India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை மருதமலை தைப்பூச தோ் திருவிழாவுக்கு பக்தா்கள் வருவதை கருத்தில் கொண்டு பிப்.4 முதல் 8 வரை மற்றும் பிப்.13, 14 ஆகிய தேதிகளில் கோயிலுக்கு 4 சக்கர வாகனங்களிலும், பிப்.9 முதல் 12 வரை இரண்டு, நான்கு சக்கர வாகனங்களில் செல்வதற்கு பக்தா்களுக்கு அனுமதியில்லை. மலைப்படிகள் வழியாகவும், கோயில் பேருந்துகளில் சென்றும் சாமி தரிசனம் செய்யலாம் என கலெக்டர் கிராந்திகுமார் பாடி அறிவித்துள்ளார்.
கோவை மத்திய சிறையில் நெல்லையை சேர்ந்த கொலை வழக்கு குற்றவாளி ஏசுதாஸ் கழுத்து எலும்பு முறிந்து கழிவறையில் மர்மமான முறையில் உயிரிழந்தார். இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக துணை சிறை அலுவலர் மனோரஞ்சிதம், உதவி சிறை அலுவலர் விஜயராஜ், தலைமை காவலர் பாபுராஜ், முதல் நிலை காவலர் தினேஷ் உள்ளிட்டோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்டத்தில் அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் +2 மாணவர்களுக்கான முதற்கட்ட தேர்வு முகாம் இன்று (ஜன.29) துவங்குகிறது. இதில் அரசு, அரசு உதவிபெறும், மெட்ரிக், சிபிஎஸ்இ மாணவர்கள் பங்கேற்கின்றனர். தேர்வு இன்று முதல் வரும் பிப்.2 வரை நடக்கிறது. தேர்வு பெறும் மாணவர்களுக்கு உதவித்தொகை தனியார் நிறுவனம் மூலம் வழங்கப்பட உள்ளது என கோவை கலெக்டர் கிராந்திகுமார் பாடி நேற்று தெரிவித்துள்ளார்.
கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை 5 மண்டல பகுதிகளில் உள்ள வரிவசூல் மையங்களில் 2024-25 நடப்பு நிதியாண்டின் வரிவசூல் பணிகளை துரிதப்படுத்தும் விதமாக, திங்கள் முதல் ஞாயிற்றுக்கிழமை வரை அனைத்து நாட்களிலும் (அரசு விடுமுறை நாட்கள் தவிர) காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை வரிவசூல் மையங்கள் செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
கோவையில் இயங்கி வந்த தனியார் ஐடி நிறுவனம் கடந்த சில தினங்களுக்கு முன் மூடப்பட்டதால், நிவாரணம் கோரி நேற்று ஒரு மாத சம்பளம், சான்றிதழ் தரக்கோரி தொழிலாளர்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இந்நிலையில் வரும் 31ஆம் தேதி ஜனவரி மாத சம்பவளம் வழங்கப்படும் என மனித வள ஒருங்கினணப்பாளர் அறிவித்துள்ளனர். அன்றைய தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் ஆஜராகி விடுபட்ட கோரிக்கை குறித்து முடிவெடுக்கப்படும் என்றனர்.
கோவை மாவட்டத்தில், பெரியநாயக்கன்பாளையம், பேரூர், கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய பகுதிகளில் இன்று (ஜனவரி.28) இரவு நேர ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உள்ளூர் அதிகாரியை, மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 டயல் செய்யலாம் என்று, கோவை மாநகர போலீசார், தங்களது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.
கோவை, சிங்காநல்லூர், பீளமேடு பகுதிகளில், இளம் பெண்களை வைத்து விபச்சாரம் நடைபெறுவதாக காவல்துறையினருக்கு நேற்று தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் சம்பவ இடத்தில் காவல்துறையினர் நேற்று திடீர் ஆய்வு செய்தனர். அப்போது, இரு பகுதிகளிலும் பெண்களை வைத்து விபச்சாரம் செய்த 9 பேரை போலீசார் கைது செய்தனர். நேற்று முந்தினம் பந்தயசாலை பகுதியில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கோவை மாவட்டம் ஆர் எஸ் புரத்தில் இயங்கி வந்த ஐடி நிறுவனம் பணியாளர்களுக்கு தெளிவான தகவல் தெரிவிக்காமல் மூடி உள்ளனர். இந்த நிலையில் இன்று பணியாளர்கள் சென்ட்ரல் ஆர்டிஓ அலுவலகம் பின்புறம் உள்ள, தொழிலாளர் துறை அலுவலகத்தில் வந்து மனு அளித்துள்ளனர். மேலும் அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் நிர்மலா கூறுகையில், கோவை அரசு மருத்துவமனையில் 3 மாத பயிற்சியாக, முதியோர் பராமரிப்பு சேவை உதவியாளர் சான்றிதழ் படிப்பை துவங்கியுள்ளது. இந்த படிப்பிற்கு ஒரு ரூபாய் கூட செலுத்த வேண்டாம் முற்றிலும் இலவசமாக இந்த பயிற்சி வழங்கப்படுகிறது. இதனை படிப்போருக்கு வேலைவாய்ப்புகள் தாராளமாக கிடைக்கின்றன. இந்த வாய்ப்பை இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ள வலியுறுத்தியுள்ளார்.
இந்திய அஞ்சல் துறையில், தமிழ்நாட்டில் உள்ள 25 ஓட்டுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் கோவையில் 2 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்காக https://www.indiapost.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்தும், The Senior Manager, Mail Motor Service, No.37, Greams Road, Chennai 600006 முகவரிக்கு தபால் வழியாகவும் அனுப்பலாம். கடைசி தேதி 08.02.2025 ஆகும்.
Sorry, no posts matched your criteria.