Coimbatore

News January 9, 2026

கோவை அருகே சோக சம்பவம்!

image

கோவை துடியலூர் பகுதியை சேர்ந்தவர் விஜயலட்சுமி (67). இவர் சக்கரை நோயால் பாதிக்கப்பட்டு, கடந்த சில நாட்களாகவே அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த நிலையில், நேற்று முந்தினம் வாழ்க்கையில் விரக்தி அடைந்து, விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். பின்னர் இது குறித்து துடியலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 8, 2026

ரூ.12 கோடி மதிப்பிலான ரிசர்வ் சைட் மீட்பு

image

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட 52-வது வார்டு பீளமேடு புதூர் பகுதியில் ரூ.12 கோடி மதிப்பிலான மாநகராட்சிக்கு சொந்தமான ரிசர்வ் சைட் கடந்த 2005 ஆம் ஆண்டு குடியிருப்புகளாக மாற்றி கிரையம் செய்யப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து கமிஷனர் சிவகுரு பிரபாகரன் உத்தரவின் பேரில் நேற்று ஆக்கிரமிக்கப்பட்டு இருந்த இடம் மீட்கப்பட்டது.

News January 8, 2026

கோவை: இழந்த பணத்தை திரும்ப பெற வேண்டுமா?

image

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

News January 8, 2026

கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (08.01.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். (அ) 100ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News January 8, 2026

கோவை மக்களே: இத தெரிஞ்சு வச்சுக்கோங்க!

image

1).கோவை மாவட்ட கட்டுப்பாட்டு அறை 1077. 2).மாவட்ட ஆட்சியர் 0422-2301114. 3).மாநகர காவல் ஆணையர் 0422-2300250. 4).மாவட்ட காவல் கண்காணிப்பாளர் 0422-2300600. 5).விபத்து அவசர வாகன உதவி 102. 6).குழந்தைகள் பாதுகாப்பு 1098. 7).பெண்கள் உதவி எண் 181. 8).முதியோர்கள் உதவி எண் 14567. 9).பேரிடர் கால உதவி 1077. 10).சைபர் க்ரைம் உதவி எண்1930. 11). இரத்த வங்கி சேவை 1910. மிக முக்கிய எண்களான இவற்றை SHARE பண்ணுங்க!

News January 8, 2026

கோவை: ரயில்வே வேலை.. விண்ணப்பிப்பது எப்படி?

image

இந்தியன் ரயில்வேயில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு 12th, டிப்ளமோ, டிகிரி முடித்த 18-35 வயது உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.44,000 வரை வழங்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க <>இங்கு கிளிக் <<>>செய்யவும். விண்ணப்பிக்க ஜன.29-ம் தேதி கடைசி ஆகும். (ரயில்வே வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க)

News January 8, 2026

கோவை: EXAM இல்லை.. POST OFFICE-ல் வேலை

image

கோவை மக்களே, இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். விருப்பமுள்ளவர்கள் வரும் ஜன.15-க்கு பிறகு இங்கு <>கிளிக் செய்து<<>>, விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

News January 8, 2026

கோவை: போதை இளைஞர் அலப்பறை! அதிரடி ஆக்‌ஷன்

image

கோவை, பீளமேட்டில் நேற்று முன்தினம் கார் மீது ஏறி சிகரெட் பிடித்து ரகளை செய்த கேரளாவைச் சேர்ந்த அந்தோணி மீது போலீசார் 5 பிரிவுகளின் கீழ் தற்போது வழக்கு பதிவு செய்துள்ளனர். பின்னர் சப்-இன்ஸ்பெக்டரிடம் தவறாக பேசியதாகவும், பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததாகவும் பீளமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

News January 8, 2026

கோவை: B.E, B.tech, MBA, M.sc முடித்தவர்களா நீங்கள்?

image

கோவை மக்களே, தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வு வாரியத்தில் (TNPSC) 76 உதவி மேலாளர், கணக்கு அலுவலர் போன்ற காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு B.E/B.tech, B.L./L.L.B, MBA, M.sc, CA/ICWA முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் சம்பளம் ₹20,600 – ₹65,500 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ஜன.20ம் தேதிக்குள் <>இங்கே கிளிக்<<>> செய்து பதிவு செய்யுங்கள். (SHARE

News January 8, 2026

பொங்கல் பரிசு: கோவை கலெக்டர் அறிவிப்பு

image

பொங்கல் பண்டிகை முன்னிட்டு பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ.3000 ரொக்கப்பணம் வழங்கும் நிகழ்வை இன்று சென்னையில் முதல்வர் ஸ்டாலின் துவங்கி வைக்க உள்ளார். அதனை தொடர்ந்து கோவையில் வடகோவை சிந்தாமணி கூட்டுறவு அங்காடியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கோவை கலெக்டர் பவன்குமார், எம்.பி கணபதி ராஜ்குமார், மேயர் ரங்கநாயகி, கமிஷனர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் துவக்கி வைக்க உள்ளதாக கலெக்டர் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!