India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை காந்திபுரம் கிராஸ்கட் சாலை 8வது வீதியை சேர்ந்த பழனிசாமி (76) ஓட்டு வீட்டில் வசித்து வருகிறார். ட்ரோன் சர்வே செய்து வரி சீராய்வு செய்ததால் ஒரு ஆண்டுக்கு ரூ.1,05,464 செலுத்த வேண்டும் என மாநகராட்சியில் இருந்து நோட்டீஸ் வழங்கப்பட்டதால் பழனிசாமி அதிர்ச்சியடைந்தார். இந்த செய்தி பரவவே கோவை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் வரிவசூலர் ஜெய் கிருஷ்ணனை நேற்று சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
கோவை வானதி சீனிவாசன் எம்எல்ஏ இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளார். 2047இல் இந்தியாவை முதல் பொருளாதார நாடாக்கும் இலக்கை அடையும் நோக்கத்துடன் தயாரிக்கப்பட்டுள்ள சிறப்புமிக்க பட்ஜெட் இது. இது அனைத்து தரப்பு மக்களையும் மகிழ்ச்சி அடையச் செய்யும், யாராலும் குறை சொல்ல முடியாது என்றார்.
கோவை மாவட்ட ஆட்சியர் நேற்று கூறியதாவது. நடப்பு புதியதாக கல்வி உதவி தொகை பெற கல்லூரிகளில் முதலாம் ஆண்டு சேர்க்கை பெற்ற மாணவர்கள் மற்றும் சென்ற கடந்த விண்ணப்பிக்க தவறியவர்கள் https//umis.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்த சந்தேகங்களுக்கு ஆட்சியர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.
கோவை மாநகராட்சி சார்பில் மாநகராட்சிப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு, சொத்து வரி, காலியிட வரி,தொழில் வரி உள்ளிட்ட வரிகளை எளிமையாக செலுத்தும் வகையில், சிறப்புபிப்ரவரி முகாம் 01 மற்றும் 02 (சனி, ஞாயிறு) ஆகிய நாட்களில் நடைபெற உள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார். இதில், சொத்து வரி ஆறு மாதத்துக்கு ஒருமுறையும், குடிநீர் கட்டணம் இரு மாதத்துக்கு ஒருமுறையும் வசூலிக்கப்படுகிறது.
தென் கைலாயம் என போற்றப்படும் வெள்ளியங்கிரி ஆண்டவர் மலையேற இன்று முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கிரிமலை செல்லும் பக்தர்கள் உடல் நல குறைவு ஏற்பட்டாலோ மலையோர முடியாமல் சிரமத்திற்கு ஆளானாள், கீழ இருந்து உடனடியாக டோலி அனுப்ப 9443751149, 9994113733 இந்த எண்களை தொடர்பு கொள்ளலாம்.
கோவை வேளாண்மை இணை இயக்குனர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இணையவழி வாயிலாக மற்றும் விவசாய நிலங்களுக்கு நேரடியாக செல்லும் முகவர் மூலமாகவும், விற்பனை செய்யப்படும் உரங்களை வாங்க வேண்டாம். மேலும் வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் குறைவான விலையில் தரமான உயிர் உரங்கள், நுண்ணூட்ட உரங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதனை வாங்கி பயன்படுத்த கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று தெரிவித்துள்ளனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தில் வரும் 5ஆம் தேதி நடக்கிறது. அன்றைய தினம், வாக்காளர்கள் வாக்களிக்க சம்பளத்துடன் விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கோவை மாவட்டத்தில் பணியாற்றும், ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு பிப்.5ஆம் தேதி ஊதியத்துடன் விடுப்பு அளிக்க வேண்டும் கோரி தொழிலாளர் நலஉதவி ஆணையர் அறிவுறுத்தியுள்ளார். விடுப்பு அளிக்காத நிறுவனங்கள் குறித்து 99446-25051 புகார் அளிக்கலாம்.
கோவை மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கால்நடை பராமரிப்புத்துறையின் மூலமாக, ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி மாதம், இருவார கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. இவ்வாண்டு 01.02.2025 முதல் 14.02.2025 வரை இருவாரங்கள் கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம் கால்நடை மருத்துவ நிலையங்களில், இலவசமாக நடைபெற உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டத்தில், பெரியநாயக்கன்பாளையம், பேரூர், கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய பகுதிகளில் இன்று (ஜனவரி.31) இரவு நேர ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உள்ளூர் அதிகாரியை, மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 டயல் செய்யலாம் என்று, கோவை மாநகர போலீசார், தங்களது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.
பொள்ளாச்சி கோமங்கலம்புதூர் முதல் ஒக்கிலிபாளையம் ஆஞ்சனேயர் கோயில் வரை சாலை அமைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையகம் நில எடுப்பு செய்துள்ளது. இந்நில எடுப்பிற்காக இழப்பீட்டு தொகை நில உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக பிப்.1 முதல் தனி வட்டாட்சியர் (நெடுஞ்சாலை திட்டங்கள்) கோவை அலுவலகத்தை தொடர்பு கொண்டு ஆவணங்களை சமர்ப்பிக்கலாம், விபரங்களை பெற கலெக்டர் கிராந்திகுமார் பாடி அறிவுறுத்தியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.