Coimbatore

News January 31, 2025

கோவை: முதியவரிடம் மோசடி!

image

கோவை ராமநாதபுரத்தை சேர்ந்தவர் பழனிசாமி (76). இவரை தொடர்பு கொண்ட மர்மநபர்கள், தன்னை சிபிஐ அதிகாரி என்று கூறி, உங்களது வங்கி கணக்கு சட்டவிரோத பண பரிமாற்றத்திற்கு பயன்படுத்தப்பட்டு உள்ளது. வங்கி விவரங்களை ஆய்வு செய்ய வேண்டும் என்று, வங்கியில் இருந்த ரூ. 59 லட்சத்து 40 ஆயிரத்தை திருடினார். இது குறித்து சைபர் கிரைம் காவல்துறையினர் இன்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 31, 2025

துணை ராணுவத்தில் டிரைவர் வேலை

image

மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் (CISF) காலியாக உள்ள கான்ஸ்டபிள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. டிரைவர், ஆப்பரேட்டர் பிரிவில் 1,124 காலிப்பணியிடங்கள் உள்ளன. 10 வகுப்பு தேர்ச்சி தகுதி போதும். ரூ.21,700- ரூ.69,100 வரை சம்பளம் வழங்கப்படும். உடற்தகுதி தேர்வு, திறன் தேர்வு, எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தேர்வு செய்யப்படும். <>விண்ணப்பிக்க கிளிக்,<<>> SHARE பண்ணுங்க

News January 31, 2025

வெள்ளியங்கிரி செல்வோர் கவனத்திற்கு

image

மகா சிவராத்திரியை முன்னிட்டு வெள்ளியங்கிரி மலைக்கு பிப்.1முதல் மே மாதம் வரை பக்தர்கள் செல்லலாம் என வனத்துறை அறிவித்துள்ளது. மலைப்பாதை பல இடங்களில் செங்குத்தாக அமைந்துள்ளதால், ஆரோக்கியமான உடல் நலம் உள்ளவர்கள் மட்டும் சென்று வர கேட்டு கொள்ளப்படுகிறது. இங்கு செல்லும் பக்தர்கள் பிளாஸ்டிக் பைகள் எளிதில் தீப்பற்றும் பொருட்கள், சிகரெட், பீடு போன்றவை எடுத்து செல்ல வேண்டாம் என வனத்துறையினர் கூறியுள்ளனர்.

News January 31, 2025

காதலியுடன் சென்றவர் வெறிச்செயல் 

image

கோவை வேடப்பட்டி சேர்ந்து சதீஷ், நண்பர்களுடன் சிங்காநல்லூர் பகுதியில், மது அருந்தி கொண்டு இருந்த போது, விக்னேஷ் காதலியுடன் இருசக்கர வாகனத்த்தை நிறுத்தி விட்டு,  திரும்பி வந்து பார்த்த போது, ஹெல்மெட் இல்லை எனக் கூறி, விக்னேஷ் சதீஷ்-யுடன் தகராறில் ஈடுபட்ட போது, விக்னேஷ் கத்தியால் சதீஷை குத்தி விட்டார். தற்போது சதீஷ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

News January 31, 2025

தெரு நாய்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட முதியவர்

image

காரமடையை அடுத்துள்ள டீச்சர்ஸ் காலனி பகுதியில், ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையில் சுற்றித்திரிந்த நபரை, அப்பகுதி பொதுமக்கள் கண்காணித்ததில், தெரு நாய்களிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து அவரை இன்று கையும், களவுமாக பிடித்த பொதுமக்கள் காரமடை, போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News January 30, 2025

ஓய்வூதியர் குறைதீர்ப்பு கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு

image

ஓய்வூதியர் குறைதீர்ப்பு கூட்டம் மார்ச் 28-ல் காலை 10:30 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. அரசு மற்றும் அரசுத்துறை சார்ந்த துறைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அலுவலர்கள், ஓய்வூதிய பலன்கள் இதுவரை கிடைக்கப்பெறாமல் இருப்பின், ஓய்வூதிய குறைதீர்ப்பு மாதிரி படிவத்தில் பூர்த்தி செய்து, இரட்டை பிரதிகளில் பிப்.28-க்குள், அனுப்பி வைக்க வேண்டும் என கோவை கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.

News January 30, 2025

கோவை: இன்றைய இரவு ரோந்து விவரம்

image

கோவை மாவட்டத்தில், பெரியநாயக்கன்பாளையம், பேரூர், கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய பகுதிகளில் இன்று (ஜனவரி.30) இரவு நேர ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உள்ளூர் அதிகாரியை, மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 டயல் செய்யலாம் என்று, கோவை மாநகர போலீசார், தங்களது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

News January 30, 2025

SCAM: கோவையில் ஒரு சதுரங்கவேட்டை (1/2)

image

கோவையில் சினிமா படம் பாணியில் நடந்த சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சி அடைய வைத்தது. கடந்த 2010ஆம் ஆண்டு ஈமுஃபார்ம்ஸ் என் நிறுவனத்தை குருசாமி என்பர் தொடங்கினார். அதில் ரூ.1.50 லட்சம் முதலீடு செய்தால் 6 ஈமு கோழிகள், தீவனம், கொட்டை அமைத்து தரப்படும். மேலும், மாதம் ரூ.6000, ரூ.20,000 போனஸ் வழங்கப்படும் கவர்ச்சிகர விளம்பரங்களை வெளியிட்டனர்.

News January 30, 2025

கோவையில் ஒரு சதுரங்கவேட்டை (2/2)

image

இதை நம்பி பல பேர் முதலீடு செய்தனர். ஆனால், பணம் வழங்காமல் மோசடி செய்ததாக பாதிக்கப்பட்ட மக்கள் புகார் அளித்தனர். இதனையடுத்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், நேற்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதில் குருசாமிக்கு 10 ஆண்டு சிறை, 19 கோடி அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. (இது போல நீங்க பாதிக்கப்பட்டிருந்தால் கமென்ட் பண்ணுங்க.)

News January 30, 2025

போட்டி தேர்வாளர்களுக்கு நகராட்சி சார்பில் பயிற்சி

image

979 காலி பணியிடங்களை நிரப்பும் வகையில் யு.பி.எஸ்.சி தேர்வாணையம் நடத்தும் போட்டி தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் பிப்.11 ஆம் தேதி கடைசி தேதி என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மேட்டுப்பாளையம் நகராட்சி அறிவு சார் மையத்தில் மாணவர்களுக்கு தேர்வு குறித்து விளக்கம் மற்றும் வழிகாட்டும் பயிற்சி வரும் பிப்.1 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் கலந்து கொண்டு பயன்பெற நகராட்சி கமிஷனர் அமுதா அழைப்பு விடுத்துள்ளார்.

error: Content is protected !!