட்சி அமைப்பு தேர்தல், இந்திய அளவில் கடந்த நாட்களில் நடத்தியது. அதன் முடிவுகள் ஒவ்வொரு மாநிலங்கள் வாரியாகவும், ஒவ்வொரு மாவட்டங்கள் வாரியாகவும் அறிவிக்கப்பட்டு வருகிறது. நேற்று தமிழ்நாடு மாநிலம் உட்பட்ட மாவட்ட தலைவர்களின் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் பாஜகவின் கோவை தெற்கு மாவட்ட புதிய தலைவராக ஆர் சந்திரசேகர் என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

News January 19, 2025

கோவை : இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (19.01.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News January 19, 2025

மாசாணி அம்மன் கோவிலில் ரஷ்ய நாட்டினர் தரிசனம்

image

 ஆனைமலை மாசாணியம்மன் கோயிலுக்கு வருகை தந்த ரஷ்யா நாட்டின் கலாச்சாரக் குழுவினரை அறங்காவலர் குழுத்தலைவர் முரளி கிருஷ்ணன் வரவேற்றார். இதில் பத்மஸ்ரீ சிற்பி பாலசுப்பிரமணியம், நேரு கல்வி குழும இயக்குனர் முரளிதரன், இந்தியா ரஷ்யா கலாச்சார நட்புறவு மையத்தின் தலைவர் தங்கப்பன், தொழிலதிபர் கணேஷ், அறங்காவலர் மஞ்சுளா தேவி ஆகியோர் உடனிருந்தனர்.

News January 19, 2025

பிரதமரின் மனதின் குரல்: மத்திய இணை அமைச்சர் பார்வை

image

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள அலுவலகத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சியை கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்களோடு சேர்ந்து பார்வையிட்டார். இதில் கோவை மாநில பொது செயலாளர் கே.பி முருகானந்தம், பெருங்கோட்ட அமைப்பு செயலாளர் பாலகுமார், வடக்கு மாவட்ட தலைவர் சங்கீதா, மாநில செயற்குழு உறுப்பினர் சதீஷ்குமார், துணைத்தலைவர் விக்னேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.

News January 19, 2025

முதியவரிடம் ரூ.1 கோடி மோசடி: ஒருவா் கைது

image

கோவை பீளமேடு தனியார் நிறுவன ஊழியர் யுவராஜின் WhatsApp எண்ணுக்கு குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அதில் முதலீடு செய்தால் அதிக இலாபம் பெறலாம் என குறிப்பிடப்பட்டிருந்தது. தொடர்ந்து அவர் அதில் குறிப்பிடப்பட்டிருந்த வங்கி கணக்கிற்கு 1,00,65,000 அனுப்பியுள்ளார். ஆனால், லாபமும், அசலும் கிடைக்கவில்லை. இதனை விசாரித்த கோவை சைபர் கிரைம் போலீசார் மோசடியில் ஈடுபட்ட ஒசூரை சேர்ந்த மாதப்பனை நேற்று கைது செய்தனர்.

News January 19, 2025

ரேஷன் கடையில் இருப்பு குறைந்தால் அபராதம்

image

கோவை மாவட்டத்தில் 1405 ரேஷன் கடைகள் செயல்படுகின்றன. சுமார் 11.50 லட்சம் ரேஷன் கார்டுகளில் சுமார் 9 லட்சம் கார்டுகளுக்கு அரிசி வழங்கப்படுகிறது. மாதந்தோறும் சுமார் 20,000 டன் அரிசி, ஆயிரம் டன் துவரம்பருப்பு, 800 டன் சர்க்கரை, 600 டன் கோதுமை, 9.50 லட்சம் பாமாயில் பாக்கெட் ஒதுக்கப்படுகின்றன. இந்நிலையில் கடைகளுக்கு வந்த பின் பொருட்கள் இருப்பு குறைந்தால் அபராதம் விதிக்க கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது.

News January 19, 2025

கோவையில் சேவல் சண்டை: 22 பேர் கைது 

image

தொண்டாமுத்தூர் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதியில், பொங்கல் பண்டிகையின்போது சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேர், பேரூரில் 3 பேர், ஆலாந்துறையில் 11 பேர் என மொத்தம் 22 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 8 சேவல்கள், ரூ.37,420 பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

News January 19, 2025

ஆபாச வீடியோ: நீக்குவதாக பேராசிரியையிடம் மோசடி

image

கோவை ஈச்சனாரியை சேர்ந்த 33 வயது பேராசிரியை லோன் ஆப்புகள் மூலமாக ரூ.12 லட்சம் வரை கடன் பெற்று அதனை நீண்ட நாட்களாக கட்டவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவரது மார்பிங் வீடியோவை இணையத்தில் அதன் நிர்வாகத்தினால் கசிய விட்டனர். இதனை நீக்கி தருவதாக கூறி உடுமலையை சேர்ந்த அரவிந்த் பெண்ணிடம் ரூ.13 லட்சம் வரை பெற்று மோசடி செய்துள்ளார். இப்புகாரின் பேரில் கோவை சைபர் கிரைம் போலீசார் அவரை நேற்று கைது செய்தனர்.

News January 18, 2025

தேசிய தலைவர் கோவை வருகை

image

கோவையில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு கோவைக்கு வருகை புரிந்த அகில இந்திய காங்கிரஸ் ஓ.பி.சி. துறையின் தேசிய தலைவர் அஜய் சிங்யாதவுக்கு ஓ.பி.சி. துறையின் மாநில பொது செயலாளர் கணபதி எஸ்.அசோக்குமார் இன்று பொன்னாடை அணிவித்து வரவேற்றார். இதில் பொதுமக்கள், நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!