Coimbatore

News February 21, 2025

கோவையில் நாடே திரும்பிப் பார்க்கும் கிரிக்கெட் ஸ்டேடியம்

image

கோவை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் திரும்பி பார்க்கும் வகையில் கோவையில் பிரமாண்ட ஸ்டேடியம் அமைக்கப்பட உள்ளது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) கோயம்புத்தூரில் உள்ள ஒண்டிப்புதூரில் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் கட்ட AAI யிடம் NOC பெற்றுள்ளது. டெண்டர்கள், பிற ஒப்புதல்கள் அடுத்தடுத்த நாட்களில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

News February 21, 2025

கோவை: விண்ணப்பிக்க அழைப்பு

image

கோவை கலெக்டர் பவன் குமார் நேற்று விடுத்த செய்தி குறிப்பில், கோவை மாவட்டத்தில், குழந்தைகள் நல குழுவுக்கு, ஒரு பெண் உள்ளிட்ட தலைவா், உறுப்பினா்கள் அரசால் மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர். இது அரசுப் பணி இல்லை. விண்ணப்பத்தை ஆட்சியர் அலுவலக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திலோ அல்லது அதற்கான இணையதளத்தில் இருந்தோ பதிவிறக்கம் செய்து மார்.7க்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News February 21, 2025

மேட்டுப்பாளையம் வன பத்ரகாளியம்மன்!

image

மேட்டுப்பாளையம், பவானி ஆற்றங்கரையோரம் புகழ்பெற்ற வன பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. மிகவும் சக்திவாய்ந்த தெய்வமான வன பத்ரகாளியை வணங்கிவிட்டு சென்றுதான், பீமன், ஆரவள்ளி, சூரவள்ளி என்ற சூனியக்காரிகளை வென்றாராம். அனைத்து தடைகளையும் தகர்த்தெரியும் வல்லமை கொண்டவளாக அம்மன் வீற்றிருக்கிறாள். மாந்திரீகம், சூனியத்தால் பாதிக்கப்பட்டவர்கள், ஒருமுறை அம்மனை சென்று, மனமுருக வழிபட்டால், அந்த தடைகள் நீங்குமாம்.

News February 21, 2025

கோவை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் 

image

கோவை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 28) நடைபெறுகிறது. பிப்ரவரி மாதத்திற்கான வேளாண் உற்பத்திக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கும், அதைத் தொடர்ந்து 10.30 மணிக்கு விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டமும் நடைபெறுகிறது. மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள இரண்டாவது தளக் கூட்ட அரங்கில் ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தலைமையில் இக்கூட்டம் நடைபெற உள்ளது.

News February 21, 2025

108 ஆம்புலன்ஸ் டிரைவர் வேலைக்கு நேர்முகத் தேர்வு

image

கோவை, பூ மார்க்கெட் ‘108’ஆம்புலன்ஸ் அலுவலகத்தில்,ஆம்புலன்சில், டிரைவர் பணிக்கு நேர்முக தேர்வு, நாளை(பிப்-22) நடக்கிறது. இதற்கு 24 –35 வயதுக்குள் இருக்க வேண்டும். 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் எடுத்து குறைந்தபட்சம் 3 ஆண்டுகள்; பேட்ஜ் வாகன ஓட்டுநர் உரிமம் எடுத்து, குறைந்தபட்சம் ஒரு ஆண்டு நிறைவு பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 21, 2025

கோவையில் வேலைவாய்ப்பு முகாம்!

image

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று (பிப்.21) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இதில் தனியார் நிறுவனங்களில் செவிலியர், டெய்லர், கணினி ஆபரேட்டர், தட்டச்சர், டிரைவர் போன்ற பணியிடங்களுக்கு ஆட்கள் நிரப்பப்பட உள்ளனர். எனவே வேலை வாய்ப்பு தேடுபவர்கள் முகாமை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News February 21, 2025

கால்நடை கணக்கெடுக்கும் பணி மார்ச் வரை நீட்டிப்பு

image

கோவை மாவட்டத்தில் கால்நடை கணக்கெடுப்பு பணிகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளது. தற்போது, வரை சராசரியாக,1,046 கிராமங்களில் 12 லட்சம் வீடுகளில் கணக்கெடுப்பு பணி முடிவு பெற்றுள்ளது. மாடுகள் 2.59 லட்சம், 39 லட்சத்து 80 ஆயிரம் கோழிகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. மார்ச் மாதத்திற்குள் கணக்கெடுப்பு பணிகள் மற்றும் பதிவு பணிகள் மற்றும் பதிவு பணிகள் நிறைவுபெறும் என கால்நடை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News February 21, 2025

கோவை: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில், பெரியநாயக்கன்பாளையம், பேரூர், கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய பகுதிகளில் இன்று (பிப்.20) இரவு நேர ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உள்ளூர் அதிகாரியை, மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 டயல் செய்யலாம் என்று, கோவை மாநகர போலீசார், தங்களது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

News February 20, 2025

மனைவியை கத்தியால் குத்திய கணவன்

image

கோவை மைல்கல் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் (39) இவரது மனைவி நிவேதிதா (35) இருவருக்கும் இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நிவேதிதா வேறு ஒருவருடன் பழகியதாக கூறப்படுகிறது. இதனால் நேற்று கோவை குனியமுத்தூர் பகுதியில் நிவேதிதா நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது நாகராஜ் அவரை கத்தியால் குத்தி விட்டு தப்பிச் சென்றார். பின்னர் குனியமுத்தூர் போலீசார் நாகராஜை கைது செய்தனர்.

News February 20, 2025

தபால் ஆபிசில் வேலை: உடனே அப்ளை பண்ணுங்க

image

அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். கோவையில் மட்டும் 69 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச் 3ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!