Coimbatore

News February 10, 2025

கோவை மாநகர காவல் துறையினர் அறிவுறுத்தல்

image

கோவை மாநகர காவல் துறையினர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நாளை நடைபெறும் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு,  மருதமலை சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, மருதமலை வரும் நான்கு சக்கர வாகனங்களில் வரும் பக்தர்கள், வள்ளியம்மாள் கோவில் பார்க்கிங் மற்றும் சட்டக்கல்லூரி பார்க்கிங் பகுதிகளில், தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு செல்லலாம் என்றனர்.

News February 10, 2025

பாலியல் தொழில் நடத்திய நடத்திய 5 பேர் கைது

image

கோவை மாவட்டம் காந்திபுரம் பகுதியில், பாலியல் தொழில் நடைபெறுவதாக, காட்டூர் காவல்துறையினருக்கு நேற்று தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில், தகவல் கிடைத்த இடத்தில் காவல்துறையினர் நேற்று திடீர் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு இளம் பெண்களை வைத்து, பாலியல் தொழிலில் ஈடுபட வைத்த கார்த்திகேயன் (29), சின்ராஜ் (30), நெங்கெய்தெம் (22), லால்நுன்புலி (23), ஜீவிதா (27) என்பவர்களை, போலீசார் கைது செய்தனர்.

News February 10, 2025

பேருந்தில் இருக்கையில் வீச்சு அரிவாள்கள்

image

கோவை பொள்ளாச்சி அரசு பேருந்தில் இருக்கையில் அமர சீட் பிடிப்பதற்காக இரண்டு அரிவாள்களை பயணிகள் வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தென்னை மரம் ஏறும் தொழிலாளிகள் மரத்தில் இருந்து தேங்காய் வெட்டுவதற்காக அரிவாள்கள் கொண்டு செய்வது வழக்கம். இன்று காலை வேலைக்கு புறப்பட்ட தென்னை மரம் ஏறும் தொழிலாளிகள் தாங்கள் அமரும் சீட்டில் இடம் பிடிப்பதற்காக வைத்துவிட்டு தேநீர் குடிக்க இறங்கி உள்ளனர்.

News February 10, 2025

விரைவில் பதவியேற்க உள்ள கலெக்டர் 

image

கோவை கலெக்டராக பவன்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இன்னும் சில நாட்களில் கோவை மாவட்ட ஆட்சியராக பதவியேற்க உள்ளார். இவர் திருப்பூர் மாவட்ட மாநகராட்சி ஆணையராக பணியாற்றி வந்துள்ளார். கோவை மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த கிராந்திகுமார் பாடி, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

News February 10, 2025

கோவை செம்மொழி பூங்கா கட்டணம் வசூலிக்க முடிவு

image

கோவை, காந்திபுரத்தில் உள்ள மத்திய சிறை மைதானத்தில், 45 ஏக்கரில் ரூபாய்.165 கோடி மதிப்பீட்டில் செம்மொழி பூங்கா அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வரும் ஜூன் மாதம் பயன்பாட்டுக்கு கொண்டு வர இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. பூங்கா பயன்பாட்டுக்கு வந்தபின், பூங்காவை சுற்றிப்பார்க்க, நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.25, சிறியவர்களுக்கு ரூ.10 வசூலிக்க, கோவை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

News February 10, 2025

கோவையில் இங்கு மட்டும் விடுமுறை

image

கோவை: பேரூர் பட்டீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி இன்று 10ஆம் தேதி பேரூர் தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கோவிலில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இந்நிலையில் இக்கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பேரூர் தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று ஒரு நாள் மட்டும் மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவித்துள்ளது.

News February 10, 2025

கோவை: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (09.02.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News February 9, 2025

பிறவி பயன் அடைந்து விட்டேன் – இபிஎஸ் பேச்சு

image

“அவிநாசி அத்திக்கடவு திட்டத்தால் பிறவி பயன் அடைந்து விட்டேன், திமுக அரசு திறமையற்ற அரசு, அத்திக்கடவு திட்டத்தை காழ்ப்புணர்ச்சிகள் காரணமாக கிடப்பில் போட்டது” என அத்திக்கடவு அவிநாசி விவசாயிகள் சங்கத்தினர் இன்று (09–02–2025) அன்னூரில் நடத்தும் பாராட்டு விழாவில், தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு.

News February 9, 2025

பேரூர் சாலையில் போக்குவரத்து மாற்றம்

image

கோவை, பேரூர் பட்டீஸ்வரர் கோவில் குடமுழுக்கு விழா முன்னிட்டு நாளை பேரூர் செல்லும் சாலையில் அதிகாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை மேற்கே தொண்டாமுத்தூர், ஆலாந்துறை, பூண்டி, காருண்யா நகர் பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் செட்டிபாளையம் அருகே கோவை புதூர் மெயின் ரோடு வழியாகவும், காந்திபுரம், ரயில்நிலையம், டவுன்ஹால் பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் சிவாலயா அருகே புட்டுவிக்கி வழியாகவும் திருப்பி விடப்படும்.

News February 9, 2025

காதலியின் வீட்டில் முன்பு ரகளை ஈடுபட்ட காதலன்

image

கோவை சேர்ந்தவர் சித்ரா (36) இவரது மகள் பக்கத்து வீட்டில் வசிக்கும் வினோத்குமார் (22) ஆகியோர் காதலித்து வந்துள்ளனர். இந்தநிலையில், சித்ரா மகள் வினோத்குமார் நடவடிக்கை பிடிக்காமல் அவரை விட்டு விலகி உள்ளார். இதனால் வினோத்குமார் நேற்று சித்ரா வீட்டின் முன்பு தகாத வார்த்தைகளில் பேசி மிரட்டல் விட்டு சென்றுள்ளார். பின்னர் இது குறித்து காவல்துறையினர் நடத்தி விசாரணையில், வினோத் குமார் கைது செய்தனர்.

error: Content is protected !!