Coimbatore

News November 12, 2024

ஒரே நாளில் பயணித்த பத்தாயிரம் பயணிகள்

image

கோவை சர்வதேச விமான நிலையத்தில் உள்ளூர் மற்றும் வெளியூர் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த அக்டோபர் முதல் தினமும் 30 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் அதிகபட்சமாக 64 விமான சேவைகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 10,089 பயணிகள் வந்து சென்றதும், ஒரே நாளில் அதிகபட்ச சர்வதேச பயணிகள் எண்ணிக்கை பதிவானது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

News November 12, 2024

தவெக ஆலோசனை மற்றும் இணைப்பு விழா

image

கோவை, மதுக்கரையில் உள்ள கணபதி மகாலில், கோவை தெற்கு மாவட்ட தலைவர் விக்னேஷ் தலைமையில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆலோசனை கூட்டமானது நடைபெற்றது. இதில் கோவையில் உள்ள பல்வேறு சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தவெகவில் இணைந்தனர். இந்த கூட்டத்தில் மதுக்கரை நகர ஒன்றிய ரஞ்சித்குமார், மதுக்கடை நகர தலைவர் வினோத் குமார், நிர்வாகிகள் பங்கேற்றனர்.

News November 12, 2024

கோவை: மருத்துவர்கள் இல்லாததால் அமைச்சர் அதிர்ச்சி

image

கோவை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்ரமணியன் நேற்றிரவு திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வுக்கு சென்ற நான்கு மையங்களில் இரு இடங்களில் மருத்துவர்கள் பணியில் இல்லாததால் அதிர்ச்சி அடைந்தார். அவ்விருவரிடம் விளக்கம் கேட்க உத்தரவிட்ட அமைச்சர் நகர் நல மையம் செயல்படும் நேரத்தை அறிவிப்பு பலகையாக வைக்க மாநகராட்சி கமிஷனருக்கு உத்தரவிட்டார்.

News November 12, 2024

கோவை: மாணவிகளுக்கு மது கொடுத்து அத்துமீறிய ஆசிரியர்

image

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம் உடன்குடியில் தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் பொன்சிங் என்பவர் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்தார். இதன் இடையே, மண்டல அளவிலான விளையாட்டு போட்டிக்கு அழைத்து சென்றபோது மாணவிகளுக்கு மது கொடுத்து உடற்கல்வி ஆசிரியர் பொன்சிங் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.இந்த வழக்கில் நேற்று ஆசிரியரை கோவையில் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

News November 12, 2024

சாலையில் தீபிடித்து எரியும் கார்

image

கோவை மாவட்டம் நீலாம்பூரில் இருந்து தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பகுதியில் தற்பொழுது ஒரு கார் தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கிறது. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து கொண்டு உள்ளனர். இதனால் இந்த சாலையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

News November 12, 2024

தமிழ்ப்புதல்வன் திட்டம்: சமூக நல அலுவலர் தகவல்

image

கோவை மாவட்டத்தில் தமிழ்ப்புதல்வன் திட்டத்தைப் பற்றியும் அதன் பலன்கள் குறித்தும் 400 முகாம்களை நடத்தினோம். இம்முகாம்களை கலெக்டர் கிராந்திகுமார் துவக்கி வைத்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதனால் தமிழ்புதல்வன் திட்டத்தில் பலர் இணைந்தனர். அதனால்தான் இத்திட்டத்தில் தமிழகத்தில் முன்னோடி மாவட்டமாக கோவை திகழ்கிறது என்று கோவை மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் அம்பிகா தெரிவித்துள்ளார்.

News November 11, 2024

பாஜக நிர்வாகி ஏ.பி.முருகானந்தத்திற்கு பிடிவாரண்ட்

image

பாஜக மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம், கடந்த 2016ல் மாமனார் சுந்தரசாமி தொடர்ந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜர் ஆகாததால் கோவை கூடுதல் மகளிர் நீதிமன்றம் பிடிவாரண்ட் விடுத்துள்ளது. மேலும் வழக்கு விசாரணையை நவம்பர் 27ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிமன்றம், அடுத்த வழக்கு விசாரணைக்குள் நீதிமன்றத்தில் முருகானந்தத்தை ஆஜர்படுத்த காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

News November 11, 2024

பேரூராட்சி சார்பில் வித்தியாசமான விழிப்புணர்வு வாசகம்

image

சூலூர் ஒன்றியம், கண்ணம்பாளையம் பேரூராட்சியில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கவனம் இருக்கும் வாசகம் வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வீதிகளிலும் சாலை ஓரங்களிலும் குப்பைகள் கொட்டுவதை தடுக்கும் விதமாக, நடிகர் வடிவேலு காமெடியில் வருவதை போல, ‘உங்க வீடு தேடி வந்து குப்பை வாங்குறோமே, அப்புறம் ஏன் பொது எடத்துல வந்து குப்பையை கொட்டுறீங்க? எனும் காமெடி பாணியில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

News November 11, 2024

அதிமுக தொடக்கவிழா பொதுக்கூட்டம்

image

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதி, மதுக்கரை ஒன்றியம் வெள்ளலூர் பேரூராட்சியில், நடைபெற்ற அதிமுக கட்சியின் 53வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டத்தில், எதிர்க்கட்சி அதிமுக கொறடா எஸ்பி வேலுச்சாமி, பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் எம்எல்ஏ, திரைப்பட இயக்குநர் கழக கலை பிரிவு செயலாளர் ஆர்.வி.உதய குமார், நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்றனர்.

News November 11, 2024

கோவை: அமைச்சர் நேரில் சென்று ஆறுதல்

image

திமுக செய்தித் தொடர்பு துணைச்செயலாளர் கோவை செல்வராஜ் ex எம்எல்ஏ மறைவையொட்டி லாலி சாலையில் உள்ள அவரது இல்லத்திற்கு நேற்று தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். உடன் வடக்கு மாவட்டச் செயலாளர் தொ.அ. ரவி, மாவட்ட துணைச்செயலாளர்கள் கோட்டை அப்பாஸ் ஜெயந்தி, தலைமைச்செயற்குழு உறுப்பினர் சோமு (எ) சந்தோஷ் இருந்தனர்.