India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிறுமுகையை சேர்ந்த லோகநாதன் கடந்த ஜன.29ஆம் தேதி பவானிசாகர் நீர்த்தேக்க பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், மதுபோதையில் இளைஞர் லோகநாதனை அடித்து கொலை செய்து பவானிசாகர் நீர்த்தேக்க பகுதியில் வீசிய சூர்யா, தமிழ்ச்செல்வன், மோகன்ராஜ் உள்ளிட்டோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவ்வழக்கில் திடீர் திருப்பமாக தினேஷ், சிவக்குமாரை இன்று கைது செய்தனர்.
சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ”பொறியியல் பராமரிப்பு பணிகள் காரணமாக பிப்.7 ஆம் தேதி காலை 6.30 மணிக்கு பாலக்காட்டில் இருந்து புறப்படும் பாலக்காடு டவுன் – திருச்சிராப்பள்ளி விரைவு ரயில் (எண்:16844) பாலக்காடு – கரூா் இடையே மட்டும் இயக்கப்படும். கரூா் – திருச்சிராப்பள்ளி இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் நேற்று விடுத்த செய்தி குறிப்பில், “மத்திய கல்வி அமைச்சகத்தின் ‘காசி தமிழ் சங்கமம்’ நிகழ்ச்சிக்காக பிப்.16ஆம் தேதி கோவையில் இருந்து புறப்படும் கோவை – வாரணாசி சிறப்பு ரயில் பிப்.18ஆம் தேதி வாரணாசி சென்றடையும். மறு மார்க்கத்தில் பிப்.22ஆம் வாரணாசியில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் பிப்.24ஆம் தேதி கோவை வந்தடையும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு-வின் 100வது பிறந்த தினத்தை முன்னிட்டு கோவை வையம்பாளையத்தில் உள்ள மணிமண்டபத்தில் அவரது சிலைக்கு அமைச்சர்கள் சாமிநாதன், செந்தில் பாலாஜி, மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது திமுக மாவட்ட செயலாளர்கள் தொண்டாமுத்தூர் ரவி, தளபதி முருகேசன், நா.கார்த்திக் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உட்பட பலர் இருந்தனர்.
மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் விமல்குமார். இவர் காதலித்து வந்த கல்லூரி மாணவியை அவர் தன்னிடம் முன்பு போல் அன்பாக பேசி பழகாததால், இன்ஸ்டாகிராமில் போலியாக 15 அக்கவுண்டுகள் உருவாக்கி, அந்த அக்கவுண்டுகள் மூலம் அந்த பெண்ணை பற்றி தவறாக வீடியோ பதிவேற்றம் செய்துள்ளார். இதுகுறித்து இளம் பெண் கோவை சைபர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து விமல்குமாரை கைது செய்தனர்.
கோவையில் தனியார் ஐடி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்திற்கு இங்கிலாந்து, சென்னையில் கிளை அலுவலங்கள் உள்ளன. இந்நிலையில், இந்நிறுவனத்தில் 3 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் ஊழியர்கள் 140 பேருக்கு மொத்தமாக ரூ.14.5 கோடியை போனஸாக அறிவித்து இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனால், ஐடி ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கோவை சின்னியம்பாளையம் டீச்சர்ஸ் காலணி பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரன். இவர் அதே பகுதியை சேர்ந்த பெண்ணிடம் திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்து வந்துள்ளார். இதனை அறிந்த அப்பெண்ணின் கணவர் பிரபாகரன் என்பவர், மகேந்திரனை வெட்டிப் படுகொலை செய்துள்ளார். தகவலறிந்து வந்த போலீசார், உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக பிரபாகரன் கைது செய்து விசாரிக்கின்றனர்.
கோவை மாவட்டத்தில் இன்று (05.02.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
▶ கே.ஜி.சினிமா. ▶ ஸ்ரீசத்திவேலன் தியேட்டர். ▶மகாராஜா மல்டிபிளக்ஸ். ▶ ஸ்ரீமுருகன் சினிமாஸ். ▶ அரசன் சினிமாஸ். ▶கல்பனா தியேட்டர். ▶செந்தில் குமரன் தியேட்டர். ▶ கிருத்திகா சினிமாஸ். ▶அர்ச்சனா தர்சனா தியேட்டர். ▶ கங்கா யமுனா தியேட்டர். ▶ காஸ்மோ சினிமாஸ். ▶கற்பகம் சினிமாஸ். ▶ SRM மிராஜ் சினிமாஸ். ▶ பிராட்வே சினிமாஸ். ▶ ஃப்ரூக்பீல்ஸ் பிவிஆர் ▶ ஃபன்மால்
தமிழின் முன்னணி செய்தி நிறுவனமான Way2News Appல் கோவை மாவட்டத்தில் தாலுகா, கிராம செய்தியாளர் ஆக விருப்பம் உள்ளவர்கள், <
Sorry, no posts matched your criteria.