India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கோவை மக்களே, பேங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 514 Credit Officers பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 25 – 40 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள்<

மேட்டுப்பாளையம் காந்தி மைதானத்தில் நூற்றுக்கணக்கான உருளைக்கிழங்கு மற்றும் பூண்டு மண்டிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு உருளைக்கிழங்கு மற்றும் பூண்டு லோடினை இறக்க, ஏற்ற வரும் லாரிகள் நெல்லித்துறை சாலையில் தாறுமாறாக நிறுத்தப்படுகின்றன. இதனால் வனபத்ரகாளியம்மன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

சரவணம்பட்டி பகுதியை சேர்ந்தவர் நிஜேஷ் (42). இவர் தொழில் செய்வதற்காக கடன் வாங்கியதில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மன வேதனையில் இருந்த அவர் நேற்றிரவு தனது உறவினருக்கு வாய்ஸ் SMS அனுப்பி விட்டு தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

கோவையில் நாளை(ஜன.6) மாதாந்திர மின்பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் பெரியநாயக்கன்பாளையம், கோவனூர், கூடலூர், கவுண்டம்பாளையம், ஜோதிபுரம், பிரஸ் காலனி, வீரபாண்டி, காரமடை, தேக்கம்பட்டி, சிக்கராம்பாளையம், கரிச்சிபாளையம், கண்ணர்பாளையம், எம்.ஜி.புதூர், தாயனூர், மருதூர், சென்னியம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது. (SHARE)

கோவை மக்களே, ரயில்வே பணியில் சேர சூப்பர் வாய்ப்பு! இந்தியன் ரயில்வேயில் குரூப் D 22,000 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு 10ம் வகுப்பு முடித்திருந்தால் போதுமானது. மாத சம்பளம் ரூ. 18,000 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள், வரும் ஜன.29ம் தேதிக்குள் இந்த <

கோவை மக்களே அவசர காலத்தில் உதவும் எண்கள்: தீயணைப்புத் துறை – 101, ஆம்புலன்ஸ் உதவி எண் – 102 & 108, போக்குவரத்து காவலர் -103 , பெண்கள் பாதுகாப்பு – 181 & 1091 ,ரயில்வே விபத்து அவசர சேவை – 1072 , சாலை விபத்து அவசர சேவை – 1073 , பேரிடர் கால உதவி – 1077, குழந்தைகள் பாதுகாப்பு -1098, சைபர் குற்றங்கள் தடுப்பு – 1930, சைபர் குற்ற உதவி எண் – 1930, மின்சாரத்துறை – 1912 இதை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க

மருதமலை முருகனை தரிசிக்க பலமுறை நாம் சென்றிருப்போம். ஆனால் மலையேறும் வழியில் ஒரு ரகசியம் இருப்பது உங்களுக்கு தெரியுமா. ஆம், மலையில் 18ம் படியை கடந்தால் மலைச்சாரலில் 3 கற்கள் மாறுபட்ட நிறத்தில் இருக்கும். அந்த 3 கற்களும் 3 திருடர்களாம். மருதமலையில் உண்டியலை திருடி சென்றபோது, அவர்களை பிடித்த முருகன், ‘ நீவிர் கற்சிலைகளாக கடவீர்’ என சபித்தாராம். இதனால் அந்த திருடர்கள் சிலையானார்களாம். (SHARE)

டிஜிட்டல் யுகத்தில் UPI பரிவர்த்தனை பிரபலமாக உள்ளது. தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், G-Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். (SHARE பண்ணுங்க)

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவை– சென்னை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி ஜன-11, 18 தேதிகளில் கோவையிலிருந்து சென்னைக்கும், ஜன-12, 19 தேதிகளில் சென்னையிலிருந்து கோவைக்கும் ரயில்கள் இயக்கப்படுகிறது. மேலும் போத்தனூர்–சென்னை, சென்னை–போத்தனூர், மங்களூரு–சென்னை, செங்கோட்டை–போத்தனூர் வழித்தடங்களிலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

1) மனித உரிமைகள் ஆணையம் -044- 22410377
2) போக்குவரத்து அத்துமீறல் – 9383337639
3) போலீஸ் மீது ஊழல் புகார் அளிக்க – 9840983832
4) குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5) முதியோருக்கான அவசர உதவி -1253
6) தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7) நுகர்வோர் எண்- 180011400
8) ரத்த வங்கி – 1910
9) கண் வங்கி -1919
10) விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989
இத்தகவலை SHARE பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.