Coimbatore

News February 5, 2025

கோவையில் மின்தடை ஏற்படும் பகுதிகள்

image

கோவையில் நாளை(பிப்.6) பல்வேறு பகுதியில் மின்தடை ஏற்படுகிறது. அதன்படி, செங்கத்துறை துணை மின் நிலையம், எம்.ஜி.ரோ துணை மின்நிலையம், கள்ளிமலை துணை மின்நிலையம், சரவணம்பட்டி துணை மின்நிலையத்தின் கீழ் உள்ள ஊர்களில் நாளை(பிப்.6) காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்தடை ஏற்படுகிறது. ( ஷேர் பண்ணுங்க)

News February 5, 2025

மாணவர்களுக்கு கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

கோவை அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ-மாணவிகளுக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் அறிவித்துள்ளார். இதற்கு வரும் பிப்ரவரி 28ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

News February 4, 2025

கோவையில் மாணவர்களுக்கு கலெக்டர் முக்கிய அறிவிப்பு 

image

கோவை அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ-மாணவிகளுக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் அறிவித்துள்ளார். இதற்கு வரும் பிப்ரவரி 28ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

News February 4, 2025

“உங்க ஊர், உங்க கோவில்”

image

கோவையை ஆண்ட கோவன் என்ற அரசனும், இளங்கோசரும் கோயில் கட்டி வழிபாடு செய்த அம்மன் தான் கோனியம்மன். இங்கு ஆண்டுதோறும் மாசி மாதம் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். கோவையின் காவல் தெய்வமான கோனியம்மனை நினைத்து தரிசனம் செய்தால், நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம். மேலும், புதிதாக பெண், மாப்பிள்ளை பார்க்க வருபவர்கள் இக்கோவிலுக்கு வந்து தான் பார்ப்பார்கள் என கூறுகின்றனர். (Share பண்ணுங்க)

News February 4, 2025

ரயில் சேவைகள் திட்டமிட்டபடி இயக்கப்படும்

image

கோவை ரயில்வே துறை அதிகாரிகள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கோயம்புத்தூர் வடக்கு ரயில்வே யார்டில் முழுமையான தடம் புதுப்பிக்கும் பணிகளுக்கு வசதியாக 04, 06 ஆகிய தேதிகளில் ரயில் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்படும் அறிவிக்கப்பட்டிருந்தது இந்த நிலையில் 4.02.2025 அன்று மேற்கொள்ள திட்டமிடப்பட்ட பணிகள் தொழில்நுட்ப காரணங்களால் மேற்கொள்ளப்படாது. இதனால் ரயில் சேவைகள் திட்டமிட்டபடி இயக்கப்படும் என்றனர்.

News February 4, 2025

மருதமலையில் வாகனங்கள் செல்ல தடை

image

கோவை மருதமலை கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு இன்று (பிப்.4) முதல் 8 வரை மற்றும் பிப்.13, 14 ஆகிய தேதிகளில் மலைக்கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்வதற்கு அனுமதியில்லை. மேற்படி நாள்களில் பக்தர்கள் மலைப்படிகள் வழியாகவும், கோவில் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேருந்துகளில் சென்று சாமி தரிசனம் செய்யலாம்.

News February 3, 2025

கோவை: இன்றைய இரவு ரோந்து விவரம்

image

கோவை மாவட்டத்தில், பெரியநாயக்கன்பாளையம், பேரூர், கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய பகுதிகளில் இன்று (பிப்.3) இரவு நேர ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உள்ளூர் அதிகாரியை, மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 டயல் செய்யலாம் என்று, கோவை மாநகர போலீசார், தங்களது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

News February 3, 2025

கோவை: எஸ்பி கடும் எச்சரிக்கை!

image

கோவை எஸ் பி கார்த்திகேயன் இன்று விடுத்த செய்தி குறிப்பில், சட்டத்திற்கு புறம்பாக குற்ற செயல்களில் யாரேனும் ஈடுபட்டால், சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குற்றங்களை தடுத்திட பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். தயங்காமல் அழைத்திடுங்கள். கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212, வாட்சப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என அதில் அறிவுறுத்தியுள்ளார்.

News February 3, 2025

கோவை காலை நேரங்களில் குளிர்ந்த சூழல் இருக்கும்

image

கோவை வானிலை துறை அதிகாரிகள் இன்று வெளியிட்ட அறிக்கையில், கோவை 10ம் தேதி வரை காலை நேரங்களில் குளிர்ந்த சூழல் இருக்கும். அதற்குப் பின்னர் காலை நேரங்களில் குளிர்ச்சி குறையும். மேலும் பிப்ரவரி இறுதியில் வெப்பம் 35° வரை செல்ல வாய்ப்புள்ளது. மார்ச் மாதத்தில் அதிகபட்சம் 36° முதல் 37° வரை செல்லவும், ஏப்ரல் மாதத்தில் 38° முதல் 39° வரை செல்லவும் வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

News February 3, 2025

கோவையில் செவிலியருக்கு கத்திக்குத்து

image

கோவை தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வரும் பிரியா, 4 ஆண்டுகளாக, நாகர்கோவிலை சேர்ந்த சுஜித் என்பவரை காதலித்து வந்துள்ளார். திடீரென பிரியா பேசுவதை நிறுத்தியதால், ஆத்திரமடைந்த சுஜித், பிரியாவை சந்தித்து, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தினார். இதில் காயம் அடைந்த பிரியா அலறிய நிலையில், அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். சுஜித்தை போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!