India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மேட்டுப்பாளையம், தெவக்கரை புதூரை சேர்ந்தவர்கள் அர்ஜுனன்-ருக்குமணி தம்பதி. இவர்கள் கெம்பநாயக்கன்பாளையத்தில், தனியார் தோட்டத்தில் தங்கி, கூலி வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் நேற்று ஊருக்கு வந்த போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 2.25 சவரன் தங்கம், 1 ஜோடி வெள்ளி கொலுசு திருடு போனது தெரிந்தது. இப்புகாரின் பேரில், அதே பகுதியை சேர்ந்த செந்தில் என்பவரை, போலீசார் கைது செய்தனர்.
கோவை சரவணம்பட்டி உள்ள ஒரு பியூட்டி பார்லரில், அழகிகளை வைத்து பாலியல் தொழில் நடப்பதாக, சரவணம்பட்டி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் தகவல் கிடைத்த இடத்தில், காவல்துறையினர் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு பாலியல் தொழிலில் ஈடுபட்ட சபீபுல்லா (53), சங்கீதா ஷர்மா (25), சோனா (29) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மக்கள் வெயில் நேரங்களில் வெளியே செல்ல நேர்ந்தால் தொப்பி, குடை பயன்படுத்தவும். மேலும் காலணி அணிந்து செல்ல வேண்டும். பின் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வெயிலில் செல்வதை தவிர்க்க வேண்டும். அதிக தண்ணீர் குடிக்க வேண்டும். தேநீர், காபி, மது மற்றும் கார்பன் ஏற்றப்பட்ட (Carbonated) குளிர்பானங்கள் அருந்துவதை தவிர்க்க வேண்டும். இவை உடலில் நீரிழப்பை ஏற்படுத்தும் என கோவை மாநகராட்சி எச்சரித்துள்ளது.
கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 45ஆவது பட்டமளிப்பு விழா இன்று பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா அரங்கில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, செல்வம் ஐஏஎஸ், வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி ஆகியோர் சிறப்பு மற்றும் முதன்மை விருந்தினர்களாக கலந்து கொண்டனர். பின்னர் 4,611 மாணவர்கள் பட்டம் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 45வது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக இன்று கோவை வருகிறார். காலை 8:20 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்படும் அவர், காலை 9:25 மணிக்கு கோவை விமான நிலையம் வந்தடைகிறார். பின், கோவை வேளாண் கல்லூரியில் நடைபெறும் பட்டமளிப்பு வழங்கும் விழாவில் கலந்து கொண்டு மாலை சென்னை திரும்புகிறார்.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கொடநாடு எஸ்டேட்டின் முன்னாள் பங்குதாரரும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகனுமான சுதாகரனுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் தனிப்படை முன்பு வரும் மார்.27ஆம் தேதி சுதாகரன் ஆஜராகும்படி கோவை சிபிசிஐடி சம்மன் அனுப்பி உள்ளது. இதனையடுத்து அவர் அன்று ஆஜராவார் என கூறப்படுகிறது.
கேரளாவில் விவசாயி ஒருவரின் வீட்டில் வளரும் கொங்குநாடு வெள்ளாடு ஒன்று பலரும் ஆச்சரியப்பட்ட அளவிற்கு இருக்கிறது. பீட்டர் என்பவர் ஆடு, கோழி, பசு உள்ளிட்டவைகளை வளர்த்து வருகிறார். அந்த ஆடு 1 அடி 3 அங்குலம் (40.50 செ.மீ.) உயரமும், 1 அடி 1 அங்குலம் (33.5 செ.மீ.) அகலம் இருக்கிறது. இந்த ஆடு தான் உலகில் வாழும் ஆடுகளில் மிகக் குட்டையான ஆடு என அங்கீகாரம் பெற்றுள்ளது. கொங்குநாட்டு மக்களே ஷேர் பண்ணுங்க
கோவை, வெள்ளியங்கிரி மலையை ஏறி கீழே இறங்கும் போது திருவண்ணாமலையைச் சேர்ந்த சிவா என்பவர் 3வது மலையில் மூச்சு திணறல் காரணமாக உயிரிழந்தார். மேலும் இவர் ஏற்கனவே இதயத்தில் பிரச்சனை இருந்ததாகவும் அறுவை சிகிச்சை செய்ததாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஆலாந்துறை போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: தமிழக அரசின் அறிவிப்பையடுத்து தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் AAY மற்றும் PHH குடும்ப அட்டைதாரர்கள் மார்ச்.31ஆம் தேதிக்குள் தங்கள் கைரேகையை பதிவு செய்ய வேண்டும் எனவும், கைரேகையை பதிவு செய்யாத குடும்ப அட்டைதார்கள் தங்களுடைய நியாய விலைக் கடைக்கு சென்று கைரேகையை பதிவு செய்ய வேண்டும். மிஸ் பண்ணிடாதீங்க. SHARE பண்ணுங்க
கோவையில் லாரிகள் மூலம் தண்ணீர் நிரப்பிக் கொடுக்க, மேல்நிலைத்தொட்டிகள் கட்டி, 24 மணி நேரமும் அரசு அனுமதிக்கும் கட்டணத்தில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே அனைத்து தண்ணீர் லாரி மற்றும் டிராக்டர் உரிமையாளர்கள் தங்களது விபரங்கள் மற்றும் நாளொன்றுக்கு தேவையான தண்ணீர் விபரத்தை, cityengineer.coimbatore@gmail.com, Whatsapp No: 99440-64948 வாயிலாக தெரிவிக்குமாறு மாநகராட்சி நிர்வாகம் இன்று தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.