Coimbatore

News February 9, 2025

‘திமுக ஆட்சியில் கடன் இரட்டிப்பாகியுள்ளது’

image

கோவை ராமநாதபுரத்தில், பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசுகையில், திமுக ஆட்சியில் தமிழகத்தின் கடன் தொகை இரட்டிப்பாகியுள்ளது. முதலீட்டுக்காக கடன் பெற்றால் அதை வரவேற்கலாம். ஆனால் ஊதாரித்தனமாக, பொருளாதாரம் தெரியாமல் ஆட்சி செய்து கடன் சுமையை திமுக அரசு அதிகரித்து வருகிறது. 2006 ஆம் ஆண்டுக்கு பிறகு இலவச திட்டங்களை வழங்கி திமுக அரசு தான் கடன் சுமையை அதிகமாக்க துவங்கியது

News February 9, 2025

கோவை மாவட்ட ஆட்சியர் மாற்றம்!

image

கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர், திறன் மேம்பாட்டுக் கழக மேலாண் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், கோவை மாவட்ட புதிய ஆட்சியராக பவன்குமார் க. கிரியப் பவனர் நியமிக்கப்பட்டுள்ளார்.

News February 9, 2025

வனத்துறையினர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

image

கோவை வால்பாறை வனத்துறையினர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை வால்பாறை பகுதியில் கடந்த சில நாட்களாகவே யானைகள் நடமாட்டம் அதிக அளவில் காணப்பட்டு வருகிறது. யானை நடமாட்டம் அதிகமாக உள்ளதை அடுத்து, சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பொள்ளாச்சி-வால்பாறை சாலையில், மாலை 6 மணிமுதல் மறுநாள் காலை 6 மணி வரை தற்காலிகமாக இருசக்கர வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

News February 9, 2025

கோவை பெட்டதம்மன் மலைக்கோயில்

image

கோவை பெரியநாயக்கன்பாளையம், பெட்டதாபுரத்தில் புகழ்பெற்ற பெட்டதம்மன் மலைக்கோயில் உள்ளது. இந்த கோயிலை காண 2கி.மீ அடர்ந்த வனப்பகுதிக்குள் பயணிக்க வேண்டும். சக்திவாய்ந்த பெட்டடம்மனை தரிசித்தால், வேண்டியது நிறைவேறும் என்பது ஐதீகம். கவலையை மறந்து குடும்பத்துடன் ஒருநாள் கோயிலில் செலவிட வேண்டும் என நினைப்பவர்களுக்கு, இயற்கை எழில் கொஞ்சும் பெட்டதம்மன் கோயில் ஒரு வரப்பிரசாதம்.

News February 9, 2025

நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடக்கம்

image

கோவை மேற்கு புறவழிச்சாலை திட்டத்தில், மூன்றாம் கட்ட திட்டப்பணிக்கு, நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கியுள்ளன. முதல் கட்டத் திட்டத்தில் 58 சதவீதம் பணிகள் நிறைவு. இரண்டாம் கட்டத் திட்டத்தில் 95 சதவீதம் நிலம் கையகப்படுத்தும் பணிகள் நிறைவு என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தகவல். மேலும் இந்த பணியை அடுத்த ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

News February 9, 2025

வள்ளலார் தினத்தில் மது விற்றால் நடவடிக்கை 

image

கோவை கலெக்டர் கிராந்திகுமார் பாடி நேற்று விடுத்த செய்தி குறிப்பில், வள்ளலாா் தினமான பிப்.11ஆம் தேதி மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள், பார்கள், மனமகிழ் மன்றங்களில் செயல்படும் மதுக்கூடங்கள், நட்சத்திர விடுதி மதுக்கூடங்கள், தமிழ்நாடு ஹோட்டல், சுற்றுலா துறை மதுக்கூடங்கள் உள்ளிட்ட அனைத்தும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மீறி செயல்படுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

News February 9, 2025

அண்ணா பல்கலை வேலை வாய்ப்பு 

image

கோவை அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகத்தில் திட்ட உதவியாளர் பணியிடத்தை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.02.2025. விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.annauniv.edu/pdf/PA_Recruitment_Mechanical_Coimbatore.pdf என்ற இணையதள பக்கத்தில் பிரிண்ட் எடுத்து அந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அண்ணா பல்கலை அலுவலகத்திற்கு நேரில் அனுப்ப அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News February 9, 2025

மூதாட்டிகளிடம் நகை பறித்த இரு பெண்கள் கைது

image

கோவையை சேர்ந்த ஆய்ஷம்மாள், வசந்தா ஆகிய இரு மூதாட்டிகளிடம் 11 பவுன் நகையை மர்ம நபர்கள் பறித்துச்சென்றனர். இப்புகாரின்பேரில் போலீசார் தனிப்படை அமைத்து விசாரித்து வந்த நிலையில், உக்கடத்தில் சுற்றிய 2 பெண்களை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள் தூத்துக்குடியை சேர்ந்த நந்தினி, காளிஸ்வரி என்பதும், மூதாட்டிகளிடம் நகை பறித்ததும் தெரிந்தது. தொடர்ந்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

News February 8, 2025

கோவையில் பாஜக மூத்த தலைவர் எச். ராஜா பேட்டி

image

கோவை சித்தாபுதூர் பகுதியில் உள்ள கட்சி அலுவலகத்தில், பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா இன்று செய்தியாளரை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில் ,அரசியல் தலைவர்கள் இப்படி எல்லாம் இருக்கக் கூடாது என்பதற்கு தமிழ்நாட்டின் திராவிட தலைவர்கள் உட்பட பலர் உதாரணமாக இருந்தாலும், கெஜ்ரிவால் அதில் முதன்மையானவர். அவரை தோற்கடிக்க வேண்டும் என்கிற திடமான முடிவை டெல்லி மக்கள் எடுத்துள்ளனர் என்று தெரிவித்தார்.

News February 8, 2025

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

image

கோவை மாவட்டம் பேரூர் தாலுகாவில் வரும் பிப்.10ஆம் தேதி பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை அளித்து கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி உத்தரவிட்டுள்ளார். பேரூர் பட்டீஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!