India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி அரங்கில், தனியார் மெட்ரிக் பள்ளிகளின் குழுமம் சார்பில், சிறந்த தனியார் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில், ஒவ்வொரு மனிதனுக்கும் ஏணிப்படி ஒரு ஆசிரியர் என்றும், ஆசிரியர் இல்லை என்றால் நமக்கான அங்கீகாரம் சமுதாயத்தில் கிடைக்காது என்றும் கூறினார்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு பதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வரும் ஜன.31ஆம் தேதி பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், கோவை மாவட்டத்தில் ஜன.31ஆம் தேதி மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோவை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நேற்று விடுத்த செய்தி குறிப்பில் சிட்டிசன் செயலி மூலம் நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள், கோவை மாநகராட்சி பகுதிகளில் உள்ள அடிப்படை பிரச்னைகள் உள்ளிட்டவை குறித்து புகார் அளிக்கலாம். அதற்கு தீர்வுகளை கண்டறியலாம். பிரச்னை கண்டறியப்பட்டால் அதனை உடனடியாக செயலியில் பதிவு செய்யலாம். இதனை மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் படை வீரர்களுக்கான 2024 ஆம் ஆண்டுக்கான கொடிநாள் வசூலில் கோவை மாநகராட்சி ரூ.74 லட்சம் வசூல் செய்து மாநில அளவில் நிர்ணயித்த இலக்கை விட அதிகமாக வசூலித்து முதலிடம் பிடித்துள்ளது. இதற்காக கோவை மாநகராட்சிக்கு வரும் ஜன.26 குடியரசு தினத்தன்று ஆளுநர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் ஆளுநா் ஆா்.என்.ரவி விருது வழங்கி கௌரவிக்க உள்ளார். இதே போல் கடந்த ஆண்டும் விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.
கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில் வரும் 26ஆம் தேதி குடியரசு தினவிழா, கோவை வஉசி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தேசிய கொடியை ஏற்றி வைத்து, காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதை ஏற்க உள்ளார். மேலும், இதில் கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடைபெற உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
குடியரசு தினத்தையொட்டி, கோவை மாநகரில் போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் தலைமையில் 1,500 போலீசார், புறநகர் பகுதிகளில் எஸ்.பி., கார்த்திகேயன் தலைமையில், 2000 போலீசார் என 3000-க்கும் மேற்பட்டோர், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். போலீசார் சோதனை சாவடிகள், ஓட்டல்கள், தனியார் தங்கும் விடுதிகள், பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் இன்று கூறியதாவது, முன்னாள் படை வீரர்களுக்கான 2024ம் ஆண்டுக்கான கொடி நாள் வசூலில் கோவை மாநகராட்சி நிர்வாகம் ரூ.74 லட்சம் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்த சாதனை தொடர்ந்து இதற்காக கோவை மாநகராட்சிக்கு வரும் 26ஆம் தேதி குடியரசு தின விழாவில் விருது வழங்க இருப்பதாக இன்று தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபானக்கடைகள்/பார்கள் (FL1) பொழுதுபோக்கு மனமகிழ்மன்றங்களில்(FL2) செயல்படும் மதுக்கூடங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களில்(FL3) செயல்படும் மதுக்கூடங்கள் வரும் (26.01.2025) குடியரசு தினத்தன்று மதுபான உரிமத்தளங்களை மூட (Dry day) உத்தரவிட்டுள்ளார்.
குடியரசு தினத்தை முன்னிட்டு கோவை ரயில் நிலையத்தில், ரயில்வே பாதுகாப்பு படையினர், ரயில்வே போலீசார் இணைந்து தீவிர சோதனையில் ஈடுபட்டனர். ரயில்வே பாதுகாப்பு போலீசார் சிசிடிவி கேமரா மூலம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, சந்தேகத்திற்கு இடமான நபர்கள் மற்றும் பயணிகளின் உடைமைகள், நடைமேடைகளில் வைக்கப்பட்டுள்ள பொருட்கள் ஆகியவற்றை முழுமையான சோதனைக்கு உட்படுத்தினர்.
தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுடன் இன்று (24.01.2025) அக்கட்சியின் தலைவர் விஜய் சென்னையில் நேர்காணல் நடத்தி, புதிய மாவட்ட நிர்வாகிகளை நியமித்துள்ளார். இதில் கோயம்புத்தூர் மாவட்ட செயலாளராக சம்பத்குமார், மாவட்ட இணைச் செயலாளராக மைக்கேல் குண சிங், பொருளாளராக சத்தியமூர்த்தி மற்றும் துனைச் செயலாளர்களாக சுமதி, உன்னிகிருஷ்ணன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.