India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை மாவட்டம், பந்தய சாலை பகுதியில் பாலியல் தொழில் நடைபெறுவதாக, பந்தய சாலையின் காவல்துறையினருக்கு நேற்று தகவல் கிடைத்தது. சம்பவ இடத்தில், காவல்துறையினர் நேற்று திடீர் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு இளம் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபட வைத்த, கார்த்திகேயன் (25), சாருலதா(23), வான்மதி (27) என்பவர்களை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாவட்டத்தில் நாளை கோவை மாநகராட்சி மேயர் ரங்கநாயகி தலைமையில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில், காலை 11.00 மணிக்கு நடைபெறும் என்றுன், மேலும் பொதுமக்கள் தங்கள் குறைகளை மேயரிடம் மனுவாக அளிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சிகளில் காலியாக உள்ள பதவியிடங்கள் குறித்த பட்டியலை, 30ம் தேதி சமர்ப்பிக்க, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது,கோவை மாவட்டத்தில், மாநகராட்சியில் ஒரு வார்டு, நகராட்சி 3வார்டு பேரூராட்சியில் 8வார்டு, ஆகிய 13 பதவியிடங்கள் காலியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
கோவை தொழிலாளர் நலத்துறை நேற்று விடுத்த செய்தி குறிப்பில் குடியரசு தினத்தன்று கோவை, பொள்ளாச்சி மற்றும் மேட்டுப்பாளையம் பகுதிகளில் உள்ள கடைகள், தொழில் நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மொத்தம் 155 உரிமையாளர்கள் (ம) பொறுப்பாளர்கள் மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
கோவை எஸ்பி கார்த்திகேயன் இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில், இணையதளத்தில் பணத்தை இழந்தால், 1930 என்ற எண்ணை அழைத்து புகார் அளிக்கலாம் என்றும், சைபர் கிரைம் தொடர்பான புகார்களுக்கு https://www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளித்தால், கோவை சைபர் கிரைம் போலீசார் உங்களை தொடர்பு கொண்டு இழந்த பணத்தை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளார்.
கோவை மருதமலை சுற்றுக்கு உட்பட்ட மூனுகல் சரகம், போளுவாம்பட்டி பிளாக்-3 வன எல்லையை ஒட்டி சுமார் 100 மீட்டர் தொலைவில் மருதமலை அடிவாரத்தில் சந்திரன்-வள்ளி தம்பதியினர் வீடு உள்ளது. இவர்களது வீட்டு வளாகத்திற்குள் நேற்றிரவு 9.30 மணியளவில் சிறுத்தை ஒன்று திடீரென புகுந்தது. வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த நாய்க்குட்டியை கவ்விக்கொண்டு மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது.
கோவையில் தனியார் அமைப்பின் வேலை வாய்ப்பு முகாம் சரவணம்பட்டி தனியார் கல்லூரி வளாகத்தில் நடந்தது. கோவை பல்வேறு பகுதிகளில் இருந்து ஆட்டோமொபைல், சாப்ட்வேர், டெக்ஸ்டைல் என 100-க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் முகாமில் கலந்து கொண்டன. குறிப்பாக இராணுவபடை பிரிவான அக்னிவீர் திட்டத்தில் ஆள் சேர்க்கவும் இராணுவத்தினர் அரங்கு அமைத்திருந்தனர். இதில் சேர இளைஞர்கள் அதிக ஆர்வம் காட்டினர்.
கோவை மாநகராடசி சார்பில் “நம்ம கோவை சிட்டிசன் செயலி” அறிமுகப்படுத்தப்படுகிறது. இச்செயலி மூலம் பொதுமக்கள் தங்களது அடிப்படை பிரச்சனைகள் குறித்து புகார் அளிக்கலாம். இப்புகார்கள் உடனே பதிவு செய்யப்பட்டு அதிகாரிகள் கவனத்திற்கு சென்று அவைகள் சரி செய்யப்படும். இதன் மூலம் கோவை மக்களின் குறைகள் தீர்வதுடன், மாவட்டத்தின் வளர்ச்சியும் இதன்மூலம் உயரும் என நம்பப்படுகிறது.
தேசிய வாக்காளர் தினத்தினை முன்னிட்டு இன்று தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில், நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டின் தேர்தல் விழிப்புணர்வு பணிகளை திறப்பட மேற்கொண்ட மாவட்டத்தினை பாராட்டும் வகையில், கோவை மாவட்டத்திற்கு தமிழ்நாடு ஆளுநர் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். இதனை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி பெற்றுக்கொண்டார்.
நாளை (ஜன.26) குடியரசு தினத்தை முன்னிட்டு உங்கள் ஊரில் கிராம சபைக் கூட்டங்கள் மற்றும் அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், பொது இடங்களில் குடியரசு தின விழா கொடியேற்ற நிகழ்ச்சிகளும், நடைபெற உள்ளன. இந்த நிகழ்வுகளை வே2நியூஸில் பதிவிட்டு, உங்கள் ஊர் செய்திகளை அனைவருக்கும் சென்றடைய உதவுங்கள். எப்படி அனுப்புவது என்று தெரியலையா? இந்த <
Sorry, no posts matched your criteria.