India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை மாவட்டத்தில் இன்று 128 மையங்களில் நடைபெறும் +2 தேர்வை 35,294 பேர் எழுதுகிறார்கள். பொதுத்தேர்வை 363 பள்ளிகளைச் சேர்ந்த 16,353 மாணவர்கள்,18,941 மாணவிகள் என மொத்தம் 35,294 பேர் எழுதுகின்றனர். இது தவிர 649 தனித் தேர்வர்கள் எழுதுகின்றனர். 7 இடங்களில் வினாத்தாள் கட்டு காப்பு மையங்கள் அமைக்கப்பட்டு மாணவர்களை கண்காணிக்க 264 பறக்கும்படையினர், 2150 அறை கண்காணிப்பாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கோவை அரசு கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நாளை (மார்ச் 04) நடைபெற உள்ள நிலையில், வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்க மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. காலை 9 மணி முதல் நடைபெற இருக்கும் இந்த முகாமில் 60க்கு மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. எனவே இந்த வாய்ப்பினை மாணவர்கள் முறையாக பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர்.
கோவை, தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக கழக தலைமை நிலைய செயலாளர், முன்னாள் அமைச்சருமான SP.வேலுமணி இல்லத்தில், அவரது மகன் விஜய் விகாஸ் – தீக்சனா திருமண விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் சூலூர் எம்எல்ஏ VP.கந்தசாமி, கிணத்துக்கடவு எம்எல்ஏ செ.தாமோதரன், சிங்காநல்லூர் எம்எல்ஏ கே.ஆர்.ஜெயராம், கோவை வடக்கு எம்எல்ஏ அம்மன் கே அர்ச்சுனன் உள்ளிட்டோர் நேரில் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
தமிழக முழுவதும் பிளஸ் 1 பிளஸ் 2 படித்த மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று துவங்கி வரும் 23ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனையொட்டி கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி +1 மற்றும் +2 பொதுத்தேர்வு எழுதிடும் அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும், தேர்வினை சிறப்பாக எழுதி அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சியடைய எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டுள்ளார்.
கோவை: எஸ்.என்.எஸ். கல்வி குழுமங்களின் தலைவர் சுப்ரமணியன் (75) வயது மூப்பு காரணமாக நேற்று காலமானார். இவர், 30 ஆண்டுகளாக கல்விப்பணியோடு, சமுதாயப்பணிகளிலும் தன்னை இணைத்துக்கொண்டவர். விளையாட்டுத்துறையிலும் மாணவர்களை ஊக்குவித்து வந்தார். இவரது மறைவுக்கு துறை சார்ந்த அதிகாரிகள், கல்வியாளர்கள், விளையாட்டு வீரர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர். இது கோவையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. கோவையில் மட்டும் 69 காலிப்பணியிடங்கள் நிரப்படவுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பளமாக ரூ.10,000 முதல் 29ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க இன்றே (மார்ச்.03) கடைசி நாளாகும். விண்ணப்பிக்க இங்கே <
கோவை,சரவணம்பட்டி குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில், ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவர்களை மேம்படுத்தும் ‘நல்லோசை’ என்ற திட்டத்தை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க.கிரியப்பனவர் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தார். இத்திட்டத்தின் மூலம் விடுதிகளில் உள்ள மாணவர்களின் செயல்பாடுகளை கண்டறிந்து அவர்களை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்லலாம்.
மேட்டுப்பாளையம் வெள்ளிபாளையம் சாலையை சேர்ந்தவர் கருப்பாயி(98). இவர் தகர செட்டிலான வீட்டில் வசித்து வந்தார். இந்தநிலையில் நேற்றிரவு இவரது பக்கத்து வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு போடப்பட்ட பந்தலில் சீரியல் லைட் தீப்பிடித்து எரிந்துள்ளது. இதில் கருப்பாயி வீடும் தீப்பற்றி எரிந்துள்ளது. இந்த விபத்தில் கருப்பாயி உடல் கருகி பலியானார். மேட்டுப்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
கோவையில் 5 இடங்களை மையமாக வைத்து மெட்ரோ பணிகள் நடக்க உள்ளன. அவினாசி சாலை, திருச்சி சாலை வழியாக மெட்ரோ பாதை. சத்தி சாலை, சிறுவாணி சாலை வழியாக மெட்ரோ பாதை. மேட்டுப்பாளையம் சாலைகள் வழியாக மெட்ரோ பாதைகளை அமைக்க முடிவு செய்துள்ளனர், மொத்தமாக 139 கிலோ மீட்டர் தூரத்துக்கு இந்த மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும். இதற்கான அனுமதி 6 மாதங்களுக்கு ம் கிடைக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
கோவை மாவட்டத்தில் இன்று (02.03.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.