India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை மேட்டுப்பாளையத்தில், 2019ஆம் ஆண்டு, வேறு சமூக பெண்ணை திருமணம் செய்ததால், வினோத் குமார் என்பவர், தனது சொந்த தம்பியான கனகராஜ், அவரது மனைவி தர்ஷினி பிரியாவை, வெட்டி படுகொலை செய்தார். கோவையையே உலுக்கிய இந்த வழக்கில், வினோத் குமார் குற்றவாளி என நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. வினோத் குமாருக்கு மரண தண்டனை வரை கொடுக்கப்படலாம் என்பதால், வரும் 29ஆம் தேதி தண்டனை விவரம் அறிவிக்கப்படவுள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு மேல் விடுமுறை கிடைத்ததால், பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றனர். பயணிகளின் வசதிக்காக கோவை மண்டல அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில், 1,520 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இதன் வாயிலாக அரசு போக்குவரத்துக்கழகம், ரூ.11.34 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக, அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவை பன்னிமடையை அடுத்துள்ள தாளியூர் பகுதியில், இன்று காலை நடை பயிற்சி சென்ற நடராஜ் (69) என்பவரை, காட்டு யானை தாக்கியதில், பரிதாபமாக அவர் உயிரிழந்தார். இதுகுறித்து வனத்துறையினர் விசாரிக்கின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு, பெரியநாயக்கன்பாளையத்தில், வேலுமணி என்பவரை தாக்கிக் கொன்ற அதே வேட்டையன் என்கின்ற யானை, இன்று நடராஜையும் தாக்கியுள்ளதால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கோவை கலெக்டர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாவட்ட ஊர்க்காவல் படை அமைப்பில் 74 ஆண் ஊர்க்காவல் படை காலிப்பணியிடங்கள் பூர்த்தி செய்யப்படவேண்டியுள்ளது. ஊர்க்காவல் படையில் சேர விருப்பமுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்கள் நேற்று (22.01.2025) முதல் 31.01.2025 வரை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்தார்.
மக்களவை தேர்தல் பணி, கோவை மாவட்டத்தில் அமைதியாக நடந்தது. தேர்தல் பணியை சிறப்பாக மேலாண்மை செய்ததற்காகவும், ஓட்டுப்போட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, வாக்காளர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காகவும், சிறந்த மாவட்ட தேர்தல் அலுவலராக, கோவை கலெக்டர் கிராந்திகுமாருக்கு விருது வழங்கப்படுகிறது. வரும், 25ல் சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சியில், தமிழக ஆளுநர் ரவி, வழங்குகிறார்.
கோவை மாவட்டத்தில் இன்று (22.01.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
கோவை மக்களவை உறுப்பினர் கணபதி ராஜ்குமாரின் எம்.பி அலுவலகம் வஉசி மைதானத்தில் உள்ள மாநகராட்சிக்கு சொந்த மான கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கடந்த மாதம் திறந்து வைத்தார். காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும். பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை அலுவலகத்தில் உள்ளவர்களிடம் அளிக்கலாம். இவ்வாறு எம்பி கணபதி ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
கோவை மாநகர பகுதியில், விபத்துகளை தடுக்க சிட்டி போலீஸ் கமிஷனர் சரவணசுந்தா் உத்தரவின்பேரில், போக்குவரத்து போலீஸாா் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா். போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இதனால் விபத்துகள் குறைந்து வருகின்றன. இப்பணிகளில் போக்குவரத்து போலீசார் மட்டுமே ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது சட்டம் ஒழுங்கு போலீசாரும் அபராதம் விதிக்க கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.
பொது வினியோகத்திட்ட குறைதீர் சிறப்பு முகாம், வரும் 25ல் காலை 10 முதல் மதியம் 1 மணி வரை, அனைத்து தாசில்தார் அலுவலகங்களில் இயங்கிவரும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் நடைபெறும். இதில் ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம், நகல் குடும்ப அட்டை, மொபைல் எண் மாற்றம் மற்றும் குடும்ப தலைவர் போட்டோ மாற்றம் தொடர்பான குறைகளை, மனுக்களாக வழங்கி பயனடையலாம் என கோவை ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் இன்று பல்வேறு பகுதிகளில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. அதன்படி இன்று காலை 9 மணி முதல், மாலை 4 வரை, குனியமுத்தூர், சுண்டக்காமுத்தூர் பகுதிகள், கீரணத்தம், அத்திபாளையம் பகுதிகள், கோட்டூர், அங்கலக்குறிச்சி, பீடம்பள்ளி , கலங்கல், வதம்பச்சேரி குமாரபாளையம், பொள்ளாச்சி சுற்றுவட்டாரப்பகுதிகள், ஒத்தக்கால்மண்டம், மயிலேறிபாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
Sorry, no posts matched your criteria.