Coimbatore

News January 30, 2025

ஐடி ஊழியர்கள் பிரச்சனை: மீண்டும் வெடித்தது

image

கோவையில் இயங்கி வந்த தனியாா் ஆன்லைன் கல்வி நிறுவனம் தனது பணியாளா்களை முன்னறிவிப்பின்றி அண்மையில் பணி நீக்கம் செய்தது. இதை எதிா்த்து ஊழியர்கள் தொடா்ந்து போராடி வருகின்றனா். இந்நிலையில் ஜனவரி மாத ஊதியம் வழங்க கோரிய நிலையில், சிலருக்கு ரூ.10,000 முதல் ரூ.5000 வரை குறைவாக வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து ஊதியம் பிடித்தம் செய்யாமல் முழுமையாக வழங்க கோரி தொழிலாளா் நலத்துறை அலுவலத்தில் மனு அளித்தனர்.

News January 30, 2025

முதியவரிடம் ரூ.18.50 லட்சம் மோசடி

image

கோவையைச் சேர்ந்த 62வயது முதியவர். இவரின் ஒரு SMS-ல் ஆன்லைனின் முதலீடு செய்தால், லாபம் பார்க்கலாம் என இருந்தது. இதை நம்பி, முதலில் 1,000 அனுப்பி, 1,250 வந்தது. பின் கூடிகொண்டே ரூ.18 லட்சம் அனுப்பி இருந்தார். அது, ரூ.22 லட்சமாக அதிகரித்தது. ஆனால், பணத்தை எடுக்க முடியவில்லை. இதனையடுத்து sms வந்த நம்பருக்கு போன் செய்தார். போன் “சுவிட் ஆப்” என வந்தது. முதியவர் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.

News January 30, 2025

கோவை: இன்றைய இரவு ரோந்து காவலர்களின் விவரம்

image

கோவை மாவட்டத்தில், பெரியநாயக்கன்பாளையம், பேரூர், கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய பகுதிகளில் இன்று (ஜனவரி.29) இரவு நேர ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உள்ளூர் அதிகாரியை, மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 டயல் செய்யலாம் என்று, கோவை மாநகர போலீசார், தங்களது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

News January 30, 2025

மெட்ரோ ரயில் திட்ட பணிகள் குறித்து எம்பி ஆய்வு

image

கோவையில் மெட்ரோ ரயில் திட்டப் பணியில் குறித்து எம்பி ஆய்வு செய்தார். சத்தி சாலையில் மெட்ரோ ரயில் பாதை திட்டமிடல், நெடுஞ்சாலைதுறை மாநகராட்சி அதிகாரிகள் ஒருங்கிணைத்து, கணபதி சங்கனூர் பிரிவு, கணபதி பேருந்து நிறுத்தம் பகுதிகளில் எம்பி கணபதி ராஜ்குமார், மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

News January 29, 2025

கோவை புறநகர் வடக்கு மாவட்ட தவெக செயலாளர் நியமனம்

image

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில், சென்னை பனையூரில் உள்ள அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் தவெக விதிகளின்படி, கோவை புறநகர் மாவட்டம், தொண்டாமுத்தூர் தொகுதி மற்றும் மேட்டுப்பாளையம் தொகுதிகளுக்கு, கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளராக, V.ராஜ்குமார் தலைமையில், நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்தார்

News January 29, 2025

கோவை: ஆணவக்கொலையில் மரண தண்டனை வழங்கி தீர்ப்பு

image

கடந்த 2019ஆம் ஆண்டு மேட்டுப்பாளையத்தில் வர்ஷினி பிரியா – கனகராஜ் தம்பதி கொலை செய்யப்பட்டனர். இவ்வழக்கு கோவை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், கைதான வினோத் சில தினங்களுக்கு முன் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கி கோவை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

News January 29, 2025

கோவையில் டி-55 ராணுவ டாங்கி

image

கோவை -ரெட் பீல்ட் இந்திய ராணுவ முகாம் அலுவலகம் அருகில், இந்திய ராணுவத்திற்கு பயன்படுத்தப்பட்ட டி-55 ராணுவ டாங்கி இன்று பொதுமக்கள் பார்வைக்கு, ரெட் பீலடில் சாலையில் திறந்து வைக்கப்பட்டது. இதனை இந்திய ராணுவ லெப்டினன் கர்னல் பிரார் திறந்து வைத்தார். பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள டி ரக ராணுவ டாங்கி 1971 ஆம் ஆண்டு பஞ்சாப் அருகில் நடந்த போரில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

News January 29, 2025

ஆணவப்படுகொலை: மாலை 5 மணிக்கு தீர்ப்பு ஒத்தி வைப்பு

image

கோவை, மேட்டுப்பாளையத்தில் 2019-ம் ஆண்டு இரட்டை ஆவண படுகொலை வழக்கில் இன்று காலை முதல் இரு தரப்பு வாதங்கள் நடைபெற்றது. இதனையடுத்து மதிய உணவு இடைவேளை பிறகு தீர்ப்பு வழங்க இருப்பதாக நீதிபதி தெரிவித்து இருந்த நிலையில்,பின்னர் வழக்கை விசாரித்த  நீதிபதி விவேகானந்தன் வழக்கை இன்று மாலை 5 மணிக்கு ஒத்தி வைத்தார்.

News January 29, 2025

ஈமு கோழி மோசடி: 19 கோடி அபராதம் 

image

ஆஸ்திரேலியா நாட்டு பறவையான ஈமு கோழி வளர்த்தால் நல்ல லாபம் கிடைக்கும் எனக்கூறி கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் மோசடி செய்த வழக்கில் அதன் உரிமையாளர் ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்தவர்குருசாமிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 19 கோடி ரூபாய் அபராதம் என கோவை டான்பிட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

News January 29, 2025

பிறவி இதய குறைபாடுள்ள 3 பேருக்கு சிகிச்சை

image

கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிறவி இதய குறைபாட்டால் 3 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனா். இவா்களுக்கு ஏட்ரியல் செப்டல், வென்ட்ரிகுலர் செப்டல் ஆகிய குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டன. ஜன.25ஆம் தேதி தலைமை மருத்துவர் நம்பிராஜன் தலைமையிலான குழுவினரால் பொகுடேனியஸ் டிரான்ஸ்கதீடர் முறை மூலம் குறைபாடுகள் சரி செய்யப்பட்டன என பெருமிதத்துடன் டீன் நிர்மலா தெரிவித்தார்.

error: Content is protected !!