Coimbatore

News February 3, 2025

நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை (பிப்.4) செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது என இன்று கோவை மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதில் கோவையை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு மனு அளித்து பயன்பெறலாம்.

News February 3, 2025

கோவையில் தாய் ரூ.50 தராததால் தற்கொலை

image

கோவை சுந்தராபுரம் சேர்ந்தவர் கணேஷ் (27) இவருக்கு கடுமையான மதுப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் இவர் நேற்று தனது தாயிடம் 50 ரூபாய் கேட்டுள்ளார். ஆனால் அவர் தர மறுத்துள்ளார். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த கணேஷ், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் இது குறித்து சுந்தராபுரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 3, 2025

அஞ்சல் துறையில் ஓட்டுநர் வேலை

image

இந்திய அஞ்சல் துறையில், தமிழ்நாட்டில் உள்ள 25 ஓட்டுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் கோவையில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்டவுள்ளது. இதற்காக https://www.indiapost.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்தும், The Senior Manager, Mail Motor Service, No.37, Greams Road, Chennai 600006 முகவரிக்கு தபால் வழியாகவும் அனுப்பலாம். கடைசி தேதி 8.2.2025.

News February 2, 2025

கோவையில் நடிகை ராதிகா சரத்குமார்

image

வெள்ளலூர் பகுதியில் உள்ள எல்என்டி பைபாஸ் சாலையில், பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் இன்று (02–02–2025) ரேக்ளா பந்தயம் நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான ரேக்ளா வண்டிகள் போட்டியில் பங்கேற்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவை வடக்கு மாவட்ட பாஜகவினர் செய்திருந்தனர். இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும் நடிகையுமான ராதிகா சரத்குமார் கலந்து கொண்டார். 

News February 2, 2025

தீக்குளித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

image

கோவை, கவுண்டம்பாளையம் காவல் நிலையம் முன்பு நேற்று காலை ஆட்டோ ஓட்டுனர் சேகர் என்பவர் தனது மகன் மீது போலீசார் கஞ்சா வழக்கு போட்டிருப்பதாக மனமடைந்து காவல் நிலையம் வளாகத்தில் தீக்குளிக்க முயன்றுள்ளார். அப்போது அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார். தற்பொழுது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News February 2, 2025

பேருந்துக்கான வழித்தட அனுமதிக்கு விண்ணப்பிக்கலாம் 

image

கோவை கலெக்டர் கிராந்திகுமார் பாடி நேற்று விடுத்த செய்தி குறிப்பில், கிராமங்களில் வசிக்கும் மக்களின் நலன் கருதி மினி பேருந்துக்கான புதிய விரிவான திட்டம் மே.1முதல் நடைமுறைக்கு வருகிறது. கோவை மாவட்டத்தில் வழித்தட வரைபடங்களுடன் கூடிய விண்ணப்பங்களுடன் விண்ணப்பதாரர்களால் வரவேற்கப்படுகின்றன. அந்தந்த ஆர்டிஓ அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

News February 2, 2025

கோவையில் இன்று ‘ஹாப்பி ஸ்ட்ரீட்’

image

கோவை கொடிசியா பகுதியில் மீண்டும் இன்று Happy Street துவங்கியது. இது பலருக்கும் தெரியாததால் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. எனினும் வந்திருந்தவர்கள் ஆட்டம் பாட்டம் என மகிழ்ந்தனர். மேலும், பரமபதம், Face Painting, பலூன்கள், செல்ஃபி பாயிண்ட் ஆகியவை அனைவரையும் வெகுவாக கவர்ந்தன. இந்நிகழ்ச்சி அடுத்த வாரமும் கொடிசியா பகுதியிலேயே நடைபெறும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

News February 2, 2025

14 கடைகளில் பூட்டை உடைத்து திருடிய நபர் கைது

image

கோவையில் கட்டிடம் கட்டும் இரும்பு கம்பியை வைத்து, ஒரே நாளில் 14 கடைகளில் பூட்டை உடைத்து திருடிய, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சுந்தர் என்பவர் கைது செய்யப்பட்டார்.  மீண்டும் திருட்டில் ஈடுபட நோட்டமிட்ட போது மடக்கி பிடித்த போலீசார், கொள்ளை அடித்த பணத்தில் மது அருந்தி விட்டு பெண்களுடன் உல்லாசமாக இருந்தது காவல்துறை விசாரணையில் தெரியவந்தது. பணம் மற்றும் செல்போன் ஆகியவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

News February 2, 2025

“வாட்ஸ் அப்” காலால் போன ரூ.12.77 லட்சம்

image

கோவையைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு “வாட்ஸ் அப்” அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், மூதலீடு செய்தால், அதிக லாபம் கிடைக்கும் என தெரிவித்தார். இதை நம்பிய அப்பெண், முதலில் ரூ.13 லட்சம் முதலீடு செய்ததில், லாபம் கிடைத்தது. பின் லாபம் கிடைக்கவில்லை, அவரால் பணத்தையும் எடுக்க முடியவில்லை. அந்த நபருக்கு முயற்சித்த போது, “சுவிட்ச் ஆப்” என வந்தது. அப்பெண் போலீசாரிடம் புகார் அளித்தார். மக்களே உஷாராக இருங்கள்.

News February 1, 2025

காவல் நிலையம் அருகே விபரீதம்

image

கோவை, கவுண்டம்பாளையம் அருகே இளைஞர்கள் நேற்று கஞ்சா விற்றதாக, ஜானகிராமன், மணி பரத் என்ற 2 இளைஞர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இன்று தனது மகன் மணிபரத் மீது போலீசார் பொய்யாக கஞ்சா வழக்கு பதிவு செய்ததாக கூறி, அவரது தந்தை சேகர், கவுண்டம்பாளையம் காவல் நிலையத்திற்கு வந்து, பெட்ரோலை தன் மீது ஊற்றி தீக்குளித்துள்ளார். காயமடைந்த அவரை மீட்டு மருத்துவமனையில் போலீசார் அனுமதித்தனர்.

error: Content is protected !!