India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை கலெக்டர் அலுவலகம் பழைய நுழைவு வாயில் எதிரில் சிறிய ரவுண்டானா உள்ளது. இதில் உயர் கோபுர மின்விளக்கு மற்றும் சிறிய பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரவுண்டானாவில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு கல்வி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நினைவுச் சன்னம் அமைக்கப்பட்டது. நேற்று இரவு நினைவுச் சின்னத்தில் இருந்த சிறுமியின் சிலை உடைந்த நிலையில் உள்ளது.
மருதமலை முருகன் கோயில், முதல் முதலில் கொங்கு சோழர்களால் நிர்மாணிக்கப்பட்டது. விஜய நகர, கொங்கு சிற்றரசர்களால் திருப்பணிகள் செய்யப்பட்டு இத்திருத்தல் உருவானது. மருதாசலம், மருதவரையான், மருதப்பன், மருதைய்யன் என்ற பெயர்களில், 9 ஆம் நூற்றாண்டிலேயே மக்களிடம் இந்த கோயில் அறியப்பட்டிருந்தது. பாம்பாட்டி சித்தர், இங்கு சில காலம் வசித்துள்ளார். தீமைகளை போக்கும் சர்வ வல்லமை, மருதமலை முருகனுக்கு உள்ளதாம்.
தேர்தல் முடிந்து மூன்று வருடமாகியும், டெபாசிட் தொகை திருப்பித் தரவில்லை என புகார் எழுந்துள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரியில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அன்னூர் பேரூராட்சியில் தேர்தல் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட்டனர். இதில் மனுவை வாபஸ் பெற்றவர்கள், தோல்வி அடைந்தவர்கள்போன்றவர்களுக்கு இன்னும் டெபாசிட் தொகை திருப்பி வழங்கப்படவில்லை.
கோவை கோட்டத்தில் உள்ள தபால் நிலையங்களில் தபால் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி, பொது காப்பீடு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டுக்கு வெறும் 560 முதல் 799 ரூபாய் வரை பிரீமியத்தில் ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்து காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதற்கான சிறப்பு முகாம்கள் வரும் மார்ச் 6ம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுத்துறையை சேர்ந்த யூனியன் வங்கியில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘அப்ரென்டிஸ்’ பிரிவில் தமிழகம் முழுவதும் 122 காலிப் பணியிடங்கள் உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க எதாவது ஒரு பட்டப்படிப்பு படித்திருந்தால் போதும். 20 -28 வயது உடையவராக இருக்க வேண்டும். மாதம் ரூ.15 ஆயிரம் வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் வரும் <
கோவை மாநகராட்சியில் நடப்பு நிதியாண்டுக்கான சொத்து வரி வசூல் ரூ.477.37 கோடி என இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இதை வசூலிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த இலக்கு நடப்பு பிப்ரவரி மாதத்தில் ரூ.609.30 கோடி என உயர்த்தி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி மத்திய மண்டலத்திற்கு ரூ.528.72 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டு இதில் ரூ.284.13 கோடி வசூலாகியுள்ளது. இன்னும் ரூ.244.59 கோடி பென்டிங் உள்ளது.
மதுரையில், மூளைச்சாவு அடைந்த ஒருவரது இதயம் கோவை மருத்துவமனையில் அனுமதித்துள்ள நோயாளி ஒருவருக்கு பொருத்த முடிவு செய்யப்பட்டது. மதுரையில் ஒரு தனியார் மருத்துவமனையிலிருந்து காலை 10:30 மணிக்கு, இதயத்துடன் ஆம்புலன்ஸ் கிளம்பியது. மதுரை, திண்டுக்கல், திருப்பூர் என மூன்று மாவட்டங்களைக் கடந்து, கோவைக்கு மதியம், 1:15 மணிக்கு, அதாவது 2 மணி, 45 நிமிட நேரத்தில் இதயம் கொண்டு வரப்பட்டது.
கோவை சேர்ந்தவர் 18-வயது இளம்பெண். இவர் மேட்டுப்பாளையம் சேர்ந்த விமல்குமார் (22) என்பவரை காதலித்து வந்தார். இந்நிலையில் இளம்பெண் விமல்குமாரின் நடவடிக்கை பிடிக்காமல் தவிர்த்து வந்துள்ளார். இதனால் விமல் குமார் இன்ஸ்டாகிராமில் போலியாக 10 கணக்கு தொடங்கி இளம்பெண் பற்றி தவறாக அவதூறு பரப்பி வந்துள்ளார். பின்னர் நேற்று இளம்பெண் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார் போலீசார் விமல் குமாரை கைது செய்தனர்.
கோவை கலெக்டர் பவன்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது. தமிழ்நாட்டில் உள்ள கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், விதவைகள், முதிர்கன்னிகள் மற்றும் திருநங்கைகள் உள்ளிட்டோரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் நபர்களுக்கு சுய தொழில் தொடங்க ரூ.50,000 வழங்கப்படுகிறது.
கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கும் திட்டத்திற்கு, இந்திய விமான நிலைய ஆணையம் தடையில்லா சான்றிதழ் வழங்கியுள்ளது. கோவை, ஒண்டிப்புதூர் பகுதியில் சுமார் 20.72 ஏக்கரில் அமையவிருக்கும் கிரிக்கெட் மைதானத்திற்கான வடிவமைப்பை 1 வாரத்தில் இறுதி செய்ய விளையாட்டுதுறை முடிவு எடுத்துள்ளது.
Sorry, no posts matched your criteria.