India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பொள்ளாச்சி ரயில் நிலைய பெயர் பலகையில் இருந்த இந்தி எழுத்துகளை இன்று (பிப்.23) காலை திராவிட முன்னேற்றக் கழகத்தினர் கருப்பு மை வைத்து அழித்த நிலையில் சில மணி நேரங்களில் ரயில் நிலைய அதிகாரிகள் மீண்டும் இந்தியில் எழுதினர். திமுகவின் கோவை தெற்கு சட்ட திட்ட குழு உறுப்பினர் செல்வராஜ் உட்பட ஐந்து பேரு மீது பொள்ளாச்சி காவல்துறையினர் வழக்குப்பதிந்தனர்.
திமுகவில் அமைச்சர் செந்தில்பாலாஜி, அதிமுகவில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, பாஜகவில் அண்ணாமலை, வானதி சீனிவாசன் உள்ளிட்ட ஆகப்பெரும் ஆளுமைகள் கோவையில் தீவிர அரசியலில் ஈடுபட்டு வரும் நிலையில் கோவை உக்கடம் ஆட்டோ டிரைவரான பாபுவை கோவை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளராக அறிவித்து திகைக்க வைத்திருக்கிறார் தவெக தலைவர் விஜய். ஆட்டோ ஓட்டிக்கொண்டே அரசியலிலும் ஜெயிப்பேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் மும்மொழிக் கொள்கை குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இடையே கடும் வார்த்தைப் போர் ஏற்பட்டது. இந்நிலையில் மும்மொழிக் கொள்கை குறித்து விவாதிக்க நாங்கள் தயார்… நீங்கள் தயாரா? என பாஜக கோவை முன்னாள் மாவட்டத் தலைவர் பாலாஜி உத்தமராமசாமி பெயரிட்டு கோவையின் பல்வேறு பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இந்தப் போஸ்டர் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டத்தில் இன்று (22.02.2025) இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள போலீசார் விபரம் வெளியிடப்பட்டுள்ளது. மாநகரில் டி.எஸ்.பி. சிவகுமாரும், மற்றும் பி.என்.பாளையம், கருமத்தம்பட்டி, தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, பேரூர், பொள்ளாச்சி, வடக்கிபாளையம், வால்பாறை, காரமடை, சிறுமுகை, மேட்டுப்பாளையம் போலீசாரின் பெயரும் தொலைபேசி எண்ணும் பகிரப்பட்டுள்ளது. மேலும் அவசர எண் 100 ஐ தொடர்பு கொள்ளலாம்.
கோவை, மேட்டுப்பாளையம், பவானி ஆற்று நீரை குடிநீராக பயன்படுத்த வேண்டாம் என சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆலாங்கொம்பு நீர்த் தேக்கத்தில் தண்ணீர் கறுப்பு நிறமாக மாறிய நிலையில், ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும், முடிவுகள் தெரியும் வரை தண்ணீரை குடிநீராக பயன்படுத்த வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோவை, ஆவாரம்பாளையம் பகுதியில் நேற்று மாலை வீட்டு வாசல்களில் “இந்தி திணிப்பை எதிர்ப்போம், “திணிக்காதே திணிக்காதே இந்தியை திணிக்காதே’ என்று கோலமிட்டுள்ளனர். மேலும் இதுபற்றி அப்பகுதி திமுகவினர் கூறுகையில், மத்திய அரசின் மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பை காட்டவே அவரவர் வீட்டு வாசலில் கோலமிட்டு தங்களின் எதிர்ப்பை பதிவு செய்வதாக கூறினர்.
கோவையில் 17வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் 7 கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தாமாக முன் வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்து கொண்ட தேசிய மகளிர் ஆணையம், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக, 3 நாட்களில் அறிக்கை சமர்பிக்க தமிழக டி.ஜி.பி.,க்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கோவை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை சார்பில் நேற்று அறிக்கை வெளியிடப்பட்டது. இதில் “Myv3ads நிறுவனம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டு வந்தது. இதுதவிர கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களிலும் இயங்கி வந்தது. பின் மோசடி புகாரால் நிறுவனத்தின் செயல்பாடுகள் முடக்கப்பட்ட நிலையில், ஏமாற்றம் அடைந்தவர்கள் காலம் தாமதிக்காமல் புகார் அளிக்கலாம் என கேட்டுக்கொண்டனர்.
கோவை கலெக்டர் பவன்குமார் தலைமையில் பிப்ரவரி மாதத்துக்கான வேளாண்மை உற்பத்திக்குழு கூட்டம் வரும் 28ம் தேதி காலை 9:30 மணிக்கு நடக்கிறது. அதைத் தொடர்ந்து, காலை 10:30 மணிக்கு விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது. கோவை மாவட்ட விவசாயிகள், குறைதீர்க்கும் கூட்டத்தில் பங்கேற்று, விவசாயம் தொடர்பான தங்களது பிரச்னைகளுக்கு தீர்வு காணலாம்.
கோவை மாவட்டத்தில் இன்று (21.02.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.