India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை உப்பார வீதியை சேர்ந்த விஜயகுமார் சில மாதங்களுக்கு முன் ஒரு கடையில் டூத் பேஸ்ட் வாங்கியுள்ளார். அதில் எம்ஆர்பி ரூ.58 என குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், கடைக்காரர் ரூ.62 பெற்று ரசீது கொடுத்துள்ளார். கேட்டதற்கு முறையான பதில் இல்லை என கூறப்படுகிறது. இவ்வழக்கை விசாரித்த கோவை நுகர்வோர் கோர்ட் கடைக்காரருக்கு, ரூ.10 ஆயிரம் அபராதம் மற்றும் ரூ.5 ஆயிரம் வழக்கு செலவுக்கு வழங்க நேற்று உத்தரவிட்டது.
கோவை மாவட்டத்தில் இன்று (08.02.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் நேற்று விடுத்த செய்தி குறிப்பில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இயங்கும் ஆடு, மாடு, கோழி மற்றும் பன்றி இறைச்சி கடைகளை வள்ளலார் தினமான வரும் பிப்.11 ஆம் தேதி மூட வேண்டும். அன்றைய தினம் உக்கடம், சக்தி ரோடு, போத்தனூா் ஆடு, மாடு அறுவைமனைகள் செயல்படாது. மீறி செயல்படும் கடைகள் மீது அபராதம், உரிமம் ரத்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் மாநகராட்சி சார்பில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளும் பொதுமக்களுக்கு மகிழ்ச்சியூட்டும் வகையில் ஹேப்பி ஸ்ரீ நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நாளை (09–02–2025) ஞாயிற்றுக்கிழமை கோவை கொடிசியா செல்லும் சாலையில் உள்ள மைதானத்தில் மாநகராட்சி சார்பில் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக கோவை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கோவை- மேட்டுப்பாளையம் சாலை வழியே சாய் பாபா கோவில் வழியே வரக்கூடிய முருகன் மில்ஸ் முதல் எருக்கம்பெனி வரை உயர்மட்ட மேம்பால கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் நேற்று (பிப்.7) முதல் (பிப்.28) வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அவினாசிலிங்கம் பல்கலைக்கழகத்திலிருந்து கவுண்டம்பாளையம் மற்றும் துடியலூர் நோக்கி செல்லும் வாகனங்கள் என்.எஸ்.ஆர். சாலை வழியாக திருப்பி விடப்படும்.
கோவை மாவட்டத்தில் இன்று (07.02.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அஞ்சல் துறையில் பல்வேறு பணியிடங்கள் உள்ளது. அதில் ஓட்டுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் கோவையில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பபடவுள்ளது. இதற்கு https://www.indiapost.gov.in என்ற இணையதளத்தில், விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்தும், The Senior Manager, Mail Motor Service, No.37, Greams Road, Chennai 600006 முகவரிக்கு தபால் அனுப்பவும். நாளை பிப்.8 கடைசி நாள் ஆகும்
தமிழகத்தில் இன்று பல்வேறு பகுதியில் கடும் பனி மூட்டம் நிலவி வருகிறது. இதனால், வானத்தில் மோசமான வானிலை ஏற்பட்டது. இந்நிலையில் முப்பையில் இருந்து 182 பயணிகளுடன் கோவை வந்த ஏர் இந்தியா விமானம், 30 நிமிடம் வானில் வட்டமடித்த பின் தரையிறக்கப்பட்டது. டெல்லியில் இருந்த வந்த இன்டிகோ விமானம் தரையிறக்க முடியாமல் கொச்சி விமான நிலையத்துக்கு திருப்பி விடப்பட்டது.
கோவை மாவட்டத்தில் இன்று (06.02.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டில் மட்டும் 92 சைபர் கிரைம் மோசடி தொடர்பான புகார்கள் வந்துள்ளன,150 முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மோசடியால் ரூ.39 கோடியே 30 லட்சத்தை, மக்கள் இழந்துள்ளனர். இதில் மோசடி நபர்கள் எடுக்க முடியாதபடி ரூ.15 கொடியே 66 லட்சம் பணத்தை முடக்கியுள்ளதாகவும், ரூ.2.26 கோடி மீட்டுள்ளதாகவும், 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என சைபர் கிரைம் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.