Coimbatore

News January 24, 2025

‘திமுகவையும் சேர்த்து நாங்கள் தான் வளர்கிறோம்’

image

கோவை விமான நிலையத்தில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தவர்களுக்கு வாழ்த்துகள். திமுகவையும் சேர்த்து நாங்கள் தான் வளர்கிறோம். பெரியாரை விமர்சித்து அண்ணா, கருணாநிதி பேசி உள்ளார்கள். திகவில் இருந்து திமுக பிரிய காரணம் என்ன? பெரியாரை‌ எதிர்த்து அண்ணா பேசினார். பெரியாரை விமர்சித்து கருணாநிதி பேசியதில் ஒரு துளி கூட நான் பேசவில்லை” என்றார்.

News January 24, 2025

தபால் மூலம் மாட்டுக்கோமியம் அனுப்பும் போராட்டம்

image

கோவையில் திராவிடர் தமிழர் கட்சியின் சார்பில், மாட்டு கோமியம் மருத்துவ குணம் நிறைந்தது என அறிவியலுக்கு பொருந்தாக பொய்களை பரப்பியதாக, ஐஐடி இயக்குநர் காமகோடிக்கு தபால் மூலம் மாட்டுக்கோமியம் அனுப்பும் போராடத்தில் ஈடுபட்டனர்.
திரவப் பொருட்கள் மற்றும் கிருமிகள் பரவும் என்பதால் அனுப்பமுடியாது என ஊழியர்கள் மறுப்பு தெரிவித்து, உயர் அதிகாரிகளுடன் ஆலோசித்த பிறகு தபால் துறை ஊழியர்கள் பார்சலை பெற்று கொண்டனர்.

News January 24, 2025

கோவை-அபுதாபி விமான சேவை அதிகரிப்பு

image

கோவையில் இருந்து அபுதாபிக்கு நேரடி விமான சேவையை வாரத்துக்கு மூன்று நாள் என்ற அடிப்படையில், 2024 ஆக.,10 முதல், ‘இண்டிகோ’ நிறுவனம் வழங்கி வருகிறது. இந்நிலையில் கோவையில் இருந்து இரவு 8:40 மணிக்கு புறப்பட்டு, அபுதாபியை 11:15 மணிக்குச் சென்றடையும். செவ்வாய், வியாழன், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த சேவை வழங்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 24, 2025

கோவை: போத்தனூர் வழியாக சிறப்பு ரயில்

image

கோவை ரயில்வே துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை – திருவனந்தபுரம் வடக்கு இடையே, போத்தனூர் வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. இந்த சிறப்பு ரயில்  24.01.2025 அன்று, 23.50 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு, மறுநாள் 18.05 மணிக்கு திருவனந்தபுரம் நார்த் சென்றடையும். இந்த ரயில் போத்தனூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.

News January 24, 2025

திருப்பரங்குன்றத்தில் விரதம் முடிப்பேன்: அண்ணாமலை 

image

கோவை மாவட்டம் பேரூர் பகுதியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது அவர் பேசுகையில், திருப்பரங்குன்றம் கோவில் சர்ச்சை குறித்த செய்தியாளர் கேள்விக்கு, என்னுடைய 48 நாள் விரதம் முடிக்கும் பொழுது நான் திருப்பரங்குன்றத்தில் தான் முடிப்பேன் என்று இருக்கிறேன். பிப்ரவரி 11, 12, 13 ஆகிய தேதிகளில் என்னுடைய விரதத்தை அங்கு தான் முடிக்க இருக்கிறேன் என்று தெரிவித்தார்.

News January 24, 2025

சிறப்பு பேருந்துகள் இயக்கம் 

image

2025 வருடத்தின் தை அமாவாசையானது வரும் 28ஆம் தேதி வருவதையொட்டி தரிசனத்திற்காக கோவையிலிருந்து பல்வேறு ஆன்மீக நபர்கள் ராமேஸ்வரம் பயணம் செய்வதை சுட்டிக்காட்டி சிறப்பு பேருந்துகளை இயக்க வேண்டும் என கோரிக்கை இருந்தது. இந்நிலையில், கோவை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து சிறப்பு பேருந்துகள் 27 மற்றும் 28ஆம் தேதி இயக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

News January 24, 2025

கோவை ரயில்வே பயணிகள் கவனத்திற்கு

image

கோவை ரயில்வே துறை அதிகாரிகள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் பாலக்காடு – ஷோரனூர் பிரிவில் லக்கிடி – ஒட்டப்பாலம் ரயில் நிலையங்களுக்கு இடையே பொறியியல் பணிகள் நடைபெற்று வருவதால் கோயம்புத்தூர் – ஷோரனூர் பயணிகள் ரயில் 26.01.2025 அன்று பாலக்காடு – ஷோரனூர் இடையே பகுதியளவில் ரத்து செய்யப்படும். கோயம்புத்தூர் ஜே.என் முதல் பாலக்காடு வரை மட்டுமே ரயில் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

News January 23, 2025

பள்ளி விழாவில் நடிகை சாய் பல்லவி 

image

கோவையில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியின் 58வது ஆண்டு தின கொண்டாட்டத்தை ‘வெர்டன்ட் வேகா’ என்ற பெயரில் பள்ளி வளாகத்தில் இன்று (ஜன.23) கொண்டாடினர். இந்நிகழ்வில் வருமான வரித்துறை கூடுதல் ஆணையர் ஹரி தலைமை விருந்தினராகவும், நடிகை மற்றும் பள்ளியின் முன்னாள் மாணவி சாய் பல்லவி ஆகியோர் நட்சத்திர விருந்தினராக கலந்து கொண்டனர். அப்போது அவரிடம் செல்பி எடுக்க குவிந்தனர். 

News January 23, 2025

திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்கவும்: வானதி

image

கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், இந்து கோயில்களை மட்டும் தன் பிடியில் வைத்திருக்கும் திமுக அரசு, இந்துக்களை ஏமாற்றுவதற்காக, ‘முத்தமிழ் முருகன் மாநாடு நடத்தினால் மட்டும் போதாது. முருகப்பெருமானின் முதலாவது படைவீடான திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

News January 23, 2025

கோவையில் இன்ஃப்ளூயன்சா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பு

image

கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இன்ஃப்ளூயன்சா வைரஸ் காய்ச்சல் பாதிப்பு குழந்தைகள் மத்தியில் அதிகரித்து காணப்படுகிறது. மருத்துவமனைகளில் காய்ச்சல் பாதிப்புக்கு சிகிச்சைக்கு வருவோர் மற்றும் அதன் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் குழந்தைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தும்மும் போது இந்த வைரஸ்கள் காற்றில் பரவி, சிறுவர்கள் மத்தியில் செவித்தொற்று போன்ற பாதிப்புகளுக்கு, வழி வகுக்கிறது.

error: Content is protected !!