Coimbatore

News February 12, 2025

திமுக பிரமுகர் மகன் கைது

image

கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த திமுக பிரமுகர் அண்ணாதுரை மகன் தம்பிதுரை. இவர் அரசு வேலை, அரசு இலவச வீடுகள் பெற்று தருவதாக கூறி பல லட்சம் மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த தம்பிதுரை இன்று வீட்டிற்கு வந்ததை அறிந்த பாதிக்கப்பட்டவர்கள் வீட்டின் முன்பு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின் தகவலறிந்த கோவை குனியமுத்தூர் போலீசார் தம்பிதுரையை கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

News February 12, 2025

ரூ.3,507.87 கோடி வங்கி கடன் கலெக்டர் தகவல்

image

கோவை மாவட்டத்தில் 16 ஆயிரத்து, 338 மகளிர் சுய உதவி குழுக்கள் செயல்படுகின்றன. இந்தக் குழுக்களுக்கு 2024-25ல் ரூ.1,229 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதுவரை, ரூ.956.81 கோடி, 15,565 குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில், 57,241 குழுக்களுக்கு ரூ.3,505.87 கோடி வங்கி கடன் வழங்கப்பட்டுள்ளது என கலெக்டர்.கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்

News February 11, 2025

மருதமலை முருகன் பற்றி தெரியுமா?

image

மருதமலை முருகன் கோயில், முதல் முதலில் கொங்கு சோழர்களால் நிர்மாணிக்கப்பட்டது, விஜய நகர, கொங்கு சிற்றரசர்களால் திருப்பணிகள் செய்யப்பட்டு இத்திருத்தல் உருவானது. மருதாசலம், மருதவரையான், மருதப்பன், மருதைய்யன் என்ற பெயர்களில், 9 ஆம் நூற்றாண்டிலேயே மக்களிடம் இந்த கோயில் அறியப்பட்டிருந்தது. பாம்பாட்டி சித்தர், இங்கு சில காலம் வசித்துள்ளார். தீமைகளை போக்கும் சர்வ வல்லமை, மருதமலை முருகனுக்கு உள்ளதாம்.

News February 11, 2025

கோவை : இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (11.02.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News February 11, 2025

மருதமலையில் சாமி தரிசனம் செய்த அமைச்சர் 

image

கோவை மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் தைப்பூச தேர் திருவிழாவில் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டார். அதற்கு முன்னதாக சாமி தரிசனம் மேற்கொண்டு பின்னர் தேர் கோவிலை சுற்றி வலம் வந்த போது அதில் கலந்து கொண்டு தேரில் வடம் பிடித்து இழுத்தார். அமைச்சருடன் ஏராளமான பக்தர்கள் சேர்ந்து தேரை இழுத்தனர்.

News February 11, 2025

தேரை வடம் பிடித்து இழுத்த வானதி சீனிவாசன்

image

தைப்பூசத்தை முன்னிட்டு கோவை கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோவிலில் சண்முக சுப்ரமணிய சுவாமி திருத்தேரோட்டம் இன்று (பிப்.11) நடைபெற்றது. இந்நிகழ்வில் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து திருத்தேரை வடம் பிடித்து இழுத்தார். மேலும் இந்நிகழ்வில் பாஜக நிர்வாகிகள் மற்றும் பக்த பெருமக்கள் பலர் கலந்து கொண்டனர். 

News February 11, 2025

மாவட்ட நீதிமன்றங்களில் 238 காலிப் பணியிடங்கள்

image

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில்,மொத்தமுள்ள 1,374 நீதிபதிகள் பணிடங்களில், 1,040 நீதிபதிகள் பணியாற்றி வருகின்றனர். 334 நீதிபதிகள் பணியிடம் காலியாக உள்ளது. கோவை மாவட்டத்திலுள்ள, 61 நீதிமன்றங்களில், சில கோர்ட்களில் மட்டும் நீதிபதி பணியிடம் காலியாக இருக்கிறது. மேலும் 238 நீதிமன்ற ஊழியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளது. இதை நிரப்பினால் தான் பணிச்சுமை குறையும் என்று நீதிமன்ற ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

News February 11, 2025

ரஜினியை சந்தித்த எஸ்.பி.வேலுமணி 

image

கோயம்புத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், அதிமுக முன்னாள் அமைச்சரும் அதிமுக அரசு கொறடாவுமான s.p வேலுமணி நேற்று (பிப்.10) தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து தனது மகனின் திருமண அழைப்பிதழை வழங்கினார். உடன் அவரது சகோதரர் மற்றும் உறவினர்கள் இருந்தனர்.

News February 11, 2025

மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி

image

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், நெல்லிக்காயிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி (12.02.2025 மற்றும் 13.02.2025) ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. நெல்லி பானங்கள் – பழரச பானம் மற்றும் தயார் நிலை பானம் தயாரிக்க பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது. மேலும் இது குறித்து தகவல்களுக்கு 94885-18268 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 11, 2025

கோவை: இரவு ரோந்து போலீசாரின் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (10.02.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!