Coimbatore

News March 16, 2024

அரசியல் கட்சியினரின் சுவரில் வரையப்பட்ட சின்னங்கள் அழிப்பு

image

தமிழகத்தில் வரும் ஏப்.19ஆம் தேதி மக்களவை தேர்தல் ஒரே கட்டமாக நடத்தப்பட உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் வரும் மார்ச்.20 ஆம் தேதி துவங்குகிறது. இதனையடுத்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது. கோவையில் பொது இடங்களில் உள்ள தலைவர்களின் சிலைகள், அரசியல் கட்சியினரின் சுவர் விளம்பரங்கள் தேர்தல் நடத்தை விதிமுறைகளின் கீழ் உடனடியாக அழிக்கப்பட்டு வருகின்றன.

News March 16, 2024

கோவையில் அமலுக்கு வந்தது தேர்தல் நடத்தை விதிகள்

image

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல்.19ஆம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோவையில் தேர்தல் நடத்தை பணிகள் இன்று துவங்கியுள்ளன. அதன்படி, கோவை கலெக்டர் அலுவலகத்தில் போட்டோ கேலரியில் உள்ள முதல்வர் படங்கள் அகற்றப்பட்டன. கோவையில் அனைத்து அரசியல் கட்சியினர் சுவர் விளம்பரங்கள் மீது வெள்ளை பெயிண்ட் அடிக்கப்பட்டது. மேலும், தேர்தல் வாகனங்களில் கேமரா, ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டு வருகிறது.

News March 16, 2024

கோவை மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணியிடங்கள்

image

கோவை மாவட்டத்தில் காலியாக உள்ள 61 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புமாறு மாவட்ட ஆட்சியருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ₹11,100 – ₹35,100 ஊதியம் வழங்கப்பட உள்ளது. இதற்கு வயது வரம்பு: 21-37 . கல்வித்தகுதி: குறைந்தபட்சம் 5ஆம் வகுப்பு தேர்ச்சி. கூடுதல் விவரங்களுக்கு, www.tn.gov.in-இல் அவ்வப்போது பார்வையிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News March 16, 2024

சென்னை-கோவை இடையே கூடுதல் விமான சேவை

image

சென்னை-கோவை இடையே புதிய இரண்டு விமான சேவைகள் இயக்கப்பட உள்ளதாக இண்டிகோ நிறுவனம் இன்று அறிவித்துள்ளது. அதன்படி, சென்னையில் இருந்து இரவு 9 மணிக்கும், கோவையில் இருந்து காலை 6:30 மணிக்கும் விமான சேவை வரும் 31ம் தேதி முதல் தொடங்க உள்ளதாக இண்டிகோ நிறுவனம் இன்று (மார்ச்.16) அறிவித்துள்ளது. இது பயணிகளிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

error: Content is protected !!