India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை மாவட்ட காவல்துறை இன்று (ஜனவரி.21) தனது முகநூல் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் புதிய சைபர் குற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது. அதில் தபால் கடிதம் அல்லது கொரியர் கடிதத்தை உங்கள் தபால் பெட்டியிலோ அல்லது உங்கள் வாசலிலோ வைப்பார்கள். அதை ஸ்கேன் செய்ய வேண்டாம். தூக்கி எறியுங்கள் என குறிப்பிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்.
கோவை பெரிய கடை வீதியில் அமைந்துள்ள கோனியம்மன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் கோனியம்மன் கோயில் தேர்த் திருவிழா பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு கோனியம்மன் கோயில் தேர்த் திருவிழா அடுத்த மாதம் பிப்.10ம் தேதி தொடங்கி வரும் மார்ச் மாதம் 10ம் தேதி வரை நடைபெற உள்ளது. பிப்ரவரி 10-ந் தேதி காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் தேர் முகூர்த்தக்கால் நிகழ்ச்சி நடைபெறும் என இன்று தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாவட்டத்தில் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் செயல்படும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை அன்று சிறப்பு குறைதீர் முகாம்கள் நடைபெற்று வருகின்றன. அதன் தொடர்ச்சியாக ஜனவரி-2025 மாதத்தில் வருகின்ற 25.01.2025 அன்று பொது விநியோகத் திட்ட குறைதீர் சிறப்பு முகாம் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெறவுள்ளது.
கோவை கோட்ட ரயில்வே நிர்வாகம் இன்று கூறியதாவது. திண்டுக்கல் ரயில்வே யார்டில் தண்டவாள பணி நடைபெறுவதால், நாகர்கோவில் முதல் கோவை வரை இயங்கும், கோயம்புத்தூர் எக்ஸ்பிரஸ், வரும் 25, மற்றும் 28 ஆகிய தேதிகளில், நாகர்கோவிலில் இருந்து காலை 08.00 மணிக்குப் புறப்படும். இந்த ரயில் திண்டுக்கல் வராது. அதேசமயம் கோவையில் இருந்து காலை 8.00 மணிக்கு புறப்படும் ரயில் திண்டுக்கல் செல்லாது என்றனர்.
கோவை கலெக்டர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாவட்ட ஊர்க்காவல் படை அமைப்பில் 74 ஆண் ஊர்க்காவல் படை ஆளிநர்கள் காலிப்பணியிடங்கள் பூர்த்தி செய்யப்படவேண்டியுள்ளது. ஊர்க்காவல் படையில் சேர விருப்பமுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்கள் 22.01.2025 முதல் 31.01.2025 வரை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்தார்.
கோவை விமான நிலையத்தில் இருந்து, தினமும் 30 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி, ஜனவரி 13 முதல் 19 ஆம் தேதி வரை, பயணிகள் எண்ணிக்கை அதிகமாகக் காணப்பட்டது. கடந்த ஜனவரி 12 ஆம் தேதி முதல் 7 நாள்களில் 70 ஆயிரம் போ் பயணம் மேற்கொண்டுள்ளனர். 200க்கும் அதிகமான விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன என கோவை விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கோவை கொடிசியா சாலையில் உள்ள, கோவை மண்டல அறிவியல் மையத்தில் இருந்து, வானில் ஒரே நேரத்தில் 6 கோள்கள் அணிவகுக்கும் நிகழ்வை, பொதுமக்கள் இலவசமாக கண்டு மகிழ, ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி ஜனவரி 22 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை, இந்த நிகழ்வு நடைபெறுகிறது. தினசரி மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் இந்த நிகழ்வை, பொதுமக்கள், மாணவ-மாணவிகள், இலவசமாக காணலாம் என இன்று அறிவித்துள்ளது.
தனியார் நிறுவனங்களில் பணிபுரிவதற்கான, சிறப்பு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம், வரும் 24ம் தேதி, கோவை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில், காலை 10:00 மணி முதல் நடக்கிறது. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ.,டிப்ளமோ, பொறியியல் பட்டப்படிப்பு முடித்த மனுதாரர்கள், தங்கள் சுயவிபரம் மற்றும் கல்விச்சான்றுகளின் நகல்களுடன் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட காவல்துறை இன்று (ஜனவரி.20) தனது முகநூல் பக்கத்தில் விழிப்புணர்வு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் அரசு ஏஜென்சிகள்/வங்கிகள் உங்கள் தனிப்பட்ட விவரங்களைக் கேட்டு உங்களை ஒருபோதும் அழைக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள். மேலும் சைபர் குற்றத்திற்காக 1930 என்று என்னை தொடர்பு கொள்ளவும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பொங்கல் விடுமுறையை முன்னிட்டு கோயமுத்தூர் விமான நிலையத்திலிருந்து கடந்த 7 நாட்களில் 70,000 பேர் பயணம் செய்திருக்கிறார்கள் மற்றும் 250-க்கு மேற்பட்ட விமானங்கள் இயக்கப்பட்டு இருக்கின்றன. பொங்கல் நாளில் மட்டும் 34 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளதாக கோவை விமான நிலையத்தில் இருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன.
Sorry, no posts matched your criteria.